செல்போன் பயன்படுத்தினால் மூளைப்புற்றுநோய்?!

Posted on ஒக்ரோபர் 28, 2009

2


உண்மையைச் சொல்லனும்னா, இப்பெல்லாம் செல்போன் இல்லன்னா மனுஷனுக்கு வாழ்க்கையே இல்லங்கற நெலமதான்! ஆமாம் இல்லையா பின்ன? செல்போன் இருந்தா எதுவேணும்னாலும் பண்ணலாம்.செல்போன் கண்டுபிடிச்சது என்னவோ போற எடத்துக்கெல்லாம் எடுத்துகிட்டு போய் பேசறதுக்குதான்னாலும், இப்பொ நெலமையே வேற!? செல்போன் வச்சி நல்லதும் பண்ணலாம் கெட்டதும் பண்ணலாம், உங்களுக்குத் தெரியாதா என்ன? சரி, நம்ம மேட்டருக்கு வருவோம்.

அதாவது, செல்போன் பயன்படுத்தினா மூளைக்கு பாதிப்பு வரும் அப்படின்னு ரொம்ப நாளா ஒரு பேச்சு இருக்கு.அதுக்கு காரணம் செல்போன்கள் வெளியிடுகிற ஒரு வித ரேடியோ அலைகள்தான் (Radio frequency) அப்படின்னு சொல்லப்பட்டு வந்தது. இந்த செய்தி உண்மைதான்னு சொல்கிறது உலக சுகாதார மையம் (The World Health Organization (WHO)) நடத்திய பத்து வருட கால ஆய்வு ஒன்று! அது மட்டுமில்லீங்க, 10 வருடமோ அதுக்கும் மேலயோ பயன்படுத்தினா மூளைப்புற்று நோயே வரும் வாய்ப்பு இருக்குன்னும் கண்டுபிடிச்சிருக்காங்க!

ரேடியோ அலைகள் குறைவாக வெளியிடும் "சாம்சங் இம்ப்ரெஷன் போன்"

ரேடியோ அலைகள் குறைவாக வெளியிடும் "சாம்சங் இம்ரெஷன் போன்"

அடக்கடவுளே….இது என்னடா வம்பாப் போச்சு அப்படிங்கிறீங்களா? என்ன பண்றது உண்மைன்னா ஒத்துக்க வேண்டியதுதான். சரி வாங்க அது என்னன்னு கொஞ்சம் விரிவாப் பார்போம். அதாவது, உலக சுகாதார மைய ஆய்வாளர்கள், சுமார் 13 நாடுகளிலிருந்து, 12,800 மக்களின் செல்போன் பயன்பாட்டை 10 வருடமா தொடர்ந்து சோதனை செஞ்சுருக்காங்க.இந்த ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லைன்னாலும், டெலிக்ராஃப் அப்படிங்கிற இங்கிலாந்து பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில “பத்து வருடமோ அல்லது அதற்கும் மேற்பட்ட காலமோ  செல்போன் பயன்படுத்தினால் மூளைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறதென்று” ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்! இதற்கு காரணம் செல்போன்கள் வெளியிடும் ரேடியோ அலைகள்தான்னும் இந்த ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க.

இது இப்படின்னா, செல்போன் தயாரிக்கிற நிருவனங்களும், சில விஞ்ஞானிகளும் இந்த செய்தி உண்மையில்ல, செல்போன் பயன்படுத்துறதுனால ஒரு பிரச்சினையும் இல்லன்னு சொல்லியிருக்காங்க!? ஆமாம் இதுல எத நம்புறது நாம? ஒன்னும் புரியல இல்ல? எது எப்படியிருந்தாலும் செல்போன்ல இருந்து வெளிவர ரேடியோ அலைகள்னால கண்டிப்பா மூளைக்கு பாதிப்பு இருக்குன்னு ஆய்வாளர்கள் பல வருடமா சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க.அதனால, இந்த மாதிரி ஆய்வுகள் அவசியம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.இந்த ஆய்வுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? 30 மில்லியன் அமெரிக்கன் டாலர்!

