தினமும் 100 மி.கி உடற்பயிற்ச்சி?!

Posted on திசெம்பர் 22, 2009

4


உடற்பயிற்ச்சி=மாத்திரை?!

தலைப்பைப் படிச்ச உங்கள்ல சில பேர் நினைக்கலாம். இப்பெல்லாம் வலைப்பதிவுங்கிற பேர்ல என்னத்தத்தான் எழுதுறது, எப்படித்தான் தலைப்பு வைக்கிறதுன்னு ஒரு வரைமுறையே இல்லாமப் போச்சு. என்னது இது…..தலையும் புரியாம, வாலும் புரியாம ஒரு தலைப்பு?

அப்படி நெனைச்சவங்களுக்கும், நெனைக்காதவங்களுக்கும் சேர்த்து ஒரு சின்ன விளக்கம் (தலைப்புக்குத்தாங்க!). அதாவது, உடற்பயிற்ச்சிங்கிறது இளம்வயதுக்காரங்க கட்டுமஸ்தான உடலமைப்பை ஏற்படுத்திக்கிறதுக்கும், ஆரோக்கியமான உடல்நிலையை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்க்குமே அப்படீங்கிற மனோபாவத்தைத்தான் ஏற்படுத்தியிருந்தது மக்களிடம் இதுவரையில்!

ஆனால் உடற்பயிற்ச்சியின் பலன்கள் மேற்சொன்ன இரண்டு விஷயங்களுக்குள் அடங்குவதில்லைன்னு நிரூபிக்கின்றன ஆய்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக! அதனால, உடற்பயிற்ச்சி வெறும் கவர்ச்சிக்காக அல்ல. மாறாக, பல்வேறு நோய்களை குணப்படுத்திக்கொள்ள நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைப் (மருந்து வகைகள்) போன்றதுதான் உடற்பயிற்ச்சி அப்படீங்கிற ஒரு புது கருத்தைச்(?) சொல்வதற்க்குத்தான் இந்த தலைப்பு! (இதுக்கா இந்த பில்டப்பு….?! வலையுலகத்துல தொடர்ந்து குப்பக் கொட்டனும்னா எப்படியெல்லாம் தில்லுமுல்லு பண்ண வேண்டியிருக்குப் பாருங்க……அவ்வ்வ்வ்வ்!)

சரி விடுங்க, அது ஒரு சப்ப மேட்டரு! நாம விஷயத்துக்கு வருவோம். நான் என்னோட முந்தைய உடற்பயிற்ச்சி பத்தின ஒரு பதிவுல (பதிவைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்) சொல்லியிருந்தது மாதிரி உடற்பயிற்ச்சி பற்றிய பல சுவாரசியமான செய்திகளத்தான் நாம இந்த பதிவுல பார்க்கப் போறோம்!

என்னதான் நாம, கையில காப்பியோட காலங்காத்தால நம்மள அன்போட எழுப்புற அம்மாவ “ஏம்மா காலங்காத்தாலே காப்பியோட வந்து இம்ச பண்ற, கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடும்மா”ன்னு காபி குடிக்கிறதுக்கே ரொம்ப அலுத்துக்கிட்டு, காப்பிய மடக்…மடக்னு குடிச்சிட்டு, பள்ளிக்கூடத்துக்கு/வேலைக்குப் போக கெளம்புறதுக்கு முன்னாடி எப்படியாவது இன்னொரு குட்டித்தூக்கத்தப் போட்ருவோம்னு முயற்ச்சி பண்ணாலும் உண்மை என்னன்னா, ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது கொஞ்சம் உடற்பயிற்ச்சி செய்யலைன்னா வாழ்க்கையில பல நாட்களை/வருடங்களை பல்வேறு நோய்களிடம்  நமக்கேத் தெரியாம இழந்துக்கிட்டு இருக்கோம்னு சொல்கின்றன சமீபத்திய சில ஆய்வுகள்!

என்னங்க அதிர்ச்சியா இருக்குதா இல்ல ஆச்சரியமா இருக்குதா? எப்படி இருந்தாலும் உடற்பயிற்ச்சி செய்யாததுனால நாம வாழ்க்கையில நெறைய இழக்கிறோம்ங்கிறது உண்மைதான். வாங்க எப்படின்னு பார்ப்போம்….

சமீபத்திய சில ஆய்வுகளின் கூற்றுப்படி, உடற்பயிற்ச்சி செய்றதுனால….

