வலைப்பதிவு: ஐயோ பாவம் வலைப்பதிவர்கள்!?

Posted on நவம்பர் 12, 2009

2


மக்கள எல்லாம் ஈர்க்குற மாதிரி ஒரு நல்ல வலைப்பதிவு ஒன்னு எழுதறதுக்காக, அப்பிடி யோசிச்சு, இப்பிடி யோசிச்சு, உக்காந்து, நின்னு, குப்புற படுத்தெல்லாம் யோசிச்சு (ஒரு வலைப்பதிவு எழுத இப்படியெல்லாமா யோசிக்கிறாங்க?!) ஒப்பேத்தி ஒரு வலைப்பதிவு எழுதினா…..

மக்கள் தேடிப்போறது என்னவோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக்காதல் இப்படிப்பட்ட “சுவாரசியமான” செய்திகளைத்தான்!

அப்படின்னு நான் சொல்லலப்பா, ஷங்கர் வேதாந்தம் அப்படிங்கிற ஒரு வலைப்பதிவர்தான் (வாஷிங்டன் போஸ்டில்) சொல்லியிருக்காரு! இது வலைப்பதிவுக்கு மட்டுமில்ல, தொலைக்காட்சி, செய்தித்தாள், வார/மாத இதழ்கள் இப்படி எல்லாத்துக்குமேதானாம். அடக்கொடுமையே!

ஆமாம் நாம ஏன் ஒரு செய்திய விரும்பி படிக்கிறோம், இன்னொன்ன கண்டுக்கவே மாட்றோம்? எப்பவாவது யோசிச்சு இருக்கீங்களா?

அது ஏன் ஒரு இத்துப்போன கள்ளக்காதலப் பத்தி வரச் செய்தியப் விரும்பிப் படிக்கிற நாம , நம்ம வாழ்க்கையை பாதிக்கிற/நல்வழிப்படுத்துற ஒரு செய்திய திரும்பிக்கூட பார்க்க மாட்டேங்கிறோம்?

நம்ம எல்லாருடைய இந்த “சுவாரசிய செய்திப்பசிக்கு”, ஒரு பரிணாமம் சார்ந்த காரணம் இருக்குன்னு சொல்றாரு ஷங்கர் வேதாந்தம். இதக் கண்டுபுடிக்க அவரு, கிட்டத்தட்ட 1700-கள்ல இருந்து 2001 வரைக்கும் வந்த, எல்லா முதல் பக்க செய்திகளையும் பத்தின ஒரு உளவியல் ஆய்வ, பிரிச்சு மேய்ஞ்சிருக்காரு!

அப்படி மேய்ஞ்சதிலதான் தெரிஞ்சிருக்கு, கிட்டத்தட்ட 300 வருஷமா எல்லா சமயங்கள்லயுமே கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து பத்தி வந்த செய்திகள்தான் பெரும்பாலும் முதல்பக்க/முன்னனி செய்திகளா வந்திருக்குன்னு! வெளங்கிடும்?!

மொத்தத்துல, நம்மல மனசளவுல பாதிக்காத, ஆனா படிக்கிறதுக்கு ரொம்ப சுவாரசியமான செய்தியத்தான் காலங்காலமா நாம எல்லாரும் படிச்சுக்கிட்டு வர்றோம் அப்படிங்கிறாரு வேதாந்தம். என்னங்க  அவரு சொல்றது உண்மைதானே?

அதனால சக வலைப்பதிவர்களுக்கு ஷங்கர் வேதாந்தம் சொல்றது என்னன்னா, ஒரு சூப்பர்ஹிட் வலைப்பதிவு எழுதனும்னா, மக்கள பாதிக்கிற மாதிரி ஆனா அதேசமயம் ப்ளேடு போடாத அளவுக்கு இருக்கிற ஒரு விஷயத்த எழுதனும் அப்படிங்கிறாரு. சரிங்கோவ்!

அதெல்லாம் சரி, இதப்பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க?

Advertisements