சரி, இப்போ இந்த பதிவோட முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அதாவது, இதப்படிச்சிட்டு ஐய்யய்யோ….இப்ப என்ன பண்றது அப்படின்னு யோசிக்கிற நண்பர்கள் எல்லாருக்கும்,

1. இந்த செல்போன்  வெளியிடுற ரேடியோ அலைகள்னால எவ்வளவு பாதிப்பு வரும்?

2. அது எவ்வளவு அலைகள் வெளியிடுகிறது?

3. அதை எப்படி குறைக்கிறது?

இப்படி பல கேள்விகள் எழலாம்.அதுக்கு எல்லாம் விடை தெரிஞ்சிக்கனும்னா, நீங்க இந்த இணையதளத்துக்கு போனீங்கன்னா தெரிஞ்சிக்கலாம்! அதேசமயம், இந்த அலைகள்னால ஏற்படற பாதிப்புகள குறைக்கனும்னா, செல்போன்ல அதிகம் பேசுறத தவிர்த்து, அதற்கு பதிலாக குறுஞ்செய்தி  அனுப்புங்க அப்படின்னு பரிந்துரைக்கிறாங்க மருத்துவ வல்லுனர்கள்! மேலும் அலைவரிசை (அதாங்க சிக்னல்) குறைவா உள்ள பகுதிகள்ல செல்போன் பயன்படுத்தும்போது, ஸ்பீக்கர் போனையோ அல்லது ஹெட்செட்டையோ பயன்படுத்துங்க அப்படின்னு சொல்றாங்க!

உலக மக்கள்தொகையில் சுமார் 40 கோடி பேர் செல்போன் பயன்படுத்துறாங்க! அதுல கணிசமான அளவு குழந்தைங்க.அவங்களுக்கு மண்டை ஓடு மிக மிருதுவாக/மெல்லியதாக இருக்கும் என்பதால் இத்தகைய ரேடியோ அலைகளிலிருந்து மூளையைப் பாதுகாக்கும் திறன் குறைவே.அதனால பெற்றோர் என்ன பண்ணனும்னா குழந்தைங்களுக்கு ஹெட்செட் மற்றும் ஸ்பீக்கர் போன் இருக்கிற செல்போன் வாங்கிக்கொடுக்கிறது மட்டுமில்லாம அவங்கள ஹெட்செட் மற்றும் ஸ்பீக்கர் போனை அதிகமா பயன்படுத்தும்படி வலியுறுத்தனும்னு பரிந்துரைக்கிறாங்க மருத்துவ வல்லுனர்கள்!

எல்லாத்தையும் விட மிக முக்கியமான ஒரு செய்தி இருக்கு மக்களே! அதாவது, மிக குறைந்த அளவு ரேடியோ அலைகள வெளியிடுற செல்போன் எல்லாம் இருக்கு தெரியுமா உங்களுக்கு? அதப்பத்தி விரிவா தெரிஞ்சிக்க/எந்த செல்போன் வாங்கினா நல்லது அப்படிங்கிற விவரத்தை எல்லாம் தெரிஞ்சிக்க இங்க போய் பாருங்க

இத எல்லாம் பார்க்கும் போது எனக்கு ஒரு விஷயம் கொஞ்சம் திருப்தியா இருக்கு நட்புகளே.அது என்னன்னா “காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா” அப்படின்னு காசு பின்னால ஓடிக்கிட்டிருக்கிற செல்போன் நிறுவனங்களுக்கு மத்தியில அதே காசு குடுத்து அந்த செல்போன் வாங்குற மக்களையும் அவங்களோட உடல் நலத்தையும் கணக்கிலெடுத்து, குறைந்த அளவு ரேடியோ அலைகள் வெளியிடுற செல்போன்கள தயாரிக்கும் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்யுது! அத்தகைய நிறுவனங்களுக்கு நம் நன்றிகளும், பாராட்டுகளும்!

சரி நட்புகளே, கடைசியா ஒரு சின்ன குறுஞ்செய்தி. “எல்லாரும் கொஞ்சமா செல்போன் பயன்படுத்துவோம்! நோய் எதுவும் இல்லாம நீண்ட காலம் வாழ்வோம்!”

Advertisements