கூகுள் தெரியும்…..”ட்வூகுள்” தெரியுமா?

Posted on திசெம்பர் 15, 2009

4


ஆமா….உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா? அதாங்க, ஒரே கல்லுலஅஅஅஅ…..(இன்னும் இழுத்துகிட்டே போனா அதே கல்லால அடிச்சாலும் அடிச்சிருவீங்க?!) ரெண்டு மாங்கா! சரி…அதுக்கு என்ன இப்போன்னு கேக்குறீங்களா?

இனிமே நீங்க அந்த பழமொழிய இப்படிக்கூட மாத்திச் சொல்லலாம். “ஒரே இணையதளத்துல ரெண்டு இணையதளங்கள்” ! என்னங்க புரியலயா? எனக்கும் அப்படித்தான் முதல்ல படிக்கும்போது புரியல. சரி வாங்க அது என்னன்னு கொஞ்சம் விவரமாப் பார்ப்போம்.

செய்தி தலைப்பைப் படிச்சவுடனே உங்களுக்கு எதாவது பொறி தட்டுச்சா? அதாங்க, “ட்வூகுள்”னா என்னவா இருக்கும்னு யோசிக்கும்போது? சரி இப்பவே உங்களுக்கு கண்ணக் கட்டுதுன்னு நெனக்கிறேன். அதனால பீடிகையெல்லாம் வேணாம். நாம நேரா மேட்டருக்குப் போயிடலாம்.

கூகுள் அப்படிங்கிறது ஒரு தேடியந்திரம்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ட்வூகுள்ல “குள்”ன்னு ஒரு வார்த்தை?! இருக்கிறதுனால கூகுளுடன் சம்பந்தப்பட்ட ஒரு மென்பொருள்,இணையதளம் இப்படி எதாவது ஒன்னாதான் இருக்கனும் இந்த ட்வூகுள்னு உங்கள்ல சிலபேரு யூகிச்சிருப்பீங்க. சரியா?

"ட்வூகுள்" (Twoogle)

சரியாத்தான் யூகிச்சு இருக்கீங்க! ட்வூகுள் அப்படிங்கிறது கூகுளும் ட்விட்டரும் சேர்ந்த ஒரு கலவைன்னு சொல்லலாம். அதாவது, “கடவுள் பாதி…மிருகம் பாதி கலந்து செய்த கலவை” மாதிரின்னு வச்சுக்குங்களேன். ஆனா ஒரு வித்தியாசம் அங்கே உள்ளே கடவுள் வெளியே மிருகம் இல்லியா? இங்க அப்படி இல்ல. ரெண்டுமே வெளியிலதான்!

அதாவது, ட்வூகுள் அப்படிங்கிறது ஒரு புதிய இணையதளம். இங்கே நீங்க, ஒரே சமயத்துல கூகுளையும் ட்விட்டரையும் பயன்படுத்தலாம். ஒரு உதாரணத்துக்கு சொல்லனும்னா, உங்களுக்கு நம்ம கமலஹாசன் அவர்களைப் பத்தின சமீபத்திய செய்திகளை படிக்கனும்னா உடனே நீங்க என்ன பண்ணுவீங்க? கூகுள்ல தேடுவீங்க இல்லியா. அப்படித் தேடினா உங்களுக்கு பொதுவான செய்திகள் வரும். அதுவே நீங்க ட்வூகுள்ல தேடினீங்கன்னா, ஒரே இணையப் பக்கத்துல, கமல் பத்தின கூகுள் தகவல்கள்  வலது பக்கமும், ட்விட்டர் தகவல்கள் இடது பக்கமும்  வரும். அட….இங்க பாருய்யா…!!

ஆக, உங்கள் அபிமான கூகுளையும் ட்விட்டரையும், இனிமே நீங்க ஒரே இணையதளமா பயன்படுத்தலாம். இந்த கவர்ச்சிகரமான சேவையை முதலில் அறிமுகம் செஞ்சது “ப்ரௌவ்சிஸ்” (Browsys) அப்படிங்கிற  நிறுவனவனம்தான்!

இனிமே நீங்க இணையத்துல செய்திகளைத் தேட “கூகுளும்” பண்ணலாம் “ட்வூகுளும்” பண்ணலாம். எது உங்களுக்கு விருப்பமோ அதப் பண்ணுங்க…….நான் கெளம்புறேன் இப்போ. எங்கன்னு கேட்குறீங்களா? ம்ம்ம்ம்……ட்வூகுள் பண்ணத்தான்!

நீங்களும் ட்வூகுள் பண்ணனும்னா……இங்க போங்க

குறிச்சொற்கள்: , , , ,