இ.ஒ.கே-1: தொடுவானம் எவ்வளவு தூரம்?

Posted on திசெம்பர் 23, 2009

10


நாம நெறைய சுவாரசியமான விஷயங்கள படிக்கிறோம். ஆனா பாருங்க, நமக்கு சுவாரசியமா இருக்குற எல்லா விஷயங்களும் மத்தவங்களுக்கும் சுவாரசியமா இருக்குறது இல்ல. இந்த இயற்க்கை நியதிக்கு பல விதிவிலக்குகளும் உண்டு அதே இயற்க்கையில்!

என்னங்க….ஒரே குழப்பமா இருக்கா? ஒன்னுமில்லீங்க, வெறும் ஆய்வுச்செய்திகளையே எழுதி வலைப்பக்கத்துக்கு வர்ற  வாசகர்கள (அதாங்க, உங்கள எல்லாரையும்!) ரம்பம் போடாம எதாவது சுவாரசியமா எழுதனும்னு யோசிச்சா….கற்பனையில லிஸ்ட் பெருசா வந்தாலும், அதுல நமக்கு ஒழுங்கா வர்ரதுன்னு பார்த்தா சொல்லிக்கிற (எழுதுற?) மாதிரி எதுவும் சிக்கல! (கஷ்டகாலம்?!)

அதுக்காக அப்படியே விட்ற முடியுமா? உடனே நீங்க….ஆஹா அப்படீன்னா எங்கள ஒரு வழி பண்றதுன்னு முடிவு பண்ணிட்டியான்னு பயப்படாதீங்க. முதல் வரியில சொன்ன மாதிரி எனக்கும், உங்களுக்கும் சுவாரசியமா இருக்குற மாதிரி இருக்கிற பல விஷயங்கள “இன்று ஒரு கேள்வி“ன்னு ஒரு கேள்வி-பதில் பகுதியில தினம் ஒரு பதிவா தொகுக்கலாமுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

அதுக்காக இனிமே அறிவியல் செய்திகள் எல்லாம் இல்லையான்னு கேக்காதீங்க. எனக்கு நல்லா வர்ற ஒரே விஷயம்(?) அறிவியல்தான்னு நான் ரொம்ப நாளா (இதுவரைக்கும்) நெனச்சுகிட்டு இருக்கேன். அத அப்பப்போ நம்ம வலைப்பதிவுல வர்ற சில மறுமொழிகள்லேயும் பார்க்குறேன். அதனால ஆள விடு சாமின்னு நீங்க கெளம்பினாலும் உங்கள விடற மாதிரி இல்ல. என் கடன் அறிவியல் பதிவெழுதி கிடப்பதேன்னு நான் எழுதிக்கிட்டே  இருக்கிறேன், நீங்களும் படிச்சுகிட்டே இருங்க.சரிங்களா?

இப்போ நாம மேட்டருக்கு வருவோம். மேலிருப்பானின் முதல் இன்று ஒரு கேள்வியில  நாம பார்க்கப் போறது….

இன்று ஒரு கேள்வி-1:

தொடுவானம் எவ்வளவு தூரத்தில் இருக்கு?

விடை: இந்த கேள்விக்கு அறிவியல்ரீதியிலான பதில் “தொடுவானத்தை பார்ப்பவரின் உயரத்தைப் பொருத்ததுதான்  தொடுவானத்தின் தூரமும்”. [picapp align=”right” wrap=”false” link=”term=horizon&iid=6787089″ src=”c/0/3/9/Autumn_Colours_Throughout_e2f0.jpg?adImageId=8520913&imageId=6787089″ width=”234″ height=”149″ /]

விளக்கம்: உதாரணத்துக்கு, நீங்க இமயமலை சிகரத்தின் உச்சியில் (சுமார் 29,029 அடிகள்/8848 மீ) நின்று தொடுவானத்தைப் பார்த்தால் அது 230 மைல்கள்/370 கி.மீ தொலைவில் தெரியுமாம்!அல்லது குத்துமதிப்பாகச் சொல்வதானால் ஒரு ஆறடி உயரமுள்ள மனிதருக்கு 3 மைல்கள்/5 கி.மீ தொலைவில்.

தொடுவானம் அப்படீங்கிறது என்ன?

நம் கண்களுக்கு எட்டிய தூரத்தில், பூமியின் வளைவு தொடங்கும் இடம் (வரையிலான நம் பார்வை!).

நான் படிச்ச (எனக்கு தெரிஞ்ச) வரைக்கும் தொடுவானத்தின் தூரமும் அதற்க்கான விளக்கமும் இதுதான். இது தப்புன்னா…சரியான விளக்கத்த நீங்க சொல்லுங்க!

Advertisements
குறிச்சொற்கள்: , ,