உங்கள் “ட்வீட்” உங்கள் “டீ-ஷர்ட்டில்”

Posted on ஒக்ரோபர் 1, 2009

8


இன்றைய உலகம் காலையில் எழுந்து பல் தேய்த்து காலைக் கடன்களை முடித்து பிழைப்பைத் தேடிச் செல்கிறதோ இல்லையோ,ஆனால் ட்விட்டரில் “ட்வீட்டும்”, ஃபேஸ்புக்கில் மெசேஜ்ஜும் தவறாமல் செய்கிறது ஒரு நாளில் பலமுறை அல்லது நாள்முழுதும்! அந்த வகையில் பார்த்தால் இன்று ட்விட்டரும்,ஃபேஸ்புக்கும் பலரின் அன்றாட வாழ்வில் அத்தியாவசியமான ஒரு அங்கமாகிவிட்டது என்றே சொல்லவேண்டும்.சரி, அதுக்கு என்ன இப்போ அப்படின்னு கேட்கிறீர்களா? மேற்கூறிய உலகின் ஒரு அங்கமா நீங்களும்? (அதாங்க ட்விட்டர்/ஃபேஸ்புக் உலகம்!) ஆம் என்றால் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது ட்விட்டரில் இருந்து.ஆமாங்க ட்விட்டரில் இருந்து ஒரு புதிய, சுவாரசியமான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!

நீங்கள் ஒரு சிறந்த ட்விட்டரா? அதாவது பல சுவாரசியமான, எல்லோரும் ரசிக்கும்படியான ட்வீட்களை(குறுஞ்செய்திகள்) தினமும் வெளியிடுபவரா? உங்கள் பதில் ஆம் என்றால் நீங்கள் பிரபலமாகப் போகிறீர்கள், குறைந்த பட்சம் உங்கள் ட்வீட்கள் கண்டிப்பாக உலகை வலம்வரப் போகின்றன! எப்படி என்கிறீர்களா? “த்ரெட்லெஸ்”(Threadless), என்பது ஒரு டீ-ஷர்ட் வடிவமைக்கும் நிறுவனம்.இது எப்படி இயங்குகிறது என்றால், உலக மக்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு ஒரு குழு அமைத்து, அந்த குழுவில் உறுப்பினராக இருக்கும் நபர்கள் அளிக்கும் வடிவமைப்புகளை தேர்வு செய்து, பின் அதில் சிறந்ததை மட்டும் உலகின் பார்வைக்கு தருகிறார்கள்.அதில் உங்களுக்கு பிடித்ததை, நீங்களே தேர்வு செய்து நீங்கள் டீ-ஷர்ட் ஆர்டர் செய்யலாம்!  அது சரி இந்த நிறுவனத்துக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இந்த  நிறுவனம் பற்றியதுதாங்க செய்தியே! மேலே படிங்க….

அதாவது இந்த த்ரெட்லெஸ் நிறுவனம் தற்போது ட்விட்டருடன் இணைந்து ஒரு புதிய, கவர்ச்சிகரமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.அது என்னவென்றால், உங்கள் ட்விட்டரில்  நீங்கள் செய்யும் ட்வீட்களை  உங்கள் டீ-ஷர்டில் நீங்கள் பதித்து பயன்படுத்தலாம் இப்பொழுது!.இது எப்படி இருக்கு? கண்டிப்பாக கேட்பதற்கே சுவாரசியமாகத்தான் இருக்கு.ஆனால் அதை செயல்படுத்த நீங்கள் ஒரு வேலை செய்ய வேண்டும்.அதாவது http://twitter.threadless.com/என்ற இணையதளத்துக்கு சென்று அங்கு ஒரு உங்கள் ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி உள் செல்ல வேண்டும்.பின்னர் உங்கள் ட்வீட்களை அங்கு சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் சமர்ப்பிக்கும் ட்வீட்களை மக்கள் வாக்களிக்குமாறு வெளியிடும் இந்த இணையதளம்.இதில் மூன்று விதமான வசதிகள் உண்டு.

  1. நீங்கள் செய்யும் ட்வீட் அல்லது உங்களுக்கு பிடித்த வேறொருவருடைய ட்வீட், இவற்றிலிருந்து எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து உங்கள் டீ-ஷர்டுக்கான ஆர்டரை நீங்கள் செய்யலாம்.
  2. நீங்கள் தேர்வு செய்து பரிந்துரைக்கும் ஒரு ட்வீட் பதிவிடப்பட்டு ஒரு டீ-ஷர்டாக விற்பனையாகப் படுமானால் அப்படி நீங்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொறு ட்வீட்டுக்கும் 140 அமெரிக்கன் டாலர் உங்களுக்கு அளிக்கப்படுகிறது! எப்புடீ?
  3. இந்த இணையதளத்தின் வழியாகும் பிரபலமாகும் உங்களின் ஒவ்வோறு ட்வீட்டும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஒரு டீ-ஷர்டாக விற்பனையாகுமானால், அந்த ஒவ்வொறு டீ-ஷர்டுக்கும் உங்களுக்கு 500 டாலர் பரிசளிக்கிறது இந்த நிறுவனம்!

என்னங்க யாரையுமே ஆளைக்காணோம்? ஒஹோ, பதிவை படித்து முடிக்குமுன்பே ட்வீட் செய்ய ட்விட்டருக்கு சென்று விட்டீர்களா?

சரி உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! சென்று, பல பரிசுகளை வென்று வாருங்கள்!!

Advertisements