திருடனைப் பிடித்துக் கொடுக்கும் நவீன செல்போன்!

Posted on நவம்பர் 20, 2009

0


நம்ம செல்போன வச்சு என்னெல்லாம் செய்யலாமுன்னு கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம். சரி, பேசுறத தவிர வேற என்னெல்லாம் பண்ணலாமுன்னு எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன்.

“போட்டோ புடிக்கலாம், வீடியோ எடுக்கலாம், பாட்டு கேக்கலாம், படம் பார்க்கலாம், டி.வி பார்க்கலாம், கேம்ஸ் வெளையாடலாம், நம்ம பில்லு கட்டலாம்(இன்னும் நெறையவே!)”.

சரி, இதெல்லாம் நமக்கு தெரியும். ஆனா நமக்குத் தெரியாத, நாட்டுக்கு ரொம்பத் தேவையான ஒரு ஆச்சரியமான வேலைய இப்போ செல்போன் செய்யுது. அதென்ன தெரியுமா உங்களுக்கு? அதாங்க, வீட்டுக் காவல்காரன் வேலை!

ஐய்ய….தோடா! வண்ட்டுகிறாரு புத்சா சேதி சொல்றதுக்கு, அந்த வேலையத்தான் ரொம்ப நாளா சர்வெய்லென்ஸ்/ செக்யூரிட்டி கேமரா செஞ்சுகிட்டிருக்கே, அப்புறம் எதுக்கு செல்போன் வேற அப்படீன்றீங்களா?

உண்மைதாங்க! ஆனா சர்வெய்லென்ஸ்/ செக்யூரிட்டி கேமரா வேவு பார்க்கிற விஷயத்த அப்பப்போ உங்களால தெரிஞ்சிக்கிட்டு, வீட்ல திருட ஆரம்பிச்ச திருடன, உடனே உங்களால புடிக்க முடியுமா?  அதாங்க, “ரியல் டைம்ல” நடக்கிறது எல்லாம்! உதாரணத்துக்கு நீங்க  வெளியூர்ல இருக்கும்போது, உங்க வீட்ல எப்போ, எந்த மூலையில, என்ன நடக்குதுன்னு உங்களால சொல்ல முடியுமா?!

இதுவரைக்கும் சொல்ல முடியாமதாங்க இருந்தது. ஆனா, இனிமே அப்படி இல்ல! வேலை/சுற்றுலா விஷயமா நீங்க வெளியூர் போயிட்டாலும், உங்க வீட்ல “ரியல் டைம்ல” என்ன நடக்குதுன்னு உங்களால வேவு பார்க்க முடியும்! ஆஹா இது நல்லாயிருக்கே….அது சரி, அதெப்படி  அப்படிங்கிறீங்களா?

Remote control: Travelers can keep an eye on home (AP)

படம்:Protectionone.com

“ப்ரொடெக்ஷன் ஒன்”, அப்படிங்கிற அமெரிக்க  நிறுவனம் ஒரு நவீன பாதுகாப்புக் கருவிய அறிமுகப்படுத்தியிருக்காங்க. அதுவும் ஒரு சர்வெய்லென்ஸ்/ செக்யூரிட்டி கேமரா கருவிதான்! ஆனா ,  அந்த கருவியில பதிவாகுற வீடியோ கோப்புகளை எல்லாம், உடனுக்குடன் இணையதளம் மூலமா, உங்க செல்போன் வழியா ஆன்லைன்ல எந்த நேரமும், உங்க வீட்டையோ/அலுவலகத்தையோ நீங்க கண்கானிக்கலாமாம்! அடங்கொக்கா மக்கா…..அப்படியா? சொல்லவே இல்ல?!

எப்புடீ….?! ஆக இனிமே, வீட்ல யாருமில்லன்னு திருட வர்ற எல்லாத் திருடனுக்கும் (அவன் வெடிகுண்டு முருகேசன்ல வர்ற “அலெர்ட் ஆறுமுகமா” இருந்தாக்கூட) ஆப்புதாங்க!

அதுமட்டுமில்லாம, இது திருடன்கிட்டே இருந்து  பாதுகாத்துக்கிற விஷயம் மட்டும் இல்லீங்க. வீடு, அலுவலகம், தொழிற்ச்சாலை, கடைகள் இப்படி எல்லா இடத்திலேயும் நடக்கிற திருட்டு, கொலை, கொள்ளை, அசம்பாவிதங்கள்  இப்படி எல்லாத்துலேயும் இருந்து நம்ம உடல், உடமைகள்  எல்லாத்தையும் பாதுகாத்துக்க முடியுமாம் இந்த நவீன கருவியுடன்!

இந்த பாதுகாப்புக் கருவியோட பயன்பாட்டைப் பத்தி, இதுல என்னென்ன விஷேசமான வசதிகள் இருக்கு அப்படிங்கிறத பத்தி இன்னும் விரிவாத் தெரிஞ்சிக்க, வாங்க இந்த வெப்பினாரைப் பார்ப்போம்….

பகுதி-1:

பகுதி-2:

இந்த பாதுகாப்பு கருவியப் பத்தி படிச்சதுக்கப்புரம் எனக்கு என்ன தோணுச்சின்னா…..

இனிமே நாம “திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டாலும் திருட்டை ஒழிக்க முடியும்” அப்படின்னு தைரியமா பாடலாம்!

ஆமா, உங்களுக்கு என்ன தோணுது……?

Advertisements