உங்களின் “மரபனுப்புத்தகம்” வாங்கிவிட்டீர்களா?!

Posted on திசெம்பர் 19, 2009

0


பதிவுத் தலைப்பைப் படிச்சிட்டு என்னது….மரபனுப்புத்தகமா? சமீபத்துல நடந்த புத்தகக் கண்காட்சியிலகூட இந்த தலைப்புல எதும் புத்தகம் பார்த்தமாதிரி நியாபகம் இல்லியே! ஒரு வேலை நாம கவனிக்காம விட்டுட்டோமோ?! யாரு எழுதினதா இருக்கும்…..சுஜாதா? பாலகுமாரன்? (நமக்கும் புத்தகங்களுக்கும் ரொம்ப தூரமுங்க!)

இப்படியெல்லாம் மனதைப்போட்டு குழப்பிக்கொள்ளும் வாசக நண்பர்களே அமைதி….அமைதி! இந்த தலைப்புல இதுவரைக்கும் ஒரு புத்தகமும் வரலை. இனிமேலும் வராது! ஏய்…..என்னப்பா நக்கலா? எப்படி தெரியுது எங்களையெல்லாம் பார்த்தா?! அப்படின்னு உடனே கோபப்படாதீங்க!

வாங்க, முதல்ல மரபனுப்புத்தகம்னா என்னன்னு பார்ப்போம்…..

மரபனுப்புத்தகம்/வாழ்க்கைப்புத்தகம்!

மரபனுப்புத்தகம்னா வேற ஒன்னுமில்லீங்க. நம்மளோட ஒவ்வொரு செல்லிலும் சுருண்டிருக்கிற க்ரோமோசோம் முடிச்சுகளுக்குள் (கிட்டத்தட்ட) 30,000 மரபனுக்கள் (அதாங்க ஜீன்ஸ்!) இருக்கு! அந்த முப்பதாயிரம் மரபனுக்கள் ஒவ்வொன்னுக்கும் ஒரு பண்பு இருக்கு. அதாங்க, உடலின் இயக்கத்திற்கான ஒரு செயல்பாடுகள்.

ஜீனோம் சீக்குவென்சிங் (Genome sequencing) அப்படீங்கிற உயிற்தொழில்னுட்பவியல் தொழில்னிட்பம் மூலமா நம்மளோட 30,000 மரபனுக்களோட பண்பு நலன்களையெல்லாம் கண்டறிந்து ஒரு மருத்துவக் கோப்பா நம்ம கையில கொடுக்கறாங்க சில உயிர்தொழில்னுட்ப நிறுவனங்கள். அந்த மருத்துவக் கோப்புக்குப் பேருதான் மரபனுப்புத்தகம்/வாழ்க்கைப்புத்தகம் ! (Book of life)

இந்த புத்தகத்துல என்ன இருக்கு?

நம் மரபனுப்புத்தகத்துலதான் நம்ம உடல்நலன் பத்தின எல்லா உண்மை/ரகசியங்களும் இருக்கு! அதாவது, நமக்கு என்ன நோய்கள் இருக்குன்றதுல ஆரம்பிச்சி, எதிர்காலத்துல என்னென்ன நோய்கள் வரும்/வரலாம், எந்த வயசுல வரும்…..இப்படி இன்னும் நெறைய விடைதெரியா கேள்விகள்/ரகசியங்களுக்கான பதில் இந்த மரபனுப்புத்தகத்துலதான் இருக்கு! இன்னும் விரிவான விளக்கத்துக்கு கீழே இருக்குற காணொளியப் பாருங்க…..

மரபனுப்புத்தகத்துனால நமக்கு என்ன பயன்?

உங்க மரபனுப்புத்தகம் உங்க கையில இருந்ததுன்னா,

மரபனுப்புத்தக அட்டை?!

1.உங்களுக்கு எதிர்காலத்துல வரப்போற நோய்கள் வராம தடுக்க போதிய கவனத்தோடு வாழ்க்கை முறையை செம்மைப் படுத்திக்கலாம் (அதாங்க, வருமுன் காப்போம்!)

2. தவிர்க்கவே முடியாத நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, அந்த நோய்கள்னால வரப்போற பாதிப்புகளை தவிர்க்கலாம்/குறைத்துக்கொள்ளலாம்

3. உங்க மருத்துவரும் நீங்களும் சேர்ந்து உங்களுக்கு இருக்குற நோய்களுக்கான சிறந்த சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்கலாம்

4. பாரம்பரிய நோய்களுக்கான சிறந்த சிகிச்சை முறைகளை பின்பற்றி அந்த நோய்கள்லயிருந்து உடல் நலனை பாதுகாத்துக்கொள்ளலாம்

இப்படி இன்னும் நெறைய சவுகரியங்கள் இருக்கு நம்ம மரபனுப்புத்தகத்துல! இது எப்போலேர்ந்து…..சொல்லவே இல்ல?!

மரபனுப்புத்தகத்தின் விலை என்ன?

இதுதாங்க இந்த பதிவோட முக்கியமான செய்தியே! அதாவது, ஒரு மருத்துவ ஆய்வளவுல தொடங்கப்பட்ட இந்த மரபனுப்புத்தக ஆய்வு இப்போ ஒரு வியாபாரமா ஆகிப்போச்சு?!

மரபனுப்புத்தகத்தோட விலையைப் பத்தி சொல்லனும்னா ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் சொல்லியாகனும். அதாவது, முதல் மரபனுப்புத்தக ஆய்வு (Human genome sequencing) நடத்த கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்களும், சுமார் 10 வருடங்களும் ஆனது!

ஆனா, இப்பொ நெலமை தலைகீழ். தொழில்னுட்ப முன்னேற்றங்களின் அதீத வளர்ச்சியினால 10 வருடம் வெறும்  ஒரு வாரமாகவும், 2 பில்லியன் டாலர் வெறும் 48,000 டாலராகவும் குறைந்து போனது! இத விட இன்னும் சுவாரசியமான/சந்தோஷமான விஷயம் என்னன்னா இந்த 48,000 டாலரும் இன்னும் வெகுவா குறைவதற்கான வாய்ப்பு நெறைய இருக்குதாம் சமீபத்திய ஒரு ஆய்வுச் செய்திப்படி!

என்னங்க, ஹ…..வெறும் 48,000 டாலர்தான! இதெல்லாம் நமக்கு ஜுஜுபின்றீங்களா? அப்படி நீங்க நெனச்சி உங்க மரபனுப்புத்தகத்தை வாங்கப் போனீங்கன்னாலும் அதுல பல சிக்கல்கள் இருக்கு! இது என்னடா வம்பாப் போச்சு….அது என்ன சிக்கலுப்பா அப்படீங்கிறீங்களா?

ஒன்னு இல்ல…ரெண்டு இல்லீங்க! ஒரு டஜன் சிக்கல் இருக்குதாம் இந்த மரபனுப்புத்தகத்துல! அது என்னன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்குதா? அதுதான் நம்ம அடுத்த பதிவே…..அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா காத்திருங்க!

Advertisements