கூகுளா? பிங்கா? சபாஷ் சரியான போட்டி!

Posted on திசெம்பர் 14, 2009

0


நீயா நானா? ஒரு கை பார்த்துடலாம் வர்ரியா…..ஐய்யய்யே உங்களை இல்லீங்க, கவலைப்படாதீங்க! சாதாரணமா ரெண்டு பேருக்குள்ள போட்டின்னாவே, யார் அதில ஜெயிக்கிறாங்க பார்க்கணும்னு ஒரு ஆர்வம் நம்மள தொற்றிக்கொள்ளும் இல்லையா?

நம்ம தெருவுல இருக்குற குப்பனுக்கும், பக்கத்துல தெருவுல இருக்குர சுப்பனுக்கும் போட்டின்னாவே இப்படின்னா…..நம்ம சினிமாவுல எடுத்துக்கிட்டா ஒரு எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், விக்ரம்-சூர்யா இவங்கள மாதிரி பெரிய தலைங்களுக்குள்ள போட்டின்னா எப்படி இருக்கும்? சும்மா தமிழ் நாடே அதிருமில்ல…..அப்படின்னு இவங்களோட ரசிகருங்க எல்லாம்  வந்துருவாங்க!

ஆனா பாருங்க…..இந்த பதிவுல நாம அவங்கள பத்தி பேசப்போறது இல்ல (பச்ச்ச்ச்ச்!). அப்புறம் யாரைப் பத்தி பேசப்போறோம்?

நம்ம சினிமா உலகத்துல ரஜினி-கமல் போட்டி எவ்வளவு சுவாரசியமோ அதைவிட ரொம்ப சுவாரசியமானதுதான் இணைய உலக ஜாம்பவான்கள் கூகுள்-மைக்ரொசாப்ட் நிறுவனங்களுக்கிடையிலான போட்டி!

சமீபகாலம் வரைக்கும் கணினி இயக்கி/செயலி (OS)-ல போட்டியே இல்லாம (ஒரு ஓரத்துல ஆப்பிளோட “லெப்பர்டு செயலி” போட்டி மாதிரி தெரிஞ்சாலும் சொல்லிக்கிற அளவுக்கு அது இல்லங்கிறதுனால நாம அத கணக்குல எடுத்துக்க வேணாம்!)  இருந்த மைக்ரோசாப்டின் விண்டோசுக்கு போட்டியா வந்ததுதான் கூகுளோட க்ரோம் செயலி! இது தொடர்பான மற்றுமொரு பதிவு இங்கே

இது போதாதுன்னு விண்டோசோட இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரருக்கும் போட்டியா கூகுள் க்ரோம் இணைய உலாவிய  அறிமுகப்படுத்துச்சி கூகுள்!  உடனே “வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலும் உண்டுன்னு” மவனே எனக்கே ஆப்பு வைக்கிறியா நீ அப்படின்னு மைக்ரோசாப்ட் கூகுளோட தேடியந்திரத்துக்கு போட்டியா “பிங்”ன்னு ஒரு தேடியந்திரத்த அறிமுகப்படுத்துச்சி!

மத்தது எதுக்குமே அசராத கூகுள் “பிங்” வந்ததுக்கப்புறம் கொஞ்சம் ஆடித்தான் போச்சு! காரணம் என்னன்னா கூகுளால முடியாத ஒரு விஷயத்த தேடியந்திரத்துல “பிங்” சாத்தியமாக்கினதுதான்.அது என்னன்னு கேக்குறீங்களா? அதாங்க இந்த பதிவோட முக்கிய செய்தியே!

பொதுவா நாம கூகுள்ல தேடும்போது, தேடல்களுக்கான முடிவுகள் பெரும்பாலும் பல மாதங்களுக்கு முந்தைய செய்திகளாகத்தான் இருக்குமாம். உதாரணத்துக்கு சொல்லனும்னா தலைப்புச் செய்திகள், வலைப்பதிவுகள், ட்விட்டரின் ட்வீட், ஃபேஸ்புக்கின் ஃபீட்ஸ் போன்றவை பல வாரங்களுக்கு முந்தையதாக இருக்குமே தவிர “சற்று முன் கிடைத்த செய்தின்னு” சொல்ல முடியாத ஒரு தகவலாதான் இருக்குமாம்.

