விண்வெளியில் விடுமுறை: விண்வெளி ஹோட்டலில் தங்க உங்களுக்கு ஆசையா?

Posted on நவம்பர் 10, 2009

4


இ.ஒ.த-3:

galactic-suite-1_48

விண்வெளி ஹோட்டல் (படம்:கூகுள்)

உங்களுக்கு தெரியுமா, உலகின் முதல் விண்வெளி ஹோட்டல், விண்வெளியில் சுற்றுலா செல்வதற்க்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது!

என்னது, விண்வெளி ஹோட்டலா?! விண்வெளி ஓடம் தெரியும், விண்வெளிக் கப்பல் கூட தெரியும், அது என்ன விண்வெளி ஹோட்டல்?! அப்படின்னு கேட்குறீங்களா?

ஆமாங்க, உலகத்தோட முதல் விண்வெளி ஹோட்டல்,”Galactic Suite Space Resort”, வருகிற 2012-ல் விண்வெளியில சுற்றுலா செல்ல இருக்கு. உங்களுக்கும் விண்வெளி சுற்றுலா போக ஆசைன்னா, சீக்கிரம் போய் முன்பதிவு செய்யுங்க!

என்ன, எவ்வளவு செலவு ஆகும்னு யோசிக்கிறீங்களா? ஒன்னும் அதிகம் இல்லீங்க! வெறும் 4.4 மில்லியன் டாலர்தான்! (சுமார் 22.5 கோடிதாங்க?!).

விஷயம் தெரியுமா உங்களுக்கு, ஏற்கனவே 43 பேர் முன்பதிவு செஞ்சுட்டாங்களாம். அதுமட்டுமில்லாம 200 பேர் இந்த சுற்றுலாபோக விருப்பம் தெரிவிச்சிருக்காங்களாம்!

அப்படி நீங்க இந்த விண்வெளி சுற்றுலா போனீங்கன்னு வச்சுக்கங்க, 80 நிமிஷத்துக்கு ஒரு முறை பூமிய சுத்தி வலம் வருவீங்களாம். அதுமட்டுமில்லாம, ஒரு நாளைக்கு 15 முறை சூரியன் உதயமாகிற அதிசயத்த பார்க்க முடியுமாம். அடேங்கப்பா!

galactic-suiteஇதுவரைக்கும் நான் பூமிதான் நம்மள சுத்தி வரும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். ஆனா இப்பதான் தெரியுது, பூமியக்கூட நாம சுத்தி வரலாமுன்னு! சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, “காலம் கலிகாலமா போச்சுன்னு”!

பார்சிலோனாவைச் சேர்ந்த ஒரு  நிறுவனம்தான் இந்த விண்வெளி ஹோட்டல உருவாக்குச்சாம். சேவியர் க்ளாராமன்ட்-ங்கிறவர்தான் இந்த விண்வெளி ஹோட்டலோட சொந்தக்காரர். அவர், இன்னும் 15 வருஷத்துக்குள்ள வார விடுமுறையை விண்வெளியில கழிக்கிறதுங்கிறது ஒரு பெரிய மேட்டரே இல்ல அப்படிங்கிற மாதிரி ஆயிடும்னு சொல்லியிருக்கிறாராம்! ம்ம்ம்….தோ பக்கத்துல இருக்கிற ஓட்டலுக்குப் போய் தங்கவே நமக்கு முடியல, இதுல எங்க விண்வெளி வரைக்கும் போறதுன்னு கவலப்படுறீங்களா? நானும்தாங்க!

சரி விடுங்க, போக முடியலன்னா என்ன, நம்ம யூட்யூப் இருக்கிற வரைக்கும் அந்த மாதிரி ஓட்டல்ல, விண்வெளி சுற்றுலா போனா எப்படியிருக்கும்னு பார்க்கவாவது முடியும்ல…..

இந்த செய்தியப் பத்தி இன்னும் விவரமா தெரிஞ்சிக்க இங்க போய் பாருங்க

Advertisements