ஒரு பட்டாம்பூச்சி

Posted on ஒக்ரோபர் 7, 2009

0


butterfly_watching

ஒன்றை ஒன்று மிஞ்சும் அழகுடன்

பூத்து குலுங்கிய உந்தன் மலர்களெல்லாம்

இறந்து போயின!

எப்போதும் சுட்டெறித்து பயமுறுத்தும்

கருணையற்ற சூரியனும் சென்றுவிட்டான்

எனை மட்டும் காப்பாற்று….

எனை மட்டுமேனும் காப்பாற்று!

இறந்துபோன உந்தன் மலர்களுக்காக

துக்கம் அனுசரிக்க….

இந்த சோலையிலே இனி வேறு யாருமல்ல

எனை மட்டுமேனும் காப்பாற்று!

-பத்மஹரி

Advertisements
குறிச்சொற்கள்: , ,