ஆனா கூகுளோட இந்த தேடல் தகவல் காலதாமதத்த சரியா பயன்படுத்திக்கிட்ட பிங் தேடல் தொடர்பான தகவல்கள உடனுக்குடன் கொடுப்பதோடு “சுடச்சுட” கொடுக்க ஆரம்பித்தது. அதாவது, “ரியல் டைம் செர்ச் ரிசட்ஸ்”ன்னு ஆங்கிலத்துல சொல்லாம். உதாரணத்துக்கு சொல்லனும்னா பிங் தேடியந்திரத்துல நீங்க தேடுற ஒரு வலைப்பதிவுல, ஒரு நொடிக்கு முன்பு பதிவிடப்பட்ட ஒரு இடுகையுடன் வந்து நிக்குமாம் பிங்! இதுதான் கூகுள் வயித்துல புளியக் கரைச்சிருக்கு!

ஆனா நாங்க சிங்கமுல்ல…..அப்படின்னு வந்து நிக்குது கூகுள். ஆமாங்க, தேடலில் சில நொடிகளுக்கு முந்தைய செய்திகள், வலைப்பதிவுகள், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களுடன் வந்து நிற்கிறது கூகுள் பிங்கைப்போல, ஆனால் பல மடங்கு சுவாரசியமாய்! எப்புடீ…..?

பல மடங்கு சுவாரசியமாவா? அது எப்படின்னு கேட்டீங்கன்னா…..என்னதான் பிங் கூகுளுக்கு முன்னாடி ரியல் டைம் செர்ச்சை அறிமுகப்படுத்தினாலும் கூகுளோட தேடியந்திரத்துக்கு முன்னாடி அது வெறும் ஜுஜுபிதான்! ஏன்னா, இன்னைக்கு இணைய உலகத்தின் முதல்தர தேடியந்திரம்னா அது கூகுள் மட்டும்தான். காரணம் கூகுளினுடை தகவல் தேர்வின் நேர்த்தி!

ஆங்கிலத்துல “ரெலெவன்ஸி” அப்படின்னு  சொல்லுவாங்க. அதாவது, நீங்க ஒரு விஷயத்த தேடுறீங்கன்னா குத்து மதிப்பா நீங்க எழுதின எழுத்துக்களை (குறியீடுகள்) ஒத்த எல்லா செய்திகளையும் (அது உங்கள் தேடலுக்கு கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத குப்பையாக இருந்தாலும் கூட!) உங்களின் தேடல் முடிவுகளாக கொடுப்பவைதான் தேடியந்திரங்கள். தொடக்கத்தில் இப்படி இருந்த தேடியந்திர உலகினை முற்றிலும் மாற்றி, முதல் முறையாக சரியான தகவல்களை மட்டுமே தேடல் முடிவுகளாக நமக்கு முன் வைத்தது, இன்று இணையத் தேடல் உலக முடிசூடா மன்னனாகத் திகழும் கூகுள் மட்டும்தான்!

ஆமா நாம எப்படி இந்த சேவையை பயன்படுத்துறது? எல்லாத்தையும் சொல்லிட்டு அத சொல்லலைன்னா இந்த பதிவே ஒரு குப்பையாயிடும் இல்லையா? இனிமே நீங்க கூகுள்ல தேடும்போது, தேடல் பக்கத்துல “லேட்டஸ்ட் ரிசல்ட்ஸ் (Latest results)” அப்படிங்கிற பொத்தானை க்ளிக்கினீங்கன்னா உங்க தேடல் தொடர்பான “சற்றுமுன் கிடைத்த செய்தி” உங்க முன்னாடி வந்து நிக்கும்!

இந்த சேவையை பயன்படுத்த/சோதித்துப் பார்க்க இங்கு செல்லுங்கள் பின்னர், “Hot topic”-ல் க்ளிக் செய்து பாருங்கள். உங்கள் தேடலுக்கான “ரியல் டைம் செர்ச் ரிசல்ட்” வந்து நிற்கும்!

ஆக, தேடலில் தனக்கென்று ஒரு பாணியை வைத்திருக்கும் கூகுள், “ரியல் டைம் செர்ச்” என்னும் புதிய சக்கர வியூகத்துடன் தேடல் உலகில் புதிதாக களமிறங்கி உள்ளது. உங்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா…..

“கூகுள் கொஞ்சம் லேட்டா வந்தாலும் (ரியல் டை செர்சுல!) லேட்டஸ்டா வந்திருக்கு”

பொறுத்திருந்துதான் பார்க்கனும் எவ்வளவு லேட்டஸ்டா வரும்னு. இந்த செய்தி பத்தின பத்திரிக்கையாளர் சந்திப்புல, கூகுளிலிருந்து இன்னொரு “சுவாரசியமும்”?! அறிமுகமாகயிருக்குன்னு சொல்லியிருக்கார் கூகுளின் ஆய்வாளர்களில் ஒருவரான அமித் சிங்கால். அது என்ன….????

அடுத்த பதிவு அதுதான்…..அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்க!

Advertisements
குறிச்சொற்கள்: , , , , ,