நீர்+சூரிய ஒளி+காற்று=மின்சாரம், இது நாளைய உலகின் கணக்கு!

Posted on ஒக்ரோபர் 23, 2009

17


இன்றைய காலகட்டங்களில்  உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் சேமித்து வைக்கும் பணம், பொருட்செல்வம் போன்றது என்றால் அது மிகையல்ல! எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு நம் அன்றாட வாழ்க்கைக்குள் அடங்குவது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு  ஏற்பாடுகள் குறித்த என்னுடைய சில பதிவுகளை படித்தீர்களானால் இதில் உள்ள உண்மை விளங்கும்.சுற்றுச்சூழலை பாதிக்கும் முதல் எதிரி எரி வாயு.அத்தகைய எரிவாயுவை எத்துனை குறைவாக பயன்படுத்துகின்றோமோ, அத்துனை குறைவாகவே நம் சுற்றுச்சூழலை நாம் பாதிக்கின்றோம்.

அதனால்தான் இன்றைய உலகின் தலையாய பணியானது, மக்கும் தன்மை கொண்ட பொருட்களான மரம், தாவரம் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எரி வாய்வு பயன்பாட்டிலிருந்து சுத்தமான, சுத்திகரிக்ககூடிய, சுழற்ச்சிக்குட்படும் தன்மை கொண்ட பல்வேறு பொருள்களிலிருந்து ( நீர், சூரிய ஒளி) தயாரிக்கப்படும் எரிவாய்வு பயன்பாட்டிற்க்கு முழுமையாக மாற வேண்டும் என்பது! அத்தகைய தொரு மாற்றத்திற்க்கு நாம் பெறக்கூடிய பலன் சுமார் 30 விழுக்காடு உலக சக்தியின் தேவையை குறைக்க முடியும் என்பதே. இந்த மாற்றத்திற்க்கு தேவையான தொழில்னுட்பம் தற்போது தயாராக இருப்பினும், சரியான திட்டமிடுதல் மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களினால் அது தடைபடுகிறது என்கிறார்கள்  கலிஃபோர்னியா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர் மார்க் டெலுச்சியும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் ஜேக்கப்சனும்!

அதெல்லாம் சரி, இவர்கள் ஏன் இதைச் சொல்லுகிறார்கள்? இது குறித்து ஏதேனும் செய்திருக்கிறார்களா இவர்கள் இருவரும்? ஆம்  நண்பர்களே, இவ்விருவரும் நிறையவே செய்திருக்கிறார்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்கு! அதாவது நான் மேற்குறிப்பிட்ட மாற்றத்திற்க்கு தடைகள் என்னென்ன,அவற்றை எப்படி சமாளிப்பது போன்றவை குறித்த இவர்களின் ஆய்வறிக்கை அடுத்த மாதம் வரவிருக்கும் “சைன்டிஃபிக் அமெரிக்கன்” அறிவியல் இதழில் வெளிவர இருக்கிறது.சரி, அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்கள் இவர்கள் சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்து?

இவர்களின் ஆய்வறிக்கையின் சாராம்சமானது உலகையே புரட்டிபோட இருக்கிறது நண்பர்களே! ஆம், இது ஒன்றும் “பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று” என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளல்ல! உலகத்தின் அன்றாட வாழ்க்கைப் போக்கையே தலைகீழாக மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட ஆய்வறிக்கை இது.அது எப்படி சாத்தியமென்று கேட்பீர்களானால் உலகை , காற்று,தண்ணீர் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றைக் கொண்டு உந்திச் செல்ல முடியும் என்பதற்கான  சாத்தியக்கூறுகள், தேவையான பொருளாதாரம் மற்றும் திட்டமிடுதல் பற்றிய ஒரு விளக்கவுரைதான் இந்த ஆய்வறிக்கை! மிக முக்கியமாக, இத்தகைய மாற்றத்தினால் அன்றாட தேவைக்கு (சக்தி) அணு ஆயதம் பயன்படுத்துவதைவிட இது மலிவானது என்கிறார்கள் இஅவர்கள்!  வாருங்கள் இது குறித்து மேலும் விளக்கமாகப் பார்போம்.

நீர்+சூரிய ஒளி+காற்று=மின்சாரம்!

