இ.ஒ.கே-3: உலகத்தின் மிக வேகமான மிருகம் எது?

Posted on திசெம்பர் 27, 2009

9


சில மிருகங்களோட வேகத்திறனைப் பார்த்தா, பேசாம மிருகங்களுக்கு எல்லாம் ஒரு ஒலிம்பிக்ஸ் போட்டி வச்சா கூட நல்லாத்தான் இருக்கும்னு தோனுது!

என்ன தீடீர்னு மிருகங்களுக்கு ஒலிம்பிக்ஸ் வைக்கனும்னு சொல்றானேன்னு பார்க்குறீங்களா? ஆமாங்க, மனுஷங்களுக்கு வச்ச ஒலிம்பிக்ஸ்ல மிக வேகமான மனிதர் அப்படீங்கிற பட்டத்தை வாங்கினவரு மைக்கேல் ஜான்சன். அவரோட அதிகபட்ச வேகம் மணிக்கு 23 மைல்கள்!

“இதெல்லாம் ஒரு வேகமா, எங்களுக்கெல்லாம் இது ஜுஜூபி” அப்படீங்கிற மாதிரி இருக்கு சில மிருகங்களோட வேகத்திறன். அதப்பத்தின பதிவுதான் இன்றைய இன்று ஒரு கேள்வியில்!

கேள்வி: நிலத்தில் மிக வேகமான விலங்கு எது?

பதில்: சிறுத்தை. ஒரு சிறுத்தையின் அதிகபட்ச  வேகம் மணிக்கு சுமார் 70 மைல்கள்!

கேள்வி: மிக வேகமாக பறக்கக்கூடிய பறவை எது?

பதில்: பெரிக்ரென் ஃபேல்கான் (Peregrine falcon). பருந்து போன்ற இந்தப் பறவை தன் இறையைப் பிடிக்கும்போது, மணிக்கு  சுமார் 55-270 மைல்கள்!

கேள்வி: தண்ணீரில் மிக வேகமான விலங்கு எது?

பதில்: செய்ல் ஃபிஷ் (Sail fish) என்னும் ஒரு மீனின் வேகம் மணிக்கு 68 மைல்கள்!

விலங்குகளுக்கான ஒலிம்பிக்ஸ் வச்சா கண்டிப்பா  நெறைய தங்க பதக்கம் வாங்குறவங்க இவங்க மூனு பேராத்தான் இருப்பாங்க…..இல்லீங்களா? இவங்கள விட வேகமானவங்க யாரையாவது உங்களுக்கு தெரியுமா?

Advertisements
குறிச்சொற்கள்: , , , ,