செக்ஸ்: ஆண்களுக்கும் கர்பத்தடை “மாத்திரை” ?!

Posted on திசெம்பர் 1, 2009

10


செக்ஸ்ல ஈடுபடுறதுல எல்லாருக்குமே சுகம்தான்னாலும், அதுக்கப்புறமா வர்ற பிரச்சினைகள?! நெனச்சி பல பேர் அந்த இம்சையே வேணாமுன்னு ஒதுங்கி இருக்கிறதும் உண்டு! (ஆமா இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? எல்லாம் ஒரு கேள்வி ஞானம்தான்?!). இதுல நான் மேல சொன்ன பல பேர் யாருன்னு கேட்டீங்கன்னா பாவப்பட்ட “ஆண்கள்” மட்டும்தான்!

ஆண்களுக்கு கர்பத்தடை எப்படி?!

என்ன இவன் உளர்றானேன்னு யோசிக்கிறீங்களா? உண்மைதாங்க, செக்ஸ் வச்சிக்க ஆசைப்படுற பெண்களுக்கு குழந்தை வேணாமுன்னா, அவங்க ஒரு கர்பத்தடை மாத்திரை போட்டுக்கிட்டா போதும். ஆனா ஆண்கள் நெலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க?! (யாருப்பா அது ஆணுறை போட்டுக்க வேண்டியதுதானே அப்படீன்னு கொரலு கொடுக்கிறது?!)

என்னங்க நான் சொல்றது புரிஞ்சிருக்குமே?!. ஆமாங்க நமக்கு, ஒன்னு நிரந்தரமா குழந்தை பெத்துக்க முடியாத மாதிரி குடும்ப கட்டுப்பாடு செஞ்சுக்கனும், இல்லைன்னா ஒவ்வொரு முறையும் ஆணுறை பயன்படுத்தி செக்ஸ் வச்சிக்கனும். ஆனா, இதுவே பெண்கள் மாதிரி சுலபமா நாம கூட ஒரு கர்பத்தடை மாத்திரைய போட்டோமா, செக்ஸ சந்தோஷமா அனுபவிச்சோமான்னு இருந்தா எப்படி இருக்கும்?

நல்லாத்தான் இருக்கும்னு நீங்க எல்லாரும் கோரஸா சொல்ற மாதிரி கேக்குது?!. ஆமாங்க, இதே கவலைதான் விஞ்ஞானிகளுக்கும்! அதாவது, 1960-ல் இருந்து பெண்களுக்கான கருத்தடை மாத்திரை பயன்பாடு வழக்கத்துல இருக்கு. ஆனா, என்னதான் விஞ்ஞானம் முன்னேறி இருந்தாலும் ஆண்களுக்கு ஒரு கருத்தடை மாத்திரை உருவாக்க முடியலயே அப்படீங்கிற ஆதங்கம்?! செக்ஸ் துறை சார்ந்த ஆய்வாளர்கள்/விஞ்ஞானிகளுக்கு இதுவரைக்கும் இருந்தது.

அப்படீன்னா, இப்ப இல்லையான்னு கேக்குறீங்களா? உண்மைதாங்க, “நல்ல காலம் பொறக்குது…..நல்ல காலம் பொறக்குது” அப்படீன்னு குடுகுடுப்பைக்காரன் சொல்ற மாதிரி “ஆண்களுக்கு நல்ல காலம் பொறக்குது”ன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!

ஆண்களுக்கும் “கர்பத்தடை மாத்திரைகள்” உருவாக்கலாம் அப்படீங்கிற சாத்தியக்கூறுகள் இருக்குன்னு

ஆண்களுக்கு கர்பத்தடை மாத்திரை?!

சமீபத்துல மேற்கொண்ட ஒரு ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க இங்கிலாந்தின் குயின்ஸ் மெடிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த மிச்செல்லி வெல்ஷ்!

அதுமட்டுமில்லாம, விந்தணுக்கள் குறைபாடுள்ள ஆண்களுக்கு விந்தணுக்கள ஆதிகரிக்கிற சிகிச்சை முறைகளையும் உருவாக்குற வாய்ப்புகள் இருக்குன்னு இந்த ஆய்வில கண்டுபிடிச்சிருக்காங்க! ஆஹா….இதத்தான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு சொல்லுவாங்களோ?!

எப்புடீ…..இனிமே நாங்களும் கர்பத்தடை மாத்திரைய போடுவோமுல்ல?! அப்படீன்னு நாமளும் (ஆதாங்க, ஆண்கள் எல்லாரும்!) நெஞ்ச நிமித்தி சொல்லிக்கலாமுங்க! கூடவே விழாக்கால இலவச இணைப்பா விந்தணு குறைபாட்டுக்கான சிகிச்சை முறையும் உருவாக்க முடியும்ங்கிறதுனால இன்னும் கொஞ்சம் சந்தோஷப்படலாம் ஆண்கள் எல்லோரும்!

கர்பத்தடை மாத்திரை இருந்தா எப்படி இருக்கும்? நீங்க அத பயன்படுத்துவீங்களான்னு கேட்டதுக்கு மேலை நாட்டு ஆண்கள் என்ன பதில் சொல்றாங்கன்னு பாருங்க கீழே இருக்கிற காணொளியில!

இந்த செய்தியப் பத்தி இன்னும் விரிவா படிக்க இங்க போய்ப் பாருங்க

வாழ்க அறிவியல்…..வளர்க தொழில்னுட்பம்…..ஓங்குக விஞ்ஞானம்!

Advertisements
குறிச்சொற்கள்: , , ,