நீங்கள் என்றாவது நீர்,காற்று மற்றும் சூரிய ஒளியின் உதவியோடு மட்டுமே உலக சக்தியின் தேவைகளை பூர்த்தியடையச் செய்ய முடியும் என்று நம்பியதுண்டா? நம் வாகன ஊர்திகளை நெருப்பின் உதவியில்லாமலேயே முற்றிலும் மின்சாரத்தின் உதவியோடு மட்டுமே இயக்க முடியும் என எண்ணியதுண்டா? இவ்விரண்டு கேள்விகளுக்கும் இதுவரை உங்களின் பதில் இல்லை என்பதுதானென்றால், அதை இனி நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.இதை நான் சொல்லவில்லை நண்பர்களே, மார்க் டெலுச்சி மற்றும் ஜேக்கப்சன் அவர்களின் ஆய்வறிக்கை சொல்கிறது!

சூரிய ஒளி

சூரிய ஒளி=மின்சாரம் (படம்:கூகுள்)

காற்றாலை=மின்சாரம்

காற்றாலை=மின்சாரம் (படம்:கூகுள்)

நீர்+சூரிய ஒளி+காற்று=மின்சாரம், என்பதன் சாத்தியக்கூறுகளுக்கான ஒரு உதாரணத்திற்க்கு இந்த காணொளியைக் காணுங்கள்…..


உங்களுக்குத் தெரியுமா, இன்றைய காலகட்டங்களில், நம் அன்றாடத் தேவைக்கு நாம் பயன்படுத்தும் எரிவாயுவில் இருந்து பெறப்படும் சக்தியானது 80% வெப்பமாக விரயமாகிறது.எஞ்சிய 20% மட்டுமே நம் தேவைக்கு பயன்படுகிறது.ஆனால்,இதுவே மின்சாரம் பயன்படுத்தும் போது 20% சக்தி மட்டுமே விரயமாகி, மீதமுள்ள 80% சக்தியானது அந்தந்த தேவைகளுக்கு முழுமையாக சென்றடைகிறது.இத்தகைய பயன்பாட்டினை வாகனங்கள், வீட்டுத் தேவைகள் போன்ற எல்லாவற்றுக்கும் ஏதுவாக்க முடியும் என்கிறார்கள்.என்ன, சொல்லவே இல்ல….அப்படிங்கிறீங்களா? எனக்கும் இதுவரைக்கும் தெரியாது சாமி!

இவர்களின் கணக்குப்படி, இன்றைய முறையில் நாம் தொடர்ந்து சக்தியினை பயன்படுத்துவோமாயின், 2030 ஆம் ஆண்டில் உலகின் சக்தியின் தேவை 16.9 டெரா வாட்ஸ்/மில்லியன் மெகா வாட்ஸாக இருக்குமாம்…..அடேங்கப்பா! ஆனால் அதேசமயம் இன்று எரிவாயு பயன்படுத்தும் எல்லா செயல்பாடுகளுக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் உலக சக்தியின் தேவையானது வெறும் 11.5 டெரா வாட்ஸுக்குள்ளேயே அடங்கி விடுமாம்.ஆஹா…..இது ரொம்ப நல்லாயிருக்கே! அப்படித்தானே? ஆனால் முற்றிலும் மின்சாரம் பயன்படுத்த முடியாமல் கொஞ்சம் எரிவாயுவினையும் கலந்து பயன்படுத்துவோமாயின் உலக சக்தியின் தேவையானது வெறும், 5 டெரா வாட்ஸாகத்தான் இருக்கும் என்று “வயிற்றில் பாலை வார்க்கிறார்கள்” இந்த மார்க் சகோதரர்கள்! இது எப்படி இருக்கு?பரவாயில்லையே….!

அதெல்லாம் சரி…..

1.இத்தகைய மின்சார சக்தியை பயன்படுத்தும் ஒரு பெரிய உலக மாற்றத்தினை அடைய நாம் என்னென்ன செய்ய வேண்டும்?

2.எவ்வளவு செலவு பிடிக்கும்? உண்மையாக இது சாத்தியமா?

3.அப்படிச் சாத்தியமென்றால் இந்த முயற்ச்சி முழுமையாக வெற்றிபெற எவ்வளவு வருடங்கள் ஆகும்?

போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காண இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவில் சந்திப்போம்.அதுவரை வலைப்பதிவுடன் இணைந்திருங்கள்.

இப்பதிவின் தொடர்ச்சியில் மீண்டும் சந்திப்போம்…..வருகைக்கு நன்றி!

Advertisements