உலகத்தின் மிக மோசமான பத்து ஃபோபியாக்கள்(பயங்கள்)!

Posted on ஒக்ரோபர் 31, 2009

2


ஃபோபியா (Phobias) அப்படின்னா ஒரு வித பய உணர்வுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அந்த மாதிரி ஃபோபியாக்கள்ல மிக மோசமான முதல் பத்து ஃபோபியாக்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு?  இம்மாதிரியான பயங்கள் ஒரு வருடத்தில், சுமார் 19.2 மில்லியன் அமெரிக்கர்களை (18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள்!) ஒரு முறையாவது இம்சிக்கின்றன என்கிறது ஒரு தகவல்! சரி அது என்னென்ன அப்படின்னு பார்ப்போம் வாங்க….

10. பல் மருத்துவர்– ஆமாங்க, பல் மருத்துவரிடம் செல்வது ஒரு வித பயத்தை உண்டாக்குவதாக சொல்கிறார்கள்!

[picapp src=”7/7/9/e/Health_Care_Divides_27f6.jpg?adImageId=6995980&imageId=6786468″ width=”234″ height=”345″ /]

9. சைனோஃபோபியா (cynophobia)– நாய்கள் பற்றிய பயத்தைத்தான் ஆங்கிலத்தில் சைனோஃபோபியா என்கிறார்கள்.

091023-snarling-dog-02

8. பறக்கும் பயம்– விமானத்தில் பறப்பது குறித்த பயம்!

[picapp src=”1/e/a/6/5d.JPG?adImageId=6997174&imageId=1350201″ width=”234″ height=”156″ /]

7. இடி மின்னல் பயம்– இது நம்ம எல்லோருக்கும் இருக்கிற பயம்தான் இல்லையா?

[picapp src=”d/a/4/c/Lightning_Strikes_Over_3e1a.jpg?adImageId=6997190&imageId=879475″ width=”234″ height=”143″ /]

6. நிக்டோஃபோபியா (Nyctophobia)– இருட்டு பற்றிய பயம். இத்தகைய பயங்கள் சிறு வயதில் தோன்றுவது இயற்கை என்றாலும், சரி செய்யப்படாவிட்டால் வாழ்க்கை முழுவதும் தொடரும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்!

[picapp src=”1/6/b/5/134th_Open_Championships_8dcd.jpg?adImageId=6997198&imageId=1423408″ width=”234″ height=”153″ /]

5. ஆக்ரோஃபோபியா (Acrophobia)– மிக அதிகமான உயரம் பற்றிய பயம். உதாரணத்துக்கு 100-வது மாடியின் மொட்டை மாடியில் நிற்பது!?

[picapp src=”5/2/c/c/Jennifer_Aniston_takes_11dd.jpg?adImageId=6997202&imageId=6110095″ width=”234″ height=”156″ /]

4. மேடைப்பேச்சு– பொதுமேடைகளில் பல்லாயிரக்கான மக்களின் முன் நின்று உரை நிகழ்த்துவது குறித்த பயம்!

[picapp src=”8/c/a/3/President_Obama_Speaks_a2b5.jpg?adImageId=6997246&imageId=6899211″ width=”234″ height=”153″ /]

3. அகரோஃபோபியா (Agarophobia)– ஆபத்து நேரங்களில் தப்பித்துச் செல்ல முடியாத, இக்கட்டான இடங்கள் குறித்த பயம்!

070619_elevator_02

2. எட்டுக்கால் பூச்சி பயம்- எட்டுக்கால் பூச்சிகள் அல்லது அதனை ஒத்த வடிவமுடைய பூச்சிகள் பற்றிய பயம்.இத்தகைய பயமானது, ஆண்களைவிட பெண்களுக்கு நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்! நீங்க எப்படி?

[picapp src=”5/9/7/f/Prince_William_And_64a9.JPG?adImageId=6997345&imageId=6507060″ width=”234″ height=”147″ /]

1. பாம்பு பயம்– எல்லாவற்றையும் விட முதன்மையான பயம் பாம்புகள் பற்றியது என்கிறார்கள்!

[picapp src=”d/c/b/2/snake_b88e.jpg?adImageId=6997442&imageId=5127030″ width=”234″ height=”156″ /]

இந்தச் செய்தியை முதலில் படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்ததென்னவோ கமல்ஹாசன் அவர்களின் “தெனாலி” திரைப்படக் காட்சிகள்தான்! எத்தனை அழகாக பல்வேறு பய உணர்வுகளை நம் கண்முன் கொண்டு வருவார் கமல் தெனாலியாக! அது சரி, உங்களில் எத்தனை பேருக்கு மேலே உள்ள பயங்கள் இருக்கின்றன? எனக்கு இருக்குப்பா….! 1, 5 & 6 இவைதான் எனக்கு உள்ள சில பயங்கள். இறுதியாக ஒரு சின்ன செய்தி. அதாவது, இத்தகைய பயங்களில் சில இயல்பானவை என்றாலும், தொடர்ந்து அத்தகைய பயங்கள் இருப்பது சில சமயங்களில் நோயாக பரிணமிக்கும் சிக்கல் இருப்பதால், அத்தகைய பயங்களை போக்க வழிவகை செய்துகொள்வது நலம்!

Advertisements