காணாமல் போன அசின்! கலங்கும் திரையுலகம்!!

Posted on செப்ரெம்பர் 17, 2009

4


” என்ன……..மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக……

அந்த மாயவரத்துல கேட்டாக……சீர் செனத்தியோட வந்து சீமையில கேட்டாக……

அந்த சிங்கப்பூருல கேட்டாக……அத எல்லாம் உன்னால வேணாமுன்னு சொன்னேன் கண்ணால

என் மச்சான் உம்மேல ஆசப்பட்டு வந்தேன் பின்னால…”

அப்படின்னு ஆரம்பிக்கற இந்த தமிழ் சினிமா பாட்டு நம்ம எல்லாருக்கும் தெரியும்னு நெனக்கிறேன். என்னடா இவன் பதிவுத்தலைப்புல அசினப் போட்டுட்டு சம்பந்தா சம்பந்தமில்லாம ஒரு பாட்டப் பாடரானேன்னு தானே யோசிக்கிறீங்க?! அவசரப்படாதீங்க, இந்த பாட்டுல தாங்க மேட்டரே இருக்கு!! வாங்க என்னன்னு பார்ப்போம்.

இந்த பாட்டு, முரளி-ரேவதி நடிச்சு சில வருஷங்களுக்கு முன்னால தமிழ் சினிமாவுல வெளிவந்த “சின்ன பசங்க நாங்க”-ங்கிற படத்துல ரேவதி பாடுவாங்க! அந்த பாடலைக் காண இங்கு அழுத்துங்கள் . ஆனா இதே பாட்டை இப்போ இருக்கிற தமிழ் சினிமாவுல இருக்கிற?! ஒரு பிரபல?! நடிகை  நெசத்துல ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பாடிக்கிட்டு இருக்காங்கன்னு கோடம்பாக்கத்து பட்சி ஒன்னு சொல்லுது! அது யாருன்னு தெரியுமா உங்களுக்கு? குறைந்த பட்சம் எதாவது யூகமாவது இருக்கா? சரி இல்லைன்னாலும் பரவாயில்ல வாங்க அது யாருன்னு பார்ப்போம்.

அது வேற யாரும் இல்லீங்க.நம்ம அழகு புயல், கேரளத்து பெண்குட்டி, மலபார் இப்படில்லாம் நீங்க பாசமா கூப்பிட்ட அசின் தானுங்கோ!! சரி சரி, ரொம்ப உணர்ச்சி வசப்படாம அவங்க எப்படி இந்த பாட்டப் பாடராங்கன்னு பாருங்க.

“என்ன…….அழகான பொண்ணு இன்னு ஆந்திராவில கூட்டாக…..

அந்த கர்னாடகாவுல கூட்டாக……

செமத்தியான……கட்டையின்னு சென்னை நகரத்துல கூட்டாக

எங்க கேரளாவுல கூட கூட்டாக……

இதையெல்லாம் உன்னால(நம்ம அமீர்கான் தாங்க!) வேணாமுன்னு சொன்னேன் கண்ணால

என் மச்சான்( அட நம்ம சல்மான்கான் தாங்க!) உன்ன நம்பி வந்தேன் பின்னால(பாலிவுட்டுக்கு தாங்க!)……”

அது வேற ஒன்னுமில்லீங்கோ….. நம்ம அழகுப்புயல் அசின் கண்ணாலேயே பேசி, அப்பப்போ கொஞ்சம் நடிச்சி?! நம்ம எல்லாரையும் அசத்தினாங்கோ.அப்புறம் கஜினி புகழ் முருகதாஸ் கிருபையால அதெ படத்தோட இந்தி பதிப்புல நம்ம நடிப்புப் புயல் அமீர்கானோட ஜோடியா இந்தி கஜினியில அசத்தினாங்க.இந்தி கஜினி தந்த வெற்றியோட உற்ச்சாகத்துல மும்பையில ஒரு பெரிய வீட்டையும் வாங்கிப்போட்டு அங்கேயே செட்டிலாகிடாலாமுன்னு முடிவு பண்ணாங்க.அதுவுமில்லாம அவங்களுக்கு 2008-ன் சிறந்த நடிகைனு “ஃபிலிம்ஃபேர் விருது” கெடச்சதைப் பார்த்து, “நான், நீ” னு போட்டி போட்டுக்கிட்டு பாலிவுட் தயாரிப்பாளர்கள் படையெடுத்தாலும் அதில் தேர்ந்தெடுத்து “லண்டன் ட்ரீம்ஸ்”-ங்கிற இந்தி படத்துல  நடனப் புயல் “சல்மான் கான்” மற்றும் “அஜய் தேவகன்” இவர்களுக்கு ஜோடியா நடிக்க ஒத்துக்கிட்டு, மொத்தமா பாலிவுட்டிலேயே டேரா போட்டுடலாமுன்னு முடிவு பண்ணியிருந்தாங்க!

இந்த சமயத்துலதான் கொஞ்சம் தயக்கத்தோட வாய்ப்பு கேட்டு போன நம்ம தமிழ் தயாரிப்பாளர்கள் தமிழ் படத்துல நடிக்க கேட்டப்ப….என்னது தமிழ் படமா? அப்படின்னா? கேள்விப்பட்ட மாதிரியே இல்லையே! அப்படிங்கற அளவுக்கு பில்டப் கொடுத்து துறத்தி அடிக்காத குறையாக வந்து சேர்ந்தார்கள் நம்ம தயாரிப்பாளர்கள்.கோலிவுட்டுக்கே இந்த கதின்னா டோலிவுட்,மாலிவுட்(அதாங்க மலையாளம்!) பத்தி கேக்கவே வேணாம்.

இப்படி போய்க்கிட்டு இருந்த அசின் வாழ்க்கையில விதி கொஞ்சம் விளையாடாம அவர் வீட்டிலேயே சம்மன கால் போட்டு உக்காந்த மாதிரி ஆயிடுச்சி இப்போ! அதாவது கஜினி வெற்றிக்கு அப்புறம் தங்க தட்டுல வரவேற்பு கொடுத்த இந்தி திரையுலகம் இப்போ “அல்வா” கொடுத்துறுமோ அப்படின்னு அசின் கவலைப்படற அளவுக்கு அவரை கண்டுக்கிறதே இல்லையாம்! இருந்தாலும் பரவாயில்ல, காலம் ஒரு நாள் கனியும் என்று கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டுவிட்டு சிவனேன்னு வருகிற விளம்மபரப் பட வாய்ப்புகள எல்லாம் தட்டாம நடிச்சுப் பார்த்தாங்க. அப்படியும் ஒன்னும் வேலைக்காகலை!

வேற வழியில்லாம “எங்கே செல்லும் இந்த பாதை”-னு யோசிச்சு பார்த்துட்டு சரி “பழைய குருடி கதவத் திறடி”-னு வழிகாட்டின கோலிவுட்டுக்காவது போய் வாய்ப்பு கேக்கலாமுன்னு திரும்பவும் “வந்தாரை வாழ வைக்கும்” சென்னை மாநகரத்துல இருக்கிற பழைய வீட்டுக்கு வந்து கதவை  நல்லா…….தெறந்து வச்சி உக்காந்து பார்த்தாங்களாம் யாராவது தயாரிப்பாளர் வர்ராங்களான்னு!! ஆனாப் பாருங்க பாவம் “கோடம்பாக்கத்துக் காத்து கூட” வரலையாம்.இப்போ “உள்ளதும் போச்சே அப்படின்னு……ஒரே சோக கீதங்கள்தானாம்.அதுல ஒன்னுதான் நீங்க ஆரம்பத்துல பார்த்தது!

தமிழ் சினிமாவுல எப்படியெல்லாமோ?!  இருந்த அசின் இப்போ “எப்படி இருந்த நான்…..இப்படி ஆயிட்டேனேன்னு”, போற வர்ற எல்லார்கிட்டயும் பொலம்பறாங்களாம்!

அசின் அன்று.....
அசின் அன்று…..
அசின் இன்று....
அசின் இன்று….

ஐயோ பாவம் அழகுப் புயல் அசின்னு நீங்க எல்லாரும் கவலைபடுவீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும்!! சரி விடுங்க நம்ம அசின் கிட்ட காட்டத் தெறமையா??! இல்ல? கண்டிப்பா கோடம்பாக்கத்து காத்து கூடிய சீக்கிரம் அவங்க பக்கமும் கொஞ்சமும் வீசட்டும்னு தீவிர அசின் ரசிகர்களாகிய(கோயில் மட்டுந்தாங்க இன்னும் கட்டல…..அவ்வளவு தீவிரமான!) நாம எல்லாரும் கடவுள் கிட்ட வேண்டிக்கலாம்.வேற என்னங்க பண்ண முடியும்?!

சரி வாங்க வேலையப் பார்ப்போம்! முடிஞ்சா ஒரு ரெண்டு வார்த்தையில மறுமொழி எழுதிட்டுப் போங்க!!

வருகைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்!

Advertisements