இந்த அதிசயத்திற்கு வயது நான்குதான்….

Posted on ஒக்ரோபர் 21, 2009

4


“குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்றார் நம் வள்ளுவப் பெருந்தகை.மழலைச்சொல்லே அத்துனை இனிது எனும்போது மழலையின் பாடலை கேட்டால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக, “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்பதுபோல செந்தமிழானது மழலையின் மொழியில் கலந்து பாடலாய் வந்தால் தேன் மட்டுமல்ல, அமுதமே காதினிலே பாய்வதுபோல இருக்கும் என்பது எந்த சந்தேகமுமில்லை! இப்போ நீ என்னதான் சொல்ல வர்றன்னு உங்கள்ல சிலபேர் கேட்கற மாதிரி எனக்கு கேட்குது, அதனால நான் முன்னுரையை முடிச்சுகிட்டு பதிவுக்கு வந்துடறேன்.

கெய்ட்லின் மேஹெர்

கெய்ட்லின் மேஹெர்

ஆமாம், அதிசயத்துக்கு கூட வயது இருக்கிறதா? அது எப்படி என்கிறீர்களா? உண்மைதாங்க கெய்ட்லின் மேஹெர் என்னும் இந்த அதிசயத்துக்கு வயது வெறும் நான்குதான்! யாரு இந்த கெய்ட்லின் மேஹெர்? ஹாலிவுட் நடிகையா….டென்னிஸ் வீராங்கனையா….கின்னஸ் சாதனையாளரா….பாப் பாடகியா? ஆமாம், நீங்க “அமெரிக்கா காட் டேலன்ட்” அப்படி ஒரு நிகழ்ச்சியைப் கேள்விப்பட்டது/பார்த்தடுண்டா?  ஆமாம் என்றால் கெய்ட்லின் யாரென்று உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.இல்லையென்றால் சரி நானே சொல்லிவிடுகிறேன். நான்கு வயதே ஆன கெய்ட்லின் ஒரு பாப் பாடகி! அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? அதற்கு விடை காண  நீங்கள் இந்த காணொளியைப் பாருங்கள்…..

இப்பொழுதாவது நம்புகிறீர்களா? அதாவது, “அமெரிக்கா காட் டேலன்ட்” என்னும் இந்த உலகப் புகழ் பெற்ற போட்டியின் (Reality show) வரலாற்றில் முதல் முறையாக,நான்கே வயதான ஒரு குழந்தை பாடியது என்பதே யாராலும் நம்ப முடியாத ஒரு அதிசயம்.பாடியது மட்டுமல்லாமல், போட்டியில் பங்குபெற்ற பல சக போட்டியாளர்களைத் தோற்கடித்து, இறுதி கட்டத்துக்கு முன்னேறினார் என்பதே பலராலும் நம்ப முடியாத ஒரு உண்மை! ஆனால் குழந்தை என்பதற்காக அவருக்கு எந்த ஒரு சலுகையோ, விதி விலக்கோ அளிக்கப்படவில்லை என்பதுதான் விஷேசம்!அசந்துபோனது போட்டியைக் கண்ட பார்வையாளர்கள் மட்டுமல்ல, போட்டியை நடத்திய நீதிபதிகளும்தான்!

இந்த உலகப் புகழ் பெற்ற போட்டியில் பங்கு பெற்று கலக்கிய கெய்ட்லின் பாட ஆரம்பித்தது எப்போது தெரியுமா? ஒரு வயதில்! நம் குழந்தைகள் ஒரு வயதில் பேசிவிட்டாலே நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம்.இவர் பெற்றோரின் மகிழ்ச்சியை கேட்கவா வேண்டும்? ஒரு வயது முதல் பாடிய கெய்ட்லின், இன்று உலகில் பல கோடி விசிறிகளைப் பெற்ற ஒரு நட்சத்திரப் பாடகி! அதுமட்டுமல்ல , கெய்ட்லினின் திரைப்படம் ஒரு 2010-ல் டிஸ்னி நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது! கேய்ட்லினைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்

இன்று, 5 வயதான கேய்ட்லின் உலக அளவில் பிரபலமான ஒரு பாடகி. இவரைப்பற்றி பல இணையதளங்கள் இருந்தாலும் இவருக்கென்று பிரத்தியேகமாக ஒரு இணையதளம் இருக்கிறது. அதுwww.kaitlynmaher.com.இங்கு கெய்ட்லினின் புகைப்படங்கள், தகவல்கள் போன்றவற்றை நீங்கள் பார்க்கலாம்.இது எல்லாவற்றுக்கும் மேலாக கெய்ட்லின் ஃபேஸ்புக், ட்விட்டர்,மை ஸ்பேஸ் என  எல்லா வலைப்பின்னல் தளங்களிலும் பூந்து விளையாடுகிறார்!

என்னங்க இப்போ புரியுதா நான் ஏன் இவரை நான்கு வயதான அதிசயம் என்று குறிப்பிட்டேன் என்று? நாலு வயசிலேயே இந்தக் கலக்கு கலக்கும் கெய்ட்லின், 20 வயதில் எப்படிக் கலக்கப்போகிறார் என்று உலகம் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது!

Advertisements