தாதாசாஹேப் பால்கேவும் இந்தியாவின் அடுத்த ஆஸ்காரும்….

Posted on செப்ரெம்பர் 21, 2009

2


தாதாசாஹேப் பால்கேவை தெரியுமா உங்களுக்கு? தெரிந்திருந்தால் இந்தியாவின் சினிமா வரலாறும் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை! ஆம் நண்பர்களே, இந்தியாவின் சினிமா அகராதியில் முதல் எழுத்தான முதல் முழு நீள சினிமாவை எழுதியவர்/இயற்றிவர் திரு.தாதாசாஹேப் பால்கே அவர்கள். அவர் இயற்றிய அந்த படம் “ராஜா ஹரிச்சந்திரா”.இதுதான் இந்திய சினிமாவின் புள்ளையார்சுழி! இந்தப் படத்தில் தொடங்கியதுதான் இந்திய சினிமாவின் இன்றைய வெற்றி,வளர்ச்சி,பெயர், புகழ் மற்றும் ஆஸ்கார் விருது வரையிலான எல்லாமுமே! அது சரி இந்த கதைக்கும், பதிவுத்தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கு மேலே படியுங்கள்!

திரு.தாதாசாஹேப் பால்கே
திரு.தாதாசாஹேப் பால்கே

இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிடும் படங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படத்தின் பெயர் “ஹரிச்சந்திராச்சி ஃபேக்டரி”.இது ஒரு மராத்தி படம்.இந்த படமே தாதாசாஹேப் பால்கே அவர்களின் முதல் படமான ராஜா ஹரிச்சந்திரா எப்படி எடுக்கப்பட்டது என்பதைப்பற்றிய ஒரு தொகுப்புதான். இதுவரையில் இந்தப் படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்று மிகுந்த எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது!

இந்தியாவின் முதல் திரைப்படம் "ராஜா ஹரிஷ்சந்திரா"
இந்தியாவின் முதல் திரைப்படம் “ராஜா ஹரிஷ்சந்திரா”
ராஜா ஹரிஷ்சந்திரா படத்தின் சான்றிதழ்
ராஜா ஹரிஷ்சந்திரா படத்தின் சான்றிதழ்

இந்த படத்தின் இயக்குனர் பரேஷ் மொகாஷி ஒரு நாடக நடிகரும் இயக்குனரும் ஆவார்.இவரின் முதல் திரைப்பிரவேசம் தான் இந்த படம் என்பது மட்டுமல்லாமல் முதல் திரைப்பிரவேசமே அவரை ஆஸ்கார் போட்டிவரை கொண்டுசென்றுள்ளது. இது அனைவரின் எதிர்ப்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளதே இந்த படத்தின் மற்றுமொறு விசேஷம்! இந்தப் படம் இந்தியாவில் வெகுவிரைவில் திரையிடப்பட உள்ளது என இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படத்தின் விளம்பரத்தை தொடங்க இந்தியாவின் முன்னால் ஆஸ்கார் போட்டியாளர்களான அமீர் கான்,அஷுதோஷ் மற்றும் “ஷ்வாஸ்” படத்தின் இயக்குனர் சந்தீப் சாவந்த் ஆகியவர்களின் அறிவுரைகளை பெற்று மேற்கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

இயக்குனர் பரேஷ் மொகாஷி
இயக்குனர் பரேஷ் மொகாஷி

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இந்தப் படம் இன்னொரு ஆஸ்காரை இந்தியாவுக்கு வென்றுத்தருமா என்று? வென்றால் அந்த வெற்றி இந்தியாவின் சினிமா குரு திரு.தாதாசாஹேப் பால்கே அவர்களையே சாரும்! வெல்லுமா ஆஸ்காரை இந்தப் படம்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Advertisements