ஜப்பானின் “ரோபோ” மாடல் அழகி : நடையா இது நடையா! (150-வது இடுகை)

Posted on நவம்பர் 28, 2009

0


“ஜப்பான்”னு சொன்ன உடனே நம்ம எல்லாருக்கும் நியாபகம் வர்ற முதல் விஷயம் “ரோபோ”வாகத்தான் இருக்கும். ஏன்னா இன்றைய உலகத்துல ரோபோக்கள் உருவாக்குறதில எல்லா நாட்டுக்கும் முன்னோடியா இருக்குறது ஜப்பான்தான்!

உங்களுக்குத் தெரிஞ்சவரைக்கும் ரோபோக்கள் என்னென்ன வேலை செய்யும் கொஞ்சம் சொல்லுங்க? சரி எனக்குத் தெரிஞ்சவரைக்கும் நான்  சொல்றேன். ரோபோக்கள்ல ரெண்டு வகை உண்டு, ஒன்னு வீட்டு வேலைகளுக்காக (Domestic robots) இன்னொன்னு தொழிற்சாலை வேலைகளுக்காக (Industrial robots)!

அனேகமா, நமக்கெல்லாம் பிடிச்சது முதல் வகைதான்னு நெனக்கிறேன். இந்த வகை ரோபோக்கள “ஹியூமனாய்ட்ஸ்” அப்படின்னு சொல்வாங்க ஆங்கிலத்துல! இந்த வகை ரோபோக்கள்  மேல எல்லாருக்குமே ஒரு மோகம் உண்டு. ஏன்னா, இந்த ரோபோக்கள் மட்டுந்தான் மனுஷங்க மாதிரி பேசும், மிதிவண்டி ஓட்டும், விளையாடும் (இன்னும் சில வேலைகளும் செய்யும்).

அதெல்லாம் சரி, ஏன் இவன் திடீர்னு ரோபோக்கள் பத்தி பேசறானேன்னு யோசிக்கிறீங்கதானே? காரணம் இருக்குங்க! இந்த வாரத்திலேர்ந்து ஜப்பான்ல “சர்வதேச ரோபோ கண்காட்சி” தொடங்கியிருக்கு. இது மாதிரியான கண்காட்சிகள்ல மக்களோட எதிர்பார்ப்ப பூர்த்தி செய்யுற மாதிரியான ரோபோக்கள அறிமுகப்படுத்துறதுதான் ரோபோ நிறுவனங்களோட நோக்கம்.

அப்படீன்னா இந்த வருட ரோபோக் கண்காட்சியில என்ன விஷேசம்? இதுதான் உலக முழுதும் இருக்குற ரோபோ விரும்பிகளோட கேள்வி. அதுக்காண பதிலை இந்த வருட கண்காட்சியில தேடலாம் வாங்க!

“ஒகோனோமியாக்கி” சமையல் புலி ரோபோ!

ஒகோனோமியாக்கி சமைக்கும் ரோபோ

உண்மையச் சொல்லுனும்னா மனுஷன் சமைச்சி  சாப்பிட்டு கொஞ்சம் அலுத்துத்தான் போச்சி போலிருக்கு?! அதனாலதான் சமைக்கிற ரோபோவைக் கண்டுபிடிச்சிருக்கான் ஜப்பான்காரன்னு நெனக்கிறேன்?!

ஆமா, அதென்ன “ஓகோனோமியாக்கி” அப்படிங்கிறீங்களா? அது ஓன்னும் இல்லீங்க, ஹிரோஷிமாவோட பாரம்பரிய உணவு வகைதான் இந்த ஓகோனோமியாக்கி! (இதப் பத்தி காணொளியோட விரிவா இன்னொருப் பதிவ போடறேன்). இது ஒரு நூடுல்ஸ் உணவு வகை. ரொம்ப ருசியா இருக்குமுங்க! ஜப்பான்ல எனக்கு பிடிச்ச உணவு வகைல இதுக்குத்தான் முதலிடம்!

சரி, மேட்டருக்கு வருவோம். இந்த ஒகோனோமியாக்கிய இதெல்லாம் எனக்கு ஜுஜுபிங்கிற மாதிரி சும்மா பிச்சு ஒதருது ஒரு ரோபோ! ஆச்சரியம்தானே?!

D+ropop: ஈகோ ஃப்ரெண்ட்லி ரோபோ!

D+ropop

அதென்ன ஈகோ ஃப்ரெண்ட்லி ரோபோ? அதாவது, இந்த ரோபோவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருள்களால உருவாக்கி இருக்காங்களாம். ஐய்ய….யாருக்கு வேணும் அது? அப்படின்னு சொல்ற மாதிரி கேக்குது?! அப்படிச்சொல்லாதீங்க, ஏன்னா இதுல ஒரு சுவாரசியம் இருக்குதுங்க. இந்த ரோபோ ஒரு பெண். அதுமட்டுமில்லாம, இது மாடல் அழகிகள் மாதிரி “பூனை நடையெல்லாம்” நடக்குமாம். அட, இங்க பாருய்யா!

இது மாதிரி இன்னும் நெறைய ரோபோக்கள் நம்மள அசத்துதுங்க! சரி, நான் வளவளன்னு இன்னும் எழுதிக்கிட்டே போறதுக்கு பதிலா, நீங்களே  பாருங்க இந்த வருஷ ஜப்பானின் சர்வதேச ரோபோக் கண்காட்சியில வந்த ரோபோக்களோட அசத்தல்கள…..

துள்ளிக்குதிக்கும் சுட்டி ரோபோ “ரோபிட்”!

இன்னும் சுவாரசியமான ஒரு ரோபோ பேர் சொல்லுது, துள்ளிக்குதிக்குது, சொல்றதெல்லாம் செய்யுது. நீங்களே பாருங்க அந்த அதிசயத்த….

என்னங்க, சும்மா அப்படியே அசந்து போய் உக்காந்துட்டீங்களா?! இது வெறும் ட்ரெய்லர்தானாமுங்க.  வர்ற 2025-வருஷத்துல நம்மளோட முக்கால்வாசி வேலைகள செய்யுற ரோபோக்கள கடையில வாங்கலாமுன்னு சொல்றாங்க ஜப்பானிய ரோபோ பொறியாளர்கள்!

குழந்தைகளுக்கான ஒரு சுவாரசியமான ரோபோ பத்தி என்னோட ஒரு பதிவ நீங்க இங்கு படிக்கலாம்

ரோபோக்கள் பத்தி இன்னும் விரிவா படிக்க இங்கு செல்லுங்கள்

Advertisements