1. வயதானவர்களின் மூளையின் இயக்கங்கள் மேம்படுகிறதாம்

2. குழந்தைகளின் கற்கும் திறன் அதிகரிக்கப்படுகிறதாம்

3. இடைப்பட்ட வயதினருக்கு மூளையின் செயல்வேகத்திறன்  அதிகரிக்கிறதாம்

அதுமட்டுமில்லாம……

வலுவான எலும்புகளைக் கொடுக்கும் உடற்பயிற்ச்சி!

சமீபத்திய ஒரு ஆய்வு முடிவின்படி, உடற்பயிற்ச்சி செய்வதால் “ஆஸ்டியோபோரோசிஸ்” என்னும் எலும்புருக்கி(?) நோய் கட்டுப்படுத்த/தவிர்க்கப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நோயினால் உலகளவில் சுமார் 2 கோடிப்பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது! அமெரிக்காவின் மிஸ்ஸூரி பல்கலைக்கழக ஆய்வாளர்களின்  ஆய்வுக்கூற்றுப்படி, பலுதூக்கும் அல்லது நீண்ட தூரம் ஓடுவது போன்ற உடற்பயிற்ச்சிகளினால் உடலின் எலும்புத்தாது  (Bone mineral density, BMD) அதிகரிக்கிறதாம்!

முதுகு வலியைக் குறைக்கும் உடற்பயிற்ச்சி!

மற்றுமொரு ஆய்வில், முதுகு வலியால் தவிப்பவர்களுக்கு ஒரு தீர்வாக உடற்பயிற்ச்சி இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.  வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய 20 க்ளினிகள் ட்ரையல்களில் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்கள்! பல்வேறு வகையான பாரம்பரிய சிகிச்சை பலனிக்காத பட்சத்தில் உடற்பயிற்ச்சி ஒரு சிறந்த தீர்வாக் உள்ளது என்கிறார் விஞ்ஞானி ஸ்டான்லி.ஜெ.போகோஸ்.

கண்புறை (Cataract) நோயிலிருந்து காக்கும் உடற்பயிற்ச்சி!

கடுமையான உடற்பயிற்ச்சி செய்தால் கண்புறை நோய் (Cataract) மற்றும் முதுமையில் ஏற்படும் பார்வைக் கோளாறுகள் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறையும்  என்றும் கண்டறிந்துள்ளனர். கலிஃபோர்னியாவின் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வுகூடத்தில், சுமார் 41,000 ஓட்டப் பந்தய வீரர்களில் (ஆண்களும் பெண்களும்), 7 வருடங்களாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இதனை கண்டறுந்துள்ளதாக கூறுகிறார் ஆய்வாளர் பால் வில்லியம்ஸ் அவர்கள்!

புற்றுநோயிலிருந்து காக்கும் உடற்பயிற்ச்சி!

உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை. தினமும் பல ஆய்வறிக்கைகளை என் ஆய்வுகளுக்காக படிக்கும் எனக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக தோன்றிய விஷயம் இதுதான். அதாங்க, உடற்பயிற்ச்சி செய்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் எனும் ஒரு ஆய்வுச்செய்தி! அதாவது, வாஷிங்டன் மற்றும் ஹார்வர்டு பலகலைக்கழகத்தில் கடந்த 25 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட, புற்றுநோய் மற்றும் உடற்பயிற்ச்சியின் தொடர்பினை பற்றிய சுமார் 52 ஆய்வுகளை பரிசீலனை செய்ததில், ஒரு வாரத்திற்கு 5-6 மணி நேரம் உடற்பயிற்ச்சி (வேகமான நடை) செய்தவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு, வெறும் 30 நிமிடம் உடற்பயிற்ச்சி செய்தவர்களை விட சுமார் 24%  குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது என்கிறார் ஆய்வை மேற்கொண்ட திரு.கேத்லீன்!

ஆக, உடற்பயிற்ச்சி என்பது வெறும் மேம்போக்கான உடல் ஆரோக்கியத்திற்க்கும், பெண்களைக் கவரும் கட்டுமஸ்தான (அதாங்க சிக்ஸ் பேக்கு!) உடலுக்கும் மட்டுமே அல்ல அப்படீன்னு நான் நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்…….நீங்க?

Advertisements
குறிச்சொற்கள்: , , , ,