அழகிய மர்மமா மெர்லின் மன்றோ-2

Posted on செப்ரெம்பர் 29, 2009

0


மெர்லின் மன்றோவின் வரலாற்றை சற்றே வித்தியாசமான கோணத்தில் நோக்கும் எண்ணத்தோடு தொடங்கிய இந்த பதிவின் (முந்தைய பதிவை இங்கே படிக்கவும்) தொடர்ச்சியில் நீங்கள் வாசிக்க இருப்பது மெர்லின் மன்றோவின் பிறப்பு தொடங்கி இறப்பு (தற்கொலை) வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு!

1926, ஜூன் மாதம் 1நார்மா ஜீன் மோர்டென்சன்(மெர்லின் மன்றோ) லாஸ் ஏஞ்ஜலீஸ், கலிபோர்னியாவில் பிறக்கிறார்!

1935,செப்டம்பர்– நார்மா ஜீன் அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்படுகிறார்

1937,ஜூன் 27– அனாதை ஆசிரமத்தை விட்டு வெளியேறி க்றேஸ் மெக்கீயுடன் வாழ்கிறார்

1939, நவம்பர்– அன்னா லோவருடன் வாழ்கிறார்

1942,ஜூன் 19-தன் பக்கத்து வீட்டில் வாழும் ஜேம்ஸ் டக்கர்டியை மணம் முடிக்கிறார்

1944, ஏப்ரல்-ரேடியோ ப்ளேன் ம்யூனிஷன்ஸ் ஃபாக்டரியில் வேலைக்கு சேர்கிறார்.

1946,ஏப்ரல் 26-முதன் முதலில் ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் தோன்றுகிறார்

ஜூன் 26– டேவிட் கானோவர் என்னும் புகைபடக்காரரால் “யான்க் மேகசீன்” என்னும் பிரபல பத்திரிக்கைக்காக படம்பிடிக்கப்படுகிறார்.

ஜூலை 17– பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் “20 சென்ச்சுரி ஃபாக்ஸுடன்” தன் முதல்  நேர்காணலை மேற்கொள்கிறார்

ஜூலை 19-முதன்முறையாக நடிப்பதற்கான ஸ்க்ரீன் டெஸ்டில் கலந்து கொள்கிறார்

ஜூலை 29-முதன்முறையாக ஹாலிவுட்டின் கிசு கிசு செய்திகளில் இடம்பிடிக்கிறார்.

ஆகஸ்டு 2“ப்ளூ புக்” எனும் மாடலிங் நிறுவனத்துக்கு விண்ணப்பிக்கிறார்

ஆகஸ்டு 26– “20 சென்ச்சுரி ஃபாக்ஸுடன்” தன் முதல் திரைப்பட ஓப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் மெர்லின் மன்றோவாக! (பெயர் மாற்றம் செய்துகொண்டு)

செப்டம்பர் 13-தன் முதல் கணவர் ஜிம்மி டக்கர்டியிடமிருந்து விவாகரத்து பெற்று விலகுகிறார்.

1948, மார்ச் 9– கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் தன் ஒப்பந்தத்தை தொடங்குகிறார்.

டிசம்பர் 31-ஜான் ஹைடியை, (பிற்காலத்தில் தன் வாழ்க்கையே மெர்லினின் திரைவாழ்க்கை முன்னேற்றத்திற்கு அர்பனிக்கப் போகும் ஒரு மனிதனை ) சந்திக்கிறார்.

1949, ஆகஸ்டு 15-தன் முதல் திரைப்படமான “எ டிக்கெட் டு டோமொஹாக்” திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார்!

அக்டோபர்-பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “எம்.ஜி.எம்”மின் “தி அஸ்ஃபால்ட் ஜங்குல்” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிறார்!

1950,ஜனவரி 5“தி ஃபயர்பால்” என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார்.

ஏப்ரல்“ஆல் அபவுட் ஈவ்” என்னும் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் செய்யும் வாய்ப்பு

டிசம்பர் 10– 20 சென்ச்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்துடன் ஏழு வருட ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்கிறார்!

இதன் பின்னர், மெர்லின் வாழ்க்கை எப்படி பயணப்பட்டது?

அவர் சந்தித்த சந்தோஷங்கள், துயரங்கள் என்ன?

அவரின் மணவாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள்……

இவற்றை அறிய, இந்த கட்டுரையின் தொடர்ச்சியை வரும் வாரங்களில் எதிர்பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம் மெர்லினுடன்…..

Advertisements