இ.ஒ.கே-2: நாம் ஏன் இறந்து போகிறோம்?

Posted on திசெம்பர் 25, 2009

6


பொதுவா, “மனுஷன் ஏன் இறந்து போறான்”னு யாரையாவது கேட்டா உடனே அவங்க, “மனிதனுக்கு பிறப்பு எப்படியோ அப்படித்தான் இறப்பும்”, அப்படீன்னு ஒரு பதிலைச் சொல்லுவாங்கங்கிறது உறுதி. ஆனால் இந்த பதில் மிக மேலோட்டமான ஒன்று.

இந்தக் கேள்விக்கான பதிலை மூலக்கூறு உயிரியல் ரீதியாக சொன்னால் இறப்புக்கான காரணத்தை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள முடியும். அதைத்தான் நாம் இன்றைய இன்று ஒரு கேள்வி பதிவில் பார்க்கப் போகிறோம்!

கேள்வி: நாம் ஏன் இறந்து போகிறோம்?

பதில்: இயற்க்கையான இறப்பானது, நம் உடலின் அனுக்கள் (செல்கள்) எல்லாம் இறந்து போவதால் ஏற்படும்!

விளக்கம்: ஒவ்வொரு நாளும், நம் உடலின் கோடிக்கணக்கான செல்கள் (தங்கள் வேலை முடிந்த பின்) இறந்துவிடுவதும் இயற்க்கை செல் அழிவு (படம்:NLM,USA)பின் புதிய செல்கள் பிறப்பதும் இயற்க்கை. வயதான செல்களால்தான் நமக்கு முதிர்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இருக்கும் க்ரோமோசோம்களின் நுனிப்பாகமான டீலோமியர் எனப்படும் மூடிகளில் உள்ள மரபனுத் தகவல்கள், ஒவ்வொரு செல் வளர்ச்சியின்போதும் (செல் டிவிஷன்) கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும் (இது தொடர்பான ஒரு பதிவு இங்கே)

ஒரு கட்டம்வரை டீலோமியர் பகுதியின் மரபனுத் தகவல் குறைவினால் எந்த பாதிப்பும் இல்லையெனினும் அதன்பின்னர் தகவ்ல் இழப்பு உடலுக்கு கெடுதலே! அதே போன்று உடலின் பல செயல்களில் ஒன்றான இயற்க்கை செல் அழிவு (Apoptosis/Programmed cell death) முறையில் தவறான மாற்றங்கள் ஏற்பட்டு அது புற்றுநோய், அல்ஷெய்மெர்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன!

இயற்க்கை செல் அழிவு பத்தின இந்த அழகான காணொளியப் பாருங்க, உடலின் செல் வளர்ச்சியின் சுழற்ச்சி உங்களுக்கே நல்லாப் புரியும்….

இது ஒருபுறமிருக்க, அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்து வரும் கதிவீச்சினாலும் உடலின் செல்கள் முதிர்ச்சியடைகின்றன. இவை எல்லாம் இருந்தபோதும் கவலை வேண்டாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஏன்?

சில பூச்சிகள்,புழுக்கள் மற்றும் எலிகளின் வாழ் நாளை மரபனு பொறியியல் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் கூட்டியுள்ள விஞ்ஞானிகள், சில ஆய்வு முடிவுகளின் படி மனிதன்கூட ஒரு நாள் கிட்டத்தட்ட 140 வருடங்கள் வாழ்வதற்க்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்கின்றனர்!

என்னங்க, “60 வருஷம் வாழும்போதே சில பேரோட அலப்பறைத் தாங்கள…..இதுல 140 வருஷம் வரைக்கும் வாழ்வதற்க்கான வாய்ப்பு வேற இருக்குன்னா இவனுங்க ரவுசப் பத்தி கேக்கவே வேணாம்” அப்படீன்னு உங்கள்ல சில பேர் சொல்றது கேக்குது! ஒன்னும் சொல்றதுக்கில்லீங்க….!?

Advertisements
குறிச்சொற்கள்: , ,