மனிதனிலிருந்து குரங்கு வருமா…..

Posted on செப்ரெம்பர் 27, 2009

6


பரிணாமம் பின்னோக்கி சென்றதுண்டா?

பரிணாமம் முன்னோக்கி மட்டுமே செல்லும்

பரிணாமம் பின்னோக்கி செல்லாதது ஏன்? விடை சொல்கிறது சமீபத்திய ஆராய்ச்சி”

பரிணாமம், என்பது இதுவரை நான் படித்த வரையில் ஒரு செல் உயிரி, பல செல் உயிரி, புழுக்கள், மீன்கள்…….மனிதன் என முன்னோக்கி மட்டுமே செல்வதாக கூறப்பட்டது.ஆனால் இயற்கை ஒன்றும் நாம் நினைப்பது போல அவ்வளவு சாதாரணமானது அல்ல.ஆம், நாம் அறியாதது என்று எவ்வளவோ உள்ளது.எனவே, நாம் படித்ததை வைத்து ஆம், பரிணாமம் முன்னோக்கி மட்டுமே செல்லும் தன்மை கொண்டது என உறுதியாக கூறமுடியாது.ஒரு பேச்சுக்கு, ஏன் பரிணாமம் பின்னோக்கி செல்லாதா அல்லது செல்லக்கூடாதா என்றால் தெரியாது என்பதுதான் இதுவரையிலான பதிலாக இருந்தது.

அது பாமரானாகட்டும், படித்தவராகட்டும் ஏன் பரிணாம உயிரியல் ஆய்வாளர்களாக கூட ஆகட்டும் பதில் ஒன்றுதான்.இதே கேள்வியைத்தான் ஆய்வாளர்களும் இது நாள் வரை கேட்டுக்கொண்டார்கள்.ஆனால் அதை கண்டு அறிய போதிய வசதியும், தெளிவும் இல்லாததால் இதுவரை விடை தெரியாத, புரியாத புதிராகவே இருந்து வந்தது இந்த கேள்வி! மேலும் ஆய்வை மேற்கொள்ள பல லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களின் உடலோ, பகுதிகளோ இல்லாததும் ஒரு முக்கியமான காரணம்! ஆனால் அந்த குறைபாடுகளை களைந்து, தொழில்னுட்ப முன்னேற்றத்தின் உதவியோடு இன்று அத்தகைய ஆய்வை மெற்கொள்ள முடியும்.எனவேதான் இதன் உண்மையை அறிய ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள் பரிணாம உயிரியல் ஆய்வாளர்கள்.

ஆய்வின் செய்முறைக் குறிப்பு

40 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, முதுகெலும்புள்ள உயிரிகளின் ஒரு முக்கிய மரபனுவின் முழு வடிவத்தை கணினி, மரபனு உற்பத்தி, புரதப் பொறியியல் என பல உயிர்தொழில்னுட்ப யுக்திகளின் உதவியுடன் மீண்டும் உருவாக்கி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கண்டறியப்பட்டதாவது:

1.பரிணாமம் என்பது முன்னோக்கி மட்டுமே செல்லும் தன்மை உடையது.அது பின்னோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் எதுவும் இயற்கையில் இல்லை.அதாவது “mutation” எனப்படும் மரபனுவில் ஏற்படும் மாற்றமானது பரிணாமம் பின்னோக்கி செல்லக்கூடிய வாய்ப்புக்கு இடமின்றி செய்துவிடுகிறது என்கிறார்கள் பரிணாம ஆய்வாளர்கள்.

2.மேலும் இந்த ஆய்வானது பரிணாமம் பின்னோக்கி செல்லக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் இயற்கையிலேயே தடுக்கப்பட்டு/மூடப்பட்டு உள்ளன.இதனால் பரிணாமமானது முன்னோக்கி மட்டுமே செல்லும் எனக் கூறப்படுகிறது.

சரி இதிலிருந்து என்ன தெரிகிறது? குறங்கிலிருந்துதான் மனிதன் வர முடியுமேயன்றி மனிதனிலிருந்து குறங்கு வருவதற்கான வாய்ப்பு ஒரு போதும் இல்லை என்பது தெளிவாகிறது!

வருகைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்!

மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்

Advertisements