அழகிய மர்மமா மெர்லின் மன்றோ…..

Posted on செப்ரெம்பர் 22, 2009

2


மெர்லின் மன்றோ, இந்த பெயரை கேட்டாலே மின்சாரம் பாய்வதை தடுக்க இயலாது நம்மால்! (மெர்லினைத் தெரிந்திருந்தால்!?).ஆம் இந்த மின்சாரக்கன்னியின் பெயர் வெறும் பெயரளவில் மட்டுமல்லாமல், உணர்வளவிலும் ஏக பிரசித்தம் உலக மக்களிடையே.ஆம் இவரிடம் அப்படி என்ன இருந்தது இதுவரை எந்த ஒரு திரைத்துறை நடிகர்/ நடிகையரால் எட்ட முடியாத ஒரு உயரத்தை அடைய மற்றும் தான் இறந்து 47 வருடங்களுக்கு பின்னும் இதுவரை அதை தக்க வைத்துக்கொள்ள? உலக வசீகரத்தையெல்லாம் ஒருங்கே சேர்த்த ஒரு உருவம் மன்றோ என்றால்அது மிகையல்ல! ஆமாம் இவரைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? வாருங்கள் தெரிந்ததைப் பார்ப்போம்!

செக்ஸ் கடவுள் மெர்லின் மன்றோ!
செக்ஸ் கடவுள் மெர்லின் மன்றோ!

மெர்லின் மன்றோ ஒரு சிறுகுறிப்பு

  • 1999-ஆம் வருடம் 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த “செக்ஸ் ஸ்டார்” என “ப்ளே பாய் பத்திரிக்கையால் மடுடம் சூட்டப்பட்டார் மெர்லின் மன்றோ
  • அதே வருடம், “பீப்பிள்” பத்திரிக்கை இவரை “20-ஆம் நூற்றாண்டின் மிகவும் கவர்ச்சியான பெண்” எனும் பட்டத்தை அளித்து மகிழ்ந்தது.
  • 1995-ஆம் வருடம்,ஜூன் மாதம், 1- ஆம் தேதி 32¢ அமெரிக்க சென்ட் மதிப்புள்ள “தபால் ஸ்டாம்பில்” மெர்லின் மன்றோவின் படம் வெளியிடப்பட்டது!
  • 1953, டிசம்பர் மாதம், மெர்லின் மன்றோ அந்த மாத ப்ளே பாய் பத்திரிக்கையின் “கனவுக்கன்னி” ஆனார்.
  • 1953, பிப்ரவரி மாதம், உலகில் மிகவும் அதிகப்படியாக விளம்பரப்படுத்தப் பட்ட ஒரே பெண் மன்றோ என அறிவிக்கப்பட்டது
  • 1947- ஆம் ஆண்டின் “மிஸ்.கலிபோர்னியா அர்டிசோக் ராணி” என மகுடம் சூட்டப்பட்டார் மன்றோ.

இது தான் எங்களுக்கு எல்லாம் தெரியுமே  என தங்கவேல் அவர்களின் நகைச்சுவையை நினைவு படுத்துபவரா நீங்கள்? அப்படியென்றால், “அதாங்க எனக்கு தெரியாது”, என உங்களை சொல்ல வைக்கும் செய்தி பல இருக்கிறது.ஆம், நண்பர்களே நமக்கு தெரிந்த மெர்லின் மன்றோ உண்மையான் மெர்லின் மன்றோவின் வாழ்க்கையின் ஒரு சிறு அங்கமே! அதாவது அவரை ஒரு செக்ஸ் கடவுளாக மட்டுமே நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.ஆனால் அவரைப் பற்றி தெரியாத பல ரகசியங்களும் உண்டு!

அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? மேலே படியுங்கள்……

அழகிய மர்மமா மெர்லின் மன்றோ மீண்டும் தொடரும் அடுத்த பதிவில்……

வருகைக்கு நன்றி.மீண்டும் இந்தக் கட்டுரையின் அடுத்த பாகத்தில் சந்திப்போம்!

Advertisements
குறிச்சொற்கள்: , , ,