உடலின் ஒவ்வொரு “செல்”லுக்குள்ளும் ஒரு அழகிய உலகம்!

Posted on திசெம்பர் 4, 2009

0


பரிணாமம் என்பது கிட்டத்தட்ட ஒரு மர்ம நாவல் மாதிரிதான். ஏன்னு கேட்டீங்கன்னா, எப்படி ஒரு மர்ம நாவல்ல ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு ஆச்சரியம் காத்திருப்பது சாத்தியமோ அப்படித்தான் பரிணாமத்தின் பக்கங்களும்!

பரிணாமத்தை முழுமையாப் படிக்கனும்னா,  நியாயமாப் பார்த்தா பல கோடி வருஷம் பின்னோக்கிப் போனாதான் முடியும். ஆனால் நம்ம எல்லாருக்கும் தெரியும் அப்படியெல்லாம் போக மனுஷனுக்கு வசதியில்ல!

ஆனா, அதுக்காக முடியாதுன்னு சொல்லி அப்படியே விட்ற முடியுமா? அதனாலதான் விஞ்ஞானிங்க  காலத்துல பின்னோக்கி போறதுக்கு பதிலா, பல கோடி வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்து இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்கிற/இறந்து இயற்கையால அறிவியல் புதையலா புதைந்து போயிருக்கிற பாக்டீரியா,மரம், மீன், விலங்குகள் மற்றும் ஆதிமனிதன் இப்படி எல்லாத்தையும் சேகரிச்சு படிக்க ஆரம்பிச்சாங்க.

ஆனால் விஞ்ஞான முன்னேற்றத்துக்கு எப்பொழுதுமே தடையாயிருக்கிறது தொழில்னுட்ப முன்னேற்றம். ஆக, சிறு சிறு தொழில்னுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட ஏற்பட கூடவே சிறு சிறு அறிவியல் முன்னேற்றங்களும் ஏற்பட்டது. அத்தகைய அறிவியல் முன்னேற்றங்கள் நமக்கு கொடுத்த பரிசுதான் உலகின் உயிர்களின் ஆதி முதல் இன்றுவரையிலான பரிணாம நிகழ்வுகளின் ஒரு அழகிய கலவையான மர்ம நாவல்!

ஒரு செல்லின் உள்ளே....

அது சரி, உலகத்துல உயிர்கள் எப்படி தோன்றின, முதன்முதலில் தோன்றிய “ஒரு செல் உயிரி” எப்படி படிப்படியாக முன்னேற்றமடைஞ்சு உலகின் தலையாய?! உயிரான மனிதன்வரை வளர்ச்சி அடைந்தன அப்படிங்கிற கதையை எல்லாம் ஒரு மர்ம நாவலா உங்க கையில கொடுத்தா ரொம்ப சந்தோஷப்படுவீங்களா இல்லைன்னா அதே மர்ம நாவல நம்ம ஜுராசிக் பார்க் புகழ் “ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்” பாணியில ஒரு படமா உங்க முன்னாடி திரையிட்டு காட்டினா ரொம்ப சந்தோஷப்படுவீங்களா?

எனக்குத் தெரிஞ்சவரைக்கும் நம்மில் பல பேருக்கு (எல்லோருக்குமே?!) எந்த ஒரு கதையையும்/மர்மத்தையும் திரைப்படமா பார்பதில்தான் ஒரு இனம் புரியாத சந்தோஷம்/கிக்கு இருக்குன்னு நெனக்கிறேன்.

சரி சரி, உங்கள்ல யாரோ “என்னடா இழுவ….சிக்கிரம் மேட்டருக்கு வாடான்னு” ஒரு அருவாளோட வர்ற மாதிரி இருக்குன்றதால, நான் உடனே படத்தைப் போட்டுடறேன் சாமி!

ஒரு உயிரின் உள்ளே ஒரு பயணம்…….

டிஸ்கி: நாம படிச்ச எல்லா உயிரியலையும் தொடக்கத்திலே இருந்து எப்படி நம்ம வாசகர்களுக்கு சொல்லலாமுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும்போதே “யாமிருக்க பயமேன்”னு சொல்லிக்கிட்டு நம்ம “யூட்யூப்” வந்து நின்னுது பக்கத்துல! ஆஹா…..வயித்துல பால வாத்தியே நண்பான்னு சொல்லி கொஞ்சம் துழாவி ஒரு நல்ல?! உயிரியல் காணொளிய உங்க முன்னாடி வச்சிருக்கேன்.

இத படிச்சுட்டு/பார்த்துட்டு எதாவது விவாதம் பண்ணனும்னு ஆசைப்படுறவங்களோட விவாதம் செய்ய நான் ரெடி…….நீங்க?

Advertisements