“அந்த” ஹார்மோனின் லீலைகள்!

Posted on நவம்பர் 21, 2009

2


உங்க எல்லாருக்குமே தெரியும் வயசுக்கு வந்த ஒவ்வொருத்தரையும், இந்த ஹார்மோன்கள் என்ன பாடுபடுத்தும்னு! அதாங்க, “மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா” அப்படின்னு சொல்லுவோமில்ல?!

பொதுவா, வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு புத்துணர்ச்சி, கிளர்ச்சி எல்லாம் உண்டாகுறதுக்கு காரணம், அவங்க உடம்புக்குள்ள இருக்கிற சில ஹார்மோன்கள் பண்ற சேட்டைதான்!

சரி,  நாம முக்கியமான விஷயத்துக்கு வருவோம். நீங்க எல்லாருமே எதாவதொரு வயசுல காதல்வயப்பட்டிருப்பீங்க, அதனால உங்களுக்கு காதல்னா என்னன்னு தெரியும். ஆனா, உங்களுக்கு “காதல் ஹார்மோன்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு (அது எதுன்னு) தெரியுமா?

படம்:கூகுள்

“ஆக்ஸிடோசின்” அப்படிங்கிற ஹார்மோனைத்தான் காதல் ஹார்மோன்னு சொல்றாங்க மருத்துவர்கள்.  ஆமா, ஏன் அப்படிச் சொல்றாங்க?

இந்த ஹார்மோன் பொதுவா, மகப்பேறு காலங்கள்லயும், உடலுறவு சமயங்கள்லயும் அதிகமா சுரக்குமாம்! அதுமட்டுமில்லாம “உடலுறவுக்கு” அடிப்படையே இந்த ஆக்ஸிடோசின்தானாம்!

காதல்ன உடனே அது ஒரு இனம்புரியாத உணர்வு, தெய்வீக உணர்வு அப்படின்னெல்லாம் சொல்லுவாங்க இல்லியா?

ஆனா, அடிப்படையில “காதல்” அப்படின்னா என்னன்னு (மருத்துவ ரீதியா) பார்த்தோமுன்னா,  மனுஷனோட பொதுவான உணர்வுகளான, “அன்பு, நம்பிக்கை, பரிவு, தியாக உணர்வு”, இப்படி பல வகையான உணர்வுகளோட ஒரு அழகான கலவைதான் காதல் அப்படின்னு சொல்லலாம்!

மேல சொன்ன அத்தனை உணர்வுகளையும் கட்டுபடுத்தக் கூடிய ஹார்மோன்தான்  இந்த ஆக்ஸிடோசின் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! அதனால தான் இந்த ஹார்மோனை காதல் ஹார்மோன்னு சொல்றாங்களோ?!

ஆனா இப்போ, மேட்டரு அது இல்ல! மேல குறிப்பிட்ட எல்லா நல்ல உணர்வுகளுக்கும் காரணமான அதே  ஆக்ஸிடோசின்தான் தீய உணர்வுகளான “பொறாமை, வக்கிரம்” போன்றவற்றுக்கும் அடிப்படைன்னு சமீபத்துல கண்டுபுடிச்சி இருக்காங்க ஹைஃபா பல்கலைகழகத்தச் சேர்ந்த ஆய்வாளர்கள்!

என்னாங்கடா இது…..அப்படின்னு தானே யோசிக்கிறீங்க?! இப்படித்தான் அந்த ஆய்வாளர்களும் ஆச்சரியம்/அதிர்ச்சியடைஞ்சாங்களாம்!  எப்படி யோசிச்சாலும் உண்மை அதுதானாம்?! ஒன்னும் சொல்றதுக்கில்ல!!

இதுவரைக்கும், அன்பு மாதிரியான நல்ல உணர்வுகளுக்கு மட்டுமே  அடிப்படைன்னு நெனச்ச ஆக்ஸிடோசின், வக்கிரம் மாதிரியான தீய உணர்வுகளுக்கும் காரணமா இருக்கிறது ஒரு பக்கம் அதிர்ச்சியா இருந்தாலும், “ஆட்டிசம்” போன்ற நோய்களுக்கான சிகிச்சையில இத பயன்படுத்தலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!

சரி, “ஆக்ஸிடோசின்” பத்தி படிச்சது படிச்சோம், இன்னும் கொஞ்சம் வெவரமா தெரிஞ்சிக்கலாமில்ல….. வாங்க இந்த காணொளியப் பார்ப்போம்!

சரிங்க, ஆக்ஸிடோசின் பத்தி சுவாரசியமான விஷயம் எதாவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்….

Advertisements
குறிச்சொற்கள்: , , , ,