வலைப்பூவில் நூறு ஓட்டங்கள்

Posted on செப்ரெம்பர் 23, 2009

6


வலைப்பூவகம் எனும்

இணையக்கலைப்பள்ளியிலே….

பகுதிநேர கல்விபயில

ஆயத்தங்கள் ஏதுமற்றவனாய்….

எந்தன் பள்ளிப்பையிலே

ஆர்வங்களை மட்டுமே

நிரப்பிக்கொண்டு…..

மெல்லத் தவழ்ந்துவந்த

என்னைத் தட்டிக்கொடுத்து

ஆதரவெனும் அன்பை

அள்ளித்தந்த இணையச்சொந்தங்களுக்கு

அன்புடன் நட்புகலந்த

தமிழ் வணக்கம்!

செந்தமிழ்ச்சாலையிலே

சிந்தனைச்சோலையிலே

சொல்லெனும்

மலர்பறித்து….

கவிதையெனும் மாலை

தொடுத்து….

வலைப்பூ வகுப்பினிலே

புத்தகமாய் உங்கள்முன்

வைத்தேன்!

செந்தமிழ் ஊற்றது

கவிதைகள்….

மருத்துவ செய்திகள் என

சிறுதுளி பெருவெள்ளமாய்

பெருகி இன்று

வலைப்பூ வாசகர்கள் எனும்

நட்புள்ளங்களோடு

இணையச்சாலையிலே

தமிழ்நடை பயிலுகின்றேன்!

கடந்து வந்த

பாதையிலே….

கற்றது கைம்மண்ணளவே!

பெற்றது சில அனுபவங்கள்

உற்றது பல மன நிறைவுகள்

ஏற்றது பல அறிவுரைகள்

தொட்டது சில உயரங்கள்!

இவையனைத்தும்

சாதனையில்லையெனும் போதும்

சாத்தியமில்லை

உங்கள் ஆதரவின்றி!!

பெற்ற வெற்றிகளை

உற்ற மனநிறைவோடு

உரித்தாக்குகிறேன்

உலக வலைப்பூ வாசகர்களுக்கு

எந்தன் கோடானு கோடி

நன்றிகளோடு!!

என்றென்றும்….

உங்கள் ஆதரவெனும்

மழையிலே

நனைந்திட ஆசை!!

நட்புகலந்த பணிவன்புடன்

நன்றிகள் பல!

– நட்புடன் பத்மஹரி.

Advertisements