நம்பிக்கை எனும் ஒரு நாய்க்குட்டி…..

Posted on செப்ரெம்பர் 18, 2009

6


"தன்"நம்பிக்கை நட்சத்திரம்!!
“தன்”நம்பிக்கை நட்சத்திரம்!!

இந்த உலகத்தில் எதைத் துறந்தும் வாழ்ந்து விடலாம் ஆனால் ஒன்றைத்தவிர! அது என்னவென்று கேட்கிறீர்களா? அதுதாங்க  நம்பிக்கை/தன்னம்பிக்கை! ஆமாம் தன்னம்பிக்கைக்கும் மேலே இருக்கும் படத்தில் இருக்கும் நாய்க்குட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? நிறைய  இருக்குங்க.மேல படிங்க…..

மேலே படத்தில் இருக்கும் நாய்க்குட்டியின் பெயரே  “நம்பிக்கை” தான்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? எனக்கும் முதலில் அப்படித்தான் இருந்தது.மேலே படியுங்கள் அது எவ்வளவு பொருத்தமான பெயர் இந்த நாய்க்குட்டிக்கு என்று தெரியும்.ஆமாம் அந்த புகைப்படத்தில் ஒன்றை கவனித்தீர்களா? அந்த படத்தில் நாய்க்குட்டிக்கு ஏதோ குறைவது போல தோன்றவில்லை உங்களுக்கு? ஆம் நண்பர்களே, அந்த நாய்க்குட்டிக்கு இரண்டு கால்கள் மட்டுமே.முன்னங்கால்கள் இரண்டும் இல்லை!

இந்த நாய்க்குட்டி 2002 ஆம் ஆண்டின் கிருஸ்துமஸ் தினத்தன்று பிறந்தது.பிறக்கும் போதே மூன்று காலகள் மட்டுமே இருந்தது.அவற்றுள் ஒன்று ஊனமான கால்.அதனால் அறுவை சிகிச்சை செய்து அதை நீக்கிவிட்டார்கள்.இந்த நாயின் சொந்தக்காரர், இரண்டு கால்களுடன் இந்த நாய் படும் துயரம் கண்டு கருணைக் கொலை செய்யத் திட்டமிருந்தார்.ஆனால் அந்த நாய்க்குட்டிக்கு அதிர்ஷ்டம் “ஜூட் ஸ்ட்ரிங் ஃபெல்லோ” எனும் பெயரில் காத்திருந்தது பின்பு தான் தெரிந்தது.அதாவது, ஜூட் ஸ்ட்ரிங் ஃபெல்லோ என்பவர் தான் இந்த நாயின் தற்போதைய சொந்தக்காரர்.அவர் சொந்தக்காரர் மட்டுமல்ல இந்த நாயின் கடவுளே அவர்தான் என்றாலும் மிகையாகாது.ஏனென்றால் கொல்லப்பட இருந்த இந்த் நாய்க்குட்டிக்கு மறுவாழ்வு கொடுத்தவரே இவர்தான்!

இரண்டு கால்கள் இல்லாமல், நடக்கவும் முடியாமல் இருந்த இந்த நாய்க்குட்டியை அதன் சொந்தக்காரரிடமிருந்த பெற்றுக்கொண்ட ஜூட், எப்படியாவது இந்த நாயை நடக்க வைக்க வேண்டும் என்று பல முயற்ச்சிகள் செய்தார்.அவர் இந்த நாய்க்குட்டிக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா? “நம்பிக்கை”, பின் இந்த நாய் நடப்பதற்க்கு அவர் மேற்கொண்ட முயற்ச்சிகள் வெற்றியும் தந்தன.

நம்பிக்கையுடன்( நாய்க்குட்டி) ஜீட் ஸ்ட்ரிங் ஃபெல்லோ!
நம்பிக்கையுடன்( நாய்க்குட்டி) ஜீட் ஸ்ட்ரிங் ஃபெல்லோ!

முதலில் ஒரு “சர்ஃப் போர்டு” எனும் ச்க்கரங்களுடனான உந்துப் பலகையை கொண்டு இந்த நாய்க்கு நடக்கக் கற்று கொடுத்தார்.ஆனால் முதலில் நம்பிக்கையால் நிற்கத்தான் முடிந்தது.பின் சிறிது சிறிதாக நகர, நடக்க என ஆறு மாதங்களில் நம்பிக்கை நடக்க ஆரம்பித்துவிட்டான் தன் இரண்டு பின்னங்கால்களை மட்டுமே பயன்படுத்தி! இதற்க்கு அவனுக்கு உதவியவர்கள் ஜூடும், அவரின் இன்னொரு நாய்க்குட்டியும்தான்.

பின்னங்கால்களால் நடக்கும் "நம்பிக்கை"!
பின்னங்கால்களால் நடக்கும் “நம்பிக்கை”!

இப்போது நம்பிக்கை நன்றாக நடக்கிறார்.இவருக்கு ரசிகர்கள் அதிகம் இப்போது! தொலைக்காட்சி, செய்தித்தாள் என நம்பிக்கை இப்போது ஏக பிரபலம்.இது போதாதென்று ஒரு “With a little faith” ( ஒரு சின்ன நம்பிக்கையுடன்) என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் வெளியாக உள்ளது.இது எல்லாத்தையும் மிஞ்சும் இன்னொரு செய்தி, அடுத்த “ஹாரி பாட்டர்” படத்தில் “நம்பிக்கை” இடம் பெற இருப்பதுதான்!

இதையெல்லாத்தையும் விட முக்கியமான இன்னொரு விஷயம்.ஜீட் ஸ்ட்ரிங் ஃபெல்லோ நம்பிக்கையை உலகம் சுற்றும் வாலிபனாக்கப் போகிறார் என்பதே.ஆமாங்க, ஜீட் இந்த நாய்க்குட்டியுடன் ஒரு உலகப் பயணம் மேற்க்கொண்டு உலக மக்களுக்கு, ஒரு முழுமையான உடல கிடைக்கப் பெறாவிட்டாலும் வாழ்க்கையை எளிதாக்க முடியும் தன்னம்பிக்கை இருந்தால் என்ற உண்மையை பறைசாற்ற இருக்கிறார்!

தன்னம்பிக்கை தரும் நம்பிக்கை……

கீழே உள்ள புகைப்படங்களில் நம்பிக்கையின் தன்னம்பிக்கையை நாம் காணலாம் கூடவே நமக்காண நம்பிக்கையையும் பெற்றுக்கொள்ளலாம்…..

This slideshow requires JavaScript.

நண்பர்களே, வாழ்க்கை நமக்கு கடினமானதுதான்.ஆனால், நம்மை விட துயரப்படும் ஜீவன்களும் நம்மைச் சுற்றி வாழ்கின்றன இந்த பரந்த உலகில்.எனவே வாழ்வில் வெற்றி பெற எதுவும் வேண்டாம் தன்னம்பிக்கை ஒன்று மட்டும் போதும்.வாழ்க்கையை ஒரு துன்பமாக நோக்காமல் இந்த நம்பிக்கை எனும் நாய்க்குட்டி போல “நம்பிக்கை இருந்தால் வாழ்வில் எதுவும் ஒரு நாள் சாத்தியமாகும்” என வாழப் பழகுவோம்! வெற்றி நிச்சயம்.

வருகைக்கு நன்றி! மீண்டும் வருக!

Advertisements