ஈகோ ஃபான்டும் உலகப் பாதுகாப்பும்?!

Posted on ஒக்ரோபர் 24, 2009

4


நண்பர்களே, நீங்கள் மிகவும் நல்லவர்கள் என்று உலகத்துக்கு காண்பிக்க வேண்டுமா? எப்படி காண்பிப்பீர்கள்? இப்படி கேட்டவுடன் நம்ம வடிவேல் மாதிரி “நான் ரொம்ப நல்லவேன்னு” எல்லார்கிட்டேயும் போய் சொல்லுவீங்களா?  சரி, நான் உங்களுக்கு ஒரு சுலபமான வழியைச் சொல்லுகிறேன்.ஆனால் விஷேசமென்னவென்றால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது நான் கூறப்போகும் இந்த யுக்தியில்! அதாவது, நீங்களும் பயனடைவதோடு, உலகத்துக்கும் உதவுகிறீர்கள் ஒரு வகையில்! அதெப்படி என்கிறீர்களா?  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.அதாவது, “ஈகோ ஃபான்ட்” என்னும் ஒரு எழுத்துரு கோப்பை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

ஒன்றும் புரியவில்லையா? சரி சற்று விளக்கமாகச் சொல்லுகிறேன்.அதாவது, “ஈகோ ஃபான்ட்” என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு வகை எழுத்துரு.இவ்வகை எழுத்துருக்களைப் பயன்படுத்துவதால் நமக்கு இருவகையில் லாபம். அதாவது, இவ்வகை எழுத்துருக்கள் 20% வரை ப்ரின்டர் இன்க்கை சேமிக்கிறது.அதேசமயம், உலகத்தையும் பாதுகாக்கிறது.இவை இரண்டும் எப்படி சாத்தியம் என்று அறிந்துகொள்ள நீங்கள் அந்த எழுத்துருவைக் காண வேண்டும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தைப் பாருங்கள்…..

07Qga

உங்கள் எம்.ஏஸ் வேர்டில்.....

என்ன நண்பர்களே இப்போது புரிந்ததா? பிற எழுத்துருக்களுக்கும் ஈகோ ஃபான்டுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்று கேட்டால், இதில் உள்ள ஓட்டைகள்தான்.அதாவது, இந்த ஓட்டைகள் இருப்பதால்தான் 20% வரை ப்ரின்டர் இன்க்கை சேமிக்க முடிகிறது. மேலும் பொருளாதார நெருக்கடி உள்ள இக்காலகட்டங்களில் உங்களின் அன்றாடத் தேவைக்கு பயன்படும் இன்க்கை சேமிப்பதன் மூலம் உலகுக்கும் நீங்கள் உதவுகிறீர்கள்! அனாவசியமாக ஒரு பொருளை அதிகம் பயன்படுத்துவதே உலக சுற்றுச்சூழலுக்கு ஒரு கேடுதான்.

இதை நீங்களும் பயன்படுத்த இங்கு சென்று முதலில் இந்த எழுத்துருவைத் தரவிறக்கம் செய்யுங்கள். பின்னர் உங்களின் செயலிக்கு (operating system) ஏற்றவாறு எழுத்துருவை (font) இன்ஸ்டால் செய்ய

விண்டோஸ் விஸ்டா என்றால் இங்கு செல்லுங்கள்

விண்டோஸ் எக்ஸ்.பி என்றால் இங்கு செல்லுங்கள்

மேக் ஓ.எஸ் என்றால் இங்கு செல்லுங்கள்

இந்த எழுத்துருவை பயன்படுத்தி நீங்களும் பயன்பெறுங்கள்! உலகுக்கும் உதவியாக இருங்கள்!

Advertisements