உலகின் முதல் சோதனைக்கூட மாமிசம்: இதுதான் கலிகாலமென்பதோ?

Posted on திசெம்பர் 2, 2009

2


எனக்கு எப்படி, எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னே தெரியலை. அதாங்க, மேல கொடுத்திருக்கிற தலைப்புக்கும் கீழே எழுதப்போற செய்திக்குமான தொடர்பைப் பத்திச் சொல்றேன். இந்த மாதிரி செய்திய எல்லாம் படிக்கிறப்போ, நாம இன்னும் உலகத்துலதான் இருக்கோமா இல்ல எதாவது வேற்றுகிரக வாசியாயிட்டோமான்னு சந்தேகம் கூட வருதுங்க!

வராதா பின்ன? கொஞ்சம் ஏமாந்தா நம்மளையே சோதனைக்கூடத்துல உக்கார வச்சி, கொஞ்ச நாள் கழிச்சு ஒரு “ஜூனியர்” நம்மள கையில குடுத்து கெளம்புன்னு சொல்லுவாய்ங்கே போலிருக்கு! சொல்ல முடியாதுப்பா, இன்னும் கொஞ்ச வருஷத்துல அதுவும் நடக்கலாம்!??

என்னங்க, “கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி” இருக்கா உங்களுக்கு? சரி நாம பதிவுச் செய்திக்கு

சோதனைக்கூட மாமிசம்!

வருவோம். மேட்டரு என்னன்னா, உலகத்துலயே முதல் முறையா நாம சாப்பிடற மாமிசத்த (இந்த ஆய்வுல பன்றி!)  முழுவதும் சோதனைக்கூடத்துலேயே உருவாக்கி இருக்காய்ங்கலாம்  நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள்!

ஏன், இவனுங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையான்னு நீங்க கேட்குற மாதிரி இருக்கு?! இருங்க இருங்க….ஒன்னும் டென்சன் ஆவாதீங்க. நீங்க நெனக்கிற?! மாதிரி ஒன்னும் வேலை வெட்டி இல்லாம மாமிசத்த சோதனைக்கூடத்துல உருவாக்கலையாம் இந்த ஆய்வாளர்கள்?!

சோதனைக்கூடத்துல மாமிசத்த உருவாக்கினதுக்கு மிக முக்கியமான காரணங்களா ஆய்வாளர்கள் சொல்றது,

  • சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இன்றியமைதாதது
  • விலங்குவதையிலிருந்து விலங்குககளை காப்பது
  • சுத்த சைவ உணவு பழக்கமுள்ளவர்களும் இந்த மாமிசத்தை சாப்பிட முடியும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு!

இந்த மாமிசத்துனால சுற்றுச்சூழல் எப்படி பாதுகாக்கப்படுகிறது அப்படின்னுதானே கேக்குறீங்க? அதாவது, உயிருள்ள விலங்குகளை மாமிசத்துக்காக வளர்க்கும்போது, இந்த “பச்சைவீட்டு வாயு”ன்னு சொல்றாங்களே (அதாங்க CO2 (கரிமள வாயுன்னு தமிழ்ல சொல்லுவாங்க), மீத்தென்) போன்றவை எல்லாம் அந்த விலங்குகளிலிருந்து வெளியாகும். அப்படி வெளியாகுற வாயுக்களோட அளவு இப்போ 18%  இருக்குதாம். ஆனா, அதே மாமிசத்த சோதனைக்கூடத்துல உருவாக்கினா இந்த அளவை வெகுவாக் குறைக்கலாமுன்னு சொல்றாங்க இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்!

சைவ உணவுப் பழக்கமுள்ளவர்களும் மாமிசம் சாப்பிடலாம்!

இந்தச் சோதனைக்கூட மாமிசம் சாப்பிட நல்லா இருந்தா, உடலுக்கு கேடு விளைவிக்காம இருந்தா  “நாங்க  சாப்பிட தயார்”னு சொல்லிட்டாங்களாம் பல சைவர்கள்.அடங்கொக்காமக்கா!! அதுமட்டுமில்லாம, “Peta” அப்படிங்கிற விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்தினர், “ஒரு இறந்த விலங்கின் ஒரு பகுதியா இல்லாத எந்தவொரு மாமிசத்தையும் நாங்க சாப்பிடத் தயார், தடையேதுமில்லை”ன்னு சொல்லிட்டாங்களாம்! ஆஹா….கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கய்யா!

இப்போதைக்கு இந்த சோதனைக்கூட மாமிசத்தை சாப்பிட முடியுமா முடியாதான்னு சொல்ல முடியாதுன்னாலும், குறைந்தது 5 வருஷத்துல இந்த மாமிசத்தை மார்க்கெட்டுல நாம எல்லாரும் வாங்க முடியும்னு உறுதியாச் சோல்றாரு, இந்த சோதனைக்கூட மாமிசத்தை உருவாக்கின விஞ்ஞானி மார்க் போஸ்ட்!  அது சரி?!

மேல எழுதினது எதுவுமே புரியலன்னாக்கூட பரவாயில்ல, கீழே இருக்கிற காணொளியப் பாருங்க உங்களுக்கே புரியும்!

மேலே இருக்கிற காணொளிச் செய்தி ஒரு வருஷத்திற்கு முந்தையது என்பது குறிப்பிடத்தக்கது!

ஆமா, இந்த சோதனை(க்கூத்தப்) பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க? அப்புறம் இந்த சோதனைக்கூட மாமிசம் கடைகள்ல கெடைச்சா (2014-ல!) நீங்க வாங்குவீங்களா?

Advertisements