வேகமாக சாப்பிடுவதால் தொப்பை விழுகிறது!

Posted on நவம்பர் 8, 2009

6


இன்று ஒரு தகவல் (இ.ஒ.த-1):

overeating_lead_narrowweb__300x4430சமீபத்திய ஒரு ஆய்வு முடிவின்படி, வேகமாக சாப்பிடும் பழக்கத்தால் அதிகமான உணவை உண்ணும் பாதிப்பு?! இருக்கிறது அப்படின்னு சொல்றாங்க!

அது எப்படி?

அதாவது, பொதுவாக உணவு சாப்பிடும் போது சில பேர் மெதுவா, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவாங்க. ஆனா சில பேர், ரொம்ப வேகமா சாப்பிட்டு முடிச்சிருவாங்க!

இது பத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வுல, வேகமா சாப்பிடறதுனால, திருப்தியா சாப்பிட்டுட்டோம் அப்படிங்கிற உணர்வ ஏற்படுத்துற ஹார்மோன் சுரக்கிறது தடைபடுதாம். அதனால, இன்னும் சாப்பிடனும் அப்படிங்கிற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, நிறைய சாப்பிடுறோம் அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!

ஆனா, இதுவே பொருமையா சாப்பிட்டீங்கன்னா, அந்த ஹார்மோன் சரியான அளவுல சுரந்து, மூளைக்கு ஒரு செய்தி அனுப்பி, “ம்ம்ம்…. நல்லா சாப்பிட்டாச்சு” அப்படிங்கிற ஒரு உணர்வ ஏற்படுத்திடுது. அதனால, நாம அதிகமா சாப்பிடறது இல்ல, தொப்பையும் விழறது இல்ல அப்படிங்கிறாங்க!

இந்த ஆய்வு முடிவுகளைப் பத்தி மேல படிக்கனும்னா இங்க போங்க

குறிச்சொற்கள்: ,