உலகின் முதல் ப்ளேடுகளற்ற அதிநவீன காற்றாடி/காற்றுப்பெருக்கி

Posted on ஒக்ரோபர் 14, 2009

13


உலகின் தொழில்னுட்ப முன்னேற்றம் படுவேகமாகச் சென்றுகொண்டிருப்பதாகத்தான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் இல்லை அது “காற்று” வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்கிறார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்/பொறியாளர் திரு.ஜேம்ஸ் டைசன்! என்னங்க ஒன்றும் புரியவில்லையா? எங்களுக்கு குத்துச் சண்டை வீரர், மைக் டைசனைத்தான் தெரியும், ஜேம்ஸ் டைசன் எல்லாம் தெரியாது என்று சொல்பவரா நீங்கள்? ஆம் என்றால், முதலில் உங்களுக்கு ஜேம்ஸ் டைசன் பற்றிய ஒரு சிறு குறிப்பைத் தருகிறேன்.

சர்.ஜேம்ஸ் டைசன் தன் கண்டுபிடிப்புடன்
சர்.ஜேம்ஸ் டைசன் தன் கண்டுபிடிப்புடன்

குத்துச் சண்டை விளையாட்டு வீரர் மைக் டைசன் அவர்கள் உலகில் எவ்வளவு பிரபலமோ அவ்வளவு அல்லது அதைவிட பல மடங்கு பிரபலமானவர்தான் இந்த ஜேம்ஸ் டைசன் என்பவர்.இவர் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி/பொறியாளர்.தன் கண்டுபிடிப்புகள் மூலம் உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஜேம்ஸ் அவர்களின் பிரபலமான ஒரு கண்டுபிடிப்பு ,இன்று நமக்கு முதுகுப்பிடிப்பு ஏற்படாமல், நம் வீடுகளை சொகுசாக சுத்தம் செய்ய பயன்படுகிறது நண்பர்களே.இன்னும் புரியவில்லையா? அதாங்க “வேக்யூம் க்ளீனர்”! சரியாகச் சொல்ல வேண்டுமானால் “டியூவல் சைக்லோன் வேக்யூம் க்லீனர்” (Dual cyclone bagless Vacuum cleaner) என்ற அதி நவீன சுத்தம் செய்யும் கருவியின் கண்டுபிடிப்பாளர் என்றே இவரை உலகம் அறிகிறது! இவரைப் பற்றிய விலாவரியான செய்திகளுக்கு இங்கு செல்லுங்கள்.

சரி நாம் செய்திக்கு வருவோம். நம்ம எல்லோருக்கும் மூடி இல்லாத காற்றாடி, வையர் இல்லாத(ரிமோட்) காற்றாடி தெரியும் அது என்ன ப்ளேடு இல்லாத காற்றாடி? அதாவது உலகின் முதல் காற்றாடி 1860-களில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.அது பெரிய எந்திர உதவியுடன், தகடுகள் பொருத்தப்பட்ட சக்கரம் போன்ற அமைப்புள்ள, சுழலும் தன்மையுள்ள எந்திர பாகங்களுடன் உருவாக்கப்பட்டது.அன்று முதல்(1860) நேற்று வரையில் உள்ள எல்லா காற்றாடிகளுமே தகடுகள்(ப்ளேடு) பொருத்திய சக்கரம் கோண்டே வடிவமைக்கப்பட்டு வந்துள்ளது.இது சுமார் இரண்டு நூற்றாண்டுகளாய் தொடரும் ஒரு தொழில்னுட்ப நிகழ்வு.இதில் எந்த வித தொழில்னுட்ப முன்னேற்றமும் இல்லை 200 ஆண்டுகளாய் என்பதை நாம் இங்கு கருத்தில் கொள்வது அவசியம்! ஆனால் முதல் முறையாக திரு.ஜேம்ஸ் டைசன் அவர்கள் ப்ளேடுகளே இல்லாத உலகின் முதல் காற்றாடி/காற்றுப்பெருக்கியை (காற்றாடியை காற்றுப்பெருக்கி என்றும் குறிப்பிடுவது உண்டு ஏனென்றால் சுற்றுச்சூழலில் உள்ள சிறு காற்றுக் கூட்டங்களை ஒன்றாக்கி/பெருக்கி ஒரே திசையில் மிகுதியான காற்றை அளிப்பதனால்!) கண்டுபிடித்துள்ளார்.

அதெல்லாம் சரி, ப்ளேடுகள் உள்ள காற்றாடிக்கும், ப்ளேடுகளற்ற காற்றாடிக்கும் அப்படியென்ன பெரிய வித்தியாசம்.அல்லது அதனால் என்ன பயன் நமக்கு என்று கேட்பீர்களேயானால் கீழ்வரும் விளக்கத்தை படியுங்கள் புரியும். அதாவது,

ப்ளேடு உள்ள காற்றாடியின் அசவுகரியங்கள்

1. மிகுதியான காற்றினை ஒரே திசையில் வேகமாக வெளியிடுவதால் “முகத்தில் அடித்தாற்போல்” என்று சொல்வது போன்று முகத்தில் காற்றினால் அறைவது போன்று ஒரு உணர்வினை/அசவுகரியத்தினை ஏற்படுத்துவது

2. வேகத்தை மாற்றினாலும் எதிர்பார்த்த அளவு மாற்றமில்லாமல் காற்று வெளியிடுவது

3. தவறுதலாய் அல்லது எதிர்பாராத விதமாய் பெரியவரோ, சிறுவர்/குழந்தைகளோ தங்கள் கைகளை காற்றாடிக்குள் விட்டு விரல்கள் துண்டாகிப்போய்விடும் அபாயம்

என பல அசவுகரியங்களை பட்டியலிடுகிறார் திரு.ஜேம்ஸ். வாருங்கள் பார்ப்போம் திரு.ஜேம்ஸ் அவர்கள் தன் புதிய கண்டிபிடிப்பான ப்ளேடுகளற்ற அதி நவீன, புது யுக காற்றாடி பற்றி என்ன கூறுகிறார் என்று….

இந்த காற்றுப்பெருக்கி/காற்றாடியின் செயல்பாடு, பயன்கள் பற்றி விரிவாக அலசி ஆராய்கிறார்கள் , உலகின் நவீன தொழில்னுட்ப கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் இந்த இரு தொலைக்காட்சி வர்ணனையாளர்கள்……

இந்தக காற்றாடி/காற்றுப்பெருக்கியின் மற்றுமொரு செயல்முறை விளக்கக் காணொளியைக் காணஇங்கு செல்லுங்கள்

அதெல்லாம் இருக்கட்டும் இந்த புது காற்றாடி எப்பொழுது கடைகளில் கிடைக்கும்? இதன் விலை இந்தியாவில் எவ்வளவு ? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண, நாம் சில காலம் பொறுத்திருக்க வேண்டுமென்றாலும்  தற்போதைக்கு அமெரிக்க கடைகளில் இதன் விலை 299 டாலர் முதல் என்கிறார் ஜேம்ஸ்.என்ன பரவாயில்லையே! என்கிறீர்களா? இல்லை அடேங்கப்பா ஒரு காற்றாடிக்கு இவ்வளவு விலையா என்கிறீர்களா?  நீங்கள் என்ன சொன்னாலும் பவர் சோப் விளம்பரத்துல வர்ற மாதிரி பொருள் நல்லா இருந்தா என்ன விலையாயிருந்தாலும் வாங்கித்தானே ஆகவேண்டும் என்று நான் சொல்லலீங்கோ!

மீண்டும் மற்றுமொரு அறிவியல் கண்டுபிடிப்புப் பற்றிய பதிவில் சந்திப்போம்!

Advertisements