பிறந்த குழந்தைங்க அவங்கவங்க தாய்மொழியிலேயே அழறாங்களாம்?!

Posted on நவம்பர் 9, 2009

4


இ.ஒ.த-2:

phototake_photo_36_week_fetusநாம எல்லாரும் நெனக்கிறது போல குழந்தைங்க, பிறந்த பிறகு மொழிய கத்துக்க ஆரம்பிக்கறது இல்லையாம்!

பின்ன, வயித்துக்குள்ளே இருக்கும்போதேவா? அப்படின்னு நீங்க நக்கலா கேட்டாலும் சரி, சீரியசா கேட்டாலும் சரி, பதில் ஒன்னுதான்….

ஆமாம், குழந்தைங்க அம்மா வயித்துல சிசுவா இருக்கும்போதே, அவங்க வெளியில கேட்கிற சில சப்தங்கள், குரல்கள் இதயெல்லாம் கத்துக்கிறாங்களாம். இத நான் சொல்லலீங்க, சமீபத்துல வெளியான , ஜெர்மனியின் வுர்ஸ்பெர்க் பல்கலைக்கழக ஆய்வு முடிவு சொல்லுது!

இதுக்கு உதாரணமா, பிறந்த குழந்தைங்க தங்களோட அம்மாவோட குரல மட்டும்தான் விரும்புவாங்க/புரிஞ்சிக்குவாங்க. அதுக்கு காரணம், குழந்தைங்க வயித்துல சிசுவா இருக்கும்போதே, இந்தக் (அம்மாவோட) குரலை உள்வாங்கி, நியாபகம் வச்சிக்கிறதுனால அப்படின்னு சொல்றாங்க இந்த ஜெர்மனி நாட்டு விஞ்ஞானிங்க!

30 ஜெர்மனி மற்றும் 30 ப்ரெஞ்சு, மொத்தம் 60 பிறந்த குழந்தைங்களோட அழுகையை கவனமா பதிவு செஞ்சு பார்த்ததில, ப்ரெஞ்சு குழந்தைங்க மட்டும் அழும் போது, கொஞ்சம் ஓங்கிய குரலோட அழுதிருக்காங்க. ஆனா, ஜெர்மனிய குழந்தைங்க இறங்கு முகமான/தாழ்வான குரலோட அழுது இருக்காங்க!

இந்த அழுகையில இருக்கிற மாற்றம், அந்தந்த மொழிக்குறிய இயல்பையே காட்டுது அப்படிங்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட வெர்ம்கே! அப்படின்னா, தாயின் வயிற்றிலிருக்கும் சிசு, வெளியில் கேட்கும் சப்தங்களை கூர்ந்து கவனிச்சி நியாபகம் வச்சிகிட்டு, பிறந்த பின் அழும்போது அதையே மீண்டும் செய்கிறது அப்படிங்கிறார் இந்த விஞ்ஞானி!

இந்த ஆய்வைப் பத்தி மேலும் படிக்க இங்கு செல்லுங்கள்

Advertisements