13 வயதே ஆன யுகரத்னா ஐக்கிய நாடுகள் சபையில்

Posted on செப்ரெம்பர் 24, 2009

4


ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற உலக மாநாடு அமெரிக்காவின்  நியூயார்க்கில் கடந்த செவ்வாயன்று(செப்.22,2009) நடந்தது.ஆமா அது அடிக்கடிதான் நடக்குது அதுக்கென்ன இப்போ அப்படிங்கிறீங்களா? அதான் இல்ல.இந்த முறை நடந்த அந்த மாநாட்டில் நாம் பெருமைப்படும் அளவுக்கு ஒரு விஷயம்  நடந்துள்ளது.ஆமாங்க, நம்ம லக்னோ மானிலத்தைச் சேர்ந்த 13 வயதே ஆன யுகரத்னா என்ற சிறுமி கலந்து கொண்டு பருவ நிலை மாற்றம் பற்றியும், அதனால் நாமும், முக்கியமாக நம் வருங்கால சந்ததியும் சந்திக்க இருக்கும் ஆபத்துகளையும் பற்றி பேசி பின்னி பெடெலெடுத்திருக்கிறார்.என்ன…நம்ம எல்லோரும் மார்தட்டி சொல்லிக்கிற அளவுக்கு ஒரு பெரிய விஷயம்தானே? ம்ம்ம் என்ன பெரிய…அப்படின்னு யோசிக்கிறவங்க எல்லாரும் கீழே உள்ள காணொளியைக் கொஞ்சம் பாருங்களேன்…..

இதுமட்டுமல்லாமல் அவரின் உரையை அவரே எழுதி பின் தெரிவு செய்யப்பட்டு தான் உரையாற்றியதாகவும் கூறியுள்ளார் இந்த யுகரத்னா எனும் அந்த இந்திய ரத்தினம்! அவரின் பேச்சில் ஒரு தெளிவும், தொலைநோக்கு சிந்தனையும் நிறைந்திருப்பதை காணமுடிகிறது.இந்த சிறு வயதில் உலகின் பிரபலங்களுடன் உரையாடும் வாய்ப்பும் இவரைத்தேடி வந்ததென்பது ஒரு ஆச்சரியம் கலந்த உண்மை.

மற்றுமொரு காணொளியைக்காண இங்கு செல்லுங்கள்

வாழ்க இந்தியா….வளர்க உலகம்…..ஜெய் ஹோ!!

Advertisements