நெசமா….நாந்தானா….?!

Posted on ஒக்ரோபர் 8, 2009

0


சமீபத்துல ஒரு தெலுங்கு பாட்டை நண்பன் ஒருவன் யூட்யூப் லின்க் கொடுத்து பார் எனச் சொன்னான். நானும் பார்த்தேன்/கேட்டேன் .இது பொதுவா எங்களுக்கு இரண்டு வருடங்களாக பழக்கமான ஒன்று.ஆனால் இதுவரை தமிழ்,தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, ஆங்கிலம் என எத்தனையோ பாடல்களை அவன் எனக்கு பலமுறை பரிந்துரை செய்ததுண்டு. அவற்றை சில சமயங்களில் உடனே பார்ப்பதும்/கேட்பதும் உண்டு.பிறகு, “ம்ம்ம்…என்ன எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு” அப்படியென்று நினைத்து மீண்டும் அன்றாட வேலைகளில் மூழ்கிப்போவேன்.ஆனால் இம்முறை நண்பன் அனுப்பிய பாடலை கண்டு/கேட்டுவிட்டு அப்படிச் சென்றுவிட முடியவில்லை!

ஏனோ, இந்தப் பாடல் காட்சியும், வரிகளும் மனதை எங்கோ கொண்டுசென்றுவிடுகின்றன.மீண்டும்  ஒரு “நியாபகம் வருதே….நியாபகம் வருதே! பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த……நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே!” போன்று இதயத்தை ஏதோ ஒன்று இதமாக/ரகசியமாக வருடிச் சென்ற ஒரு உணர்வு! இந்தப் பாடலில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால், “அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சலை…..அவ நெறத்தப் பாக்க செவக்கும் செவக்கும் வெத்தலை” என்று தமிழ்நாட்டில் பல பேரைத தங்கள் அஞ்சலைகளை தேட வைத்த காந்தக் குரலோன் கார்த்திக்தான் இந்தப் பாடலையும் பாடி இருக்கிறார் நண்பர்களே!

சரி இந்த சுகத்தை?! நான் மட்டும் அனுபவித்தால் போதுமா? யான் பெற்ற இன்பம்….பெருக இவ்வையகம்! ஆனால் வெறுமனே உங்களை தெலுங்கு பாட்டை கேட்டுவிட்டுச் செல்லுங்கள் எனச் சொல்லப்போவதில்லை நான்! பின்ன, அப்படிங்கறீங்களா? சிங்கம்ல…..மொழிபெயர்ப்பு பண்ணுவோம்ல….?! அய்யய்ய….பயப்படாதீங்க! நீங்க ரசிக்கிற மாதிரி இருக்கும்ங்க……அதுக்கு முதல்ல இந்த பாட்டப் பாருங்க/கேளுங்க! அப்புறம் பாட்டைத் தமிழில் பாடிப்பாருங்கள்…..கடைசியில கண்டிப்பா நீங்க என்னத்தேடுவீங்க……ஏன்னு கேக்கறீங்களா? சொல்றேன் பாட்டைப் பாருங்க/கேளுங்க!

நெசமா…… நாந்தானா….

இப்படி உம்மனசுலதான் இருக்கேனா……

இதெல்லாம்……காதல்தானா….

எத்தனை கனவுகள் காண்கின்றேனா……

எதிலோ யாரோ சேர்ந்து…..இதையெல்லாம் செய்கின்றாரோ

என் பின்னே பின்னே இருந்து…..

உன்மீது என்னைத் தள்ளுகின்றாரோ……

என்னங்க…. இப்பவே கண்ணக்கட்டுதா? எனக்கும் தாங்க….! சரி நமக்கெதுக்கு இந்த தெலுங்கு பாட்டை மொழிபெயர்க்கற வேலையெல்லாம்? இனிமேல் பாட்டைக் கேட்டோமோ அதப்பத்தி  நம்மக் கருத்து நாலு சொன்னோமானு இருக்கனும்னு முடிவு பண்ணிட்டேங்க!

இன்னுமா என்னத் தேடுறீங்க……??!

Advertisements