ரஜினி-அமிதாப் பச்சன், நீயா நானா? சபாஷ் சரியான போட்டி!!

Posted on செப்ரெம்பர் 15, 2009

0


இந்த கதை/உரையாடல் ஒரு கற்பனையே……

இந்திய திரையுலகின் முன்னனி நடிகர்களுள் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என மிகவும் அன்புடன் அழைக்கப்படுபவர்கள் இருவர்.ஒருவர் தென்னகத்தின் திரைமன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.மற்றவர், ஹிந்தி திரையுலகின்(பாலிவுட்)  சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்! இவர்கள் இருவரும் இந்திய திரையுலகின் பிரதிநிதிகள் என்று கூட கொள்ளலாம்.

ரஜினிகாந்த்-அமிதாப் பச்சன்
ரஜினிகாந்த்-அமிதாப் பச்சன்

நல்ல நண்பர்களாகிய இவர்கள் இருவருக்கும் திடீரென்று ஒரு நாள் யார் பெரியவன் என்ற வாக்குவாதம் வருகிறது (கற்பனைதான்!).அப்போது…..

ரஜினிகாந்த்: அமிதாப், உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா?எனக்கு இந்த உலகத்துல இருக்கிற எல்லாரையும்(பிரபலங்கள்) தெரியும். நீ வேணும்னா எதாவது/எந்த பெயர் வேண்டுமானாலும் சொல், அவரை எனக்கு கண்டிப்பாகத் தெரியும்!

ரஜினியின் பெருமைப் பேச்சை கேட்டு கேட்டு அலுத்துப்போன அமிதாப், இன்று இவனைஒரு கைப்பார்த்து விட வேண்டும் ஒரு முடிவுக்கு வந்தவராய், சரி ரஜினி பார்க்கலாம் என்று சொல்கிறார்.

அமிதாப்பச்சன்: உனக்கு ஹாலிவுட் அதிரடி மன்னன் டாம் க்ரூஸைத் தெரியுமா?

ரஜினிகாந்த்