மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் கார்!

Posted on நவம்பர் 26, 2009

4


ஜப்பான்ல இருக்கிறதுனால நான் ஏதோ புல்லட் ட்ரெய்ன் மட்டுந்தான் “புல்லட்” மாதிரி சீறிப்பாயும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா இப்பத்தான் தெரியுது புல்லட்ட விட வேகமா சீறிப் பாயுற காரெல்லாம் கூட உலகத்துல இருக்குதுன்னு!

ஆமா, உலகின் அதிக வேக கார் எவ்வளவு வேகம் போகும்னு தெரியுமா உங்களுக்கு? உலகின் அதிவேக கார் ஓட்டும் சாதனைய செஞ்சது யார் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

த்ரஸ்ட் SSC

உலகின் அதிவேகக் காரின் பெயர் “த்ரஸ்ட் SSC”, அதோட வேகம் (இதுவரை) மணிக்கு 763 மைல்கள்! அதாவது மணிக்கு 1228 கி.மீ. யப்பா! இந்த உலக சாதனைய படைச்சவரு பேரு ஆண்டி க்ரீன்! இவர் ஓட்டிய காரோட பேரு “சூப்பர் சோனிக் கார்” (Supersonic Car/SSC). இங்கிலாந்தின் “ப்லட்ஹௌண்ட்”  அப்படிங்கிற நிறுவனம்தான் இந்த வகைக் கார்கள உருவாக்குது!

அதில்ல மேட்டரு இப்போ. அதே ப்லட்ஹௌண்ட் நிறுவனம் ஒரு புதிய வகை SSC காரை உருவாக்கிக்கிட்டு இருக்கு இப்போ. அதோட வேகம் எவ்வளவு தெரியுமா? மணிக்கு 1000  மைல்கள் (1610 கி.மீ!). ம்ம்ம்…ஒன்னும் சொல்றதுக்கில்ல!

ஆமா எனக்கொரு சந்தேகம். இந்தக் காரு 1000 மைல் வேகத்துல தரையிலதான் போகுமா இல்ல வானத்துல பறக்குமா? ஏங்க உங்களுக்கும்தானே?

ஆண்டி க்ரீன்( நடுவில் இருப்பவர்)

இந்தக் கார் கிட்டத்தட்ட பறக்கும்னே சொல்லலாம்! ஆனா, பறக்காது. என்னங்கடா இது , வடிவேல் காமெடியில வர்ற என்னத்த கண்ணையா சொல்ற மாதிரி, “இந்தக் காரு பறக்கும்ம்ம்ம்….ஆனா பறக்காது” அப்படிங்கிறானேன்னு பார்க்குறீங்களா?

உண்மைதாங்க. இந்தக் காரு தரையில (பூமியிலதான்) போகும், ஆனா வானத்துல பறக்குற ஜெட் ஏரோப்ளேனைய மிஞ்சிடுமாம் வேகத்துல. என்ன, நான் சொல்றத உங்களால நம்ப முடியலையா? அப்ப வாங்க நேராவே பார்ப்போம்….

என்னங்க, சும்மா சூப்பரா இருக்குது இல்ல காரு!?

Advertisements