கழுகாரின் கதை….

Posted on செப்ரெம்பர் 24, 2009

15


கழுகாரைப் பற்றி நமக்கு என்ன தெரியும் அதிகபட்சம்? எனக்கு தெரிந்ததெல்லாம், “கழுகைப் போன்ற பார்வை வேண்டும்”, பிறகு “உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது” அப்படிங்கிற பழமொழிகள்தான். சரி அத விடுங்க, ஆமாம் அப்படியென்ன இருக்கு கழுகுகிட்ட, அத பத்தி தெரிஞ்சி என்ன பெருசா ஆயிடப்போகுது அப்படீன்னு கேட்குறீங்களா? அப்படின்னா கண்டிப்பா நீங்க கழுகப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் நெறைய இருக்குங்க! வாங்க என்னன்னு பார்ப்போம்.

கழுகார்
கழுகார்

பறவை இனங்களிலே அதிக வருடங்கள் வாழக்கூடியது கழுகு மட்டுமே.எத்தனை வருடங்கள் என்று ஒரு குத்து மதிப்பாகச் சொல்லுங்கள் பார்போம்! சரி நானே சொல்லிவிடுகிறேன்.அதாவது 70 வருடங்கள் வாழக்கூடிய திறன் கொண்டது கழுகு! ஏன் திறன் கொண்டது எனச் சொல்கிறேன் தெரியுமா? அதுதான் இந்தப் பதிவின் சாராம்சமே! மேலே படித்தால் உங்களுக்கே புரியும்.

என்னதான் கழுகுக்கு 70 வருட கால வாழ்க்கை சாத்தியமென்றபோதும் அது ஒன்றும் அத்துனை எளிதானதல்ல! அதாவது 70 வருட வாழ்க்கை என்பது ஒவ்வொறு கழுகும் எடுக்கும் ஒரு அதி முக்கியமான முடிவைப் பொருத்தது! என்ன புரியவில்லையா? அதாவது வாழ்வா சாவா எனும் ஒரு இக்கட்டான சூழ் நிலையின்போது நாம் எடுப்போமல்லவா ஒரு தீர்க்கமான முடிவு, அத்தகைய ஒரு முடிவை ஒவ்வொறு கழுகும் தன் 40-வது வயதில் எடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம்!

காரணம் என்னவென்று கேட்கிறீர்களா……படங்களைப் பாருங்கள்/படியுங்கள் உங்களுக்கே புரியும்!

சோதனை மேல் சோதனை....போதுமடா சாமி!
சோதனை மேல் சோதனை….போதுமடா சாமி!
வாழ்வே மாயம்...இந்த வாழ்வே மாயம்!
வாழ்வே மாயம்…இந்த வாழ்வே மாயம்!
என்ன கொடுமை சரவணன் இது?
என்ன கொடுமை சரவணன் இது?
வாழ்க்கை வாழ்வதற்கே....வெற்றி நிச்சயம் எனக்கே!!
வாழ்க்கை வாழ்வதற்கே….வெற்றி நிச்சயம் எனக்கே!!
மோதி விளையாடு...மோதி விளையாடு!!
மோதி விளையாடு…மோதி விளையாடு!!
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே….

11

வாழ்க்கை வாழ்வதற்கே...வெற்றி நிச்சயம் எனக்கே!!
வாழ்க்கை வாழ்வதற்கே…வெற்றி நிச்சயம் எனக்கே!!

கழுகாரின் வாழ்க்கைப் பாதையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை…..

  1. வாழ்வில் சில சமயங்களில், துன்பம் தரக்கூடிய, மிகவும் வலிகளுடன் கூடிய சில மாற்றங்களை நாம் மேற்கொண்டே ஆக வேண்டும்!
  2. நாம் சில சமயங்களில் நமது பழைய நியாபகங்கள், பழக்க வழக்கங்கள், பாரம்பரிய செயல்பாடுகள் போன்றவற்றை துறக்க வேண்டும்!
  3. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன கால வகையினானே” எனும் வள்ளுவரின் கூற்றுக்கிணங்க வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது!!

என்ன நண்பர்களே…..கழுகாரின் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவு என்று புரிந்து கொண்டீர்களல்லவா? நாமும் இப்படி வாழ்க்கையை தேவைக்கேற்ப மாற்றி அமைத்து புத்துணர்ச்சியுடன் வாழப்பழகுவோம்!

வருகைக்கு நன்றி.மீண்டும் வருக!

Advertisements