பாம்பு: அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள்!

Posted on நவம்பர் 11, 2009

18


“பாம்பென்றால் படையும் நடுங்கும்”, அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதே பாம்பைப் பத்தி நமக்கு தெரியாத நெறைய விஷயங்கள் இருக்குங்க! உதாரணத்துக்கு,

“பாம்புக்கு காதே இல்ல, ஆனா நம்ம எல்லாரையும் விட அதிகமா  சப்தங்கள உணர்ற சக்தி அதுக்கு இருக்கு!”

“பாம்புகளுக்கு மூக்கே கிடையாது, ஆனா வாசனை/ நாற்றங்கள மிகச்சரியா உணர்ற திறன் இருக்கு!”

“உலகத்துலேயே மிகக் கொடிய “பயோவெப்பன்” என்ன தெரியுமா உங்களுக்கு, பாம்புகளோட விஷப்பற்கள்தானாம்!”

மேல நீங்க படிச்சது வெறும் ட்ரெய்லர்தாங்க…..இனிமேதான் படமே! வாங்க பார்ப்போம்….

பாம்புகள் உணவே இல்லாமல் பல மாதங்கள் வாழ மட்டுமல்ல, வளரவும் செய்யுமாம்!

நீங்க கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க, பல மாசத்துக்கு சாப்பிடாமலே இருந்துக்கிட்டு, ஆனா உயரமா வளர்ந்துகிட்டு எந்தத் தொந்தரவும் இல்லாம இருந்தா….அட அட அட, அந்த சொகமே தனிதான்! ம்ம்ம்….என்னத்த சொல்ல, அந்த குடுப்பனை நமக்கு இல்ல! குடுத்துவச்சது…..பாம்பச்சொன்னேங்க!

உலகத்தின் மிகச்சிறிய பாம்பு ஒரு நாணயத்தின் அளவுதான் இருக்கும்!

080801-thread-snake-02உலகத்துல இருக்கிற பாம்புகள்லியே, ரொம்பச் சின்ன பாம்பை 2008-ல “பார்படோஸ்”, அப்படிங்கிற இடத்துல கண்டுபிடிச்சாங்களாம். அதோட அளவு என்ன தெரியுமா, வெறும் 10 செ.மீ தானாம்!  இன்னொரு உபரித்தகவல், இந்த பாம்பை நம்மச் சென்னையிலதான் முதல்ல கண்டுபுடிச்சாங்களாம்! அது எவ்வளவு சின்னதா இருந்தா என்ன? பார்த்தா பயமாருக்கும்ல?!

நல்ல பாம்பு கண்ணத்தான் குறிவைக்குமாம்!

சில வகை நல்ல பாம்புகள “துப்பும் நாகம்” (Spitting cobras) அப்படின்னு சொல்றாங்க. இந்த வகை நல்ல பாம்புகள், விஷத்த கிட்டத்தட்ட 2 மீட்டர் தூரம் வகை துப்பக்?! கூடிய சக்தி படைச்சவையாம். அடேங்கப்பா!  அதுமட்டுமில்லாம, இந்த பாம்பு கண்ணைக் குறி வச்சுத்தான் விஷத்தத் துப்புமாம். அப்படி  துப்புற விஷம் நம்ம கண்ணுல பட்டா, உடனே கண் குருடாயிடும்னு 2005-ல கண்டுபிடிச்சிருக்காங்க. யப்பா சாமி !கீழே இருக்கிற காணொளியில நீங்களே பாருங்க அந்த அநியாயத்த?!

மலைப்பாம்பு தன்னோட இரை முழுசையும் (எலும்பு கூட!) தின்றுவிடுமாம்!

மலைப்பாம்புங்க மாசக்கணக்குல சாப்பிடாமலே இருக்குமாம். ஆனா அதேசமயத்துல, சாப்பிடும்போது ஒரு சின்ன துண்டு கூட விடாம,  நம்ம காம்ப்ளான் பையன் மாதிரி ” அப்படியே” சாப்ட்ருமாம்! அதுக்கு காரணம் என்னன்னா, பாம்புங்களுக்கு எலும்பைக்கூட செரிக்க வைக்கிற அளவுக்கு  சிறப்பான உடலமைப்பாம்! இத நான் சொல்றத விட நீங்களே பாருங்க புரியும்!

ஒரு வகை பாம்பு 50 அடி தூரம் வரை பறக்குமாம்!

நான் என்னவோ இதுவரைக்கும், பாம்பு படம் மட்டுந்தான் எடுக்கும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். இப்பதான் தெரியுது,  “பறக்கிற பாம்புங்க” (50 அடி தூரம்) கூட உலகத்துல இருக்குதாம்! அப்போ, பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்னு சொன்னதிலே ஒரு அர்த்தம் இருக்குது இல்ல? அப்படி பறக்கும்போது,  “S” வடிவத்துல உடல வளச்சு பறக்குமாம். அது சரி, பார்த்தா தானே எதையுமே நம்ப முடியும்?! சரி வாங்க பார்ப்போம்….

ஒரு பாம்பு அதவிட நீளமான இன்னொரு பாம்பை சாப்பிட்டுவிடுமாம்!

அது எப்படி ஒரு பாம்பு, தன்னைவிட நீளமான இன்னொரு பாம்பை விழுங்க முடியும்? அப்படின்னு கேட்குறீங்களா? எனக்கும் அதே கேள்விதாங்க! சொன்னா நீங்க நம்ப மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். வாங்க நேராவே பார்போம்…..

நம்ம ராஜ நாகம் கூட இன்னொரு பாம்ப சாப்பிடுமாம், தெரியுமா உங்களுக்கு? எனக்கு இதுவரைக்கும் தெரியாதுப்பா! வாங்க எப்படின்னு பார்த்து தெரிஞ்சிக்குவோம்….

This slideshow requires JavaScript.

சரிங்க, இப்போ இது எப்படி இருக்குன்னு நான் கேட்க மாட்டேன். ஏன்னா, இது எல்லாமே எனக்கு தெரியாத விஷயங்கள். அதனால, ஒரே பிரமிப்பாதான் இருக்கு எனக்கு இந்த பாம்பு கதைகள் எல்லாம்! நீங்க சொல்லுங்க, உங்களுக்கு எப்படி இருக்குன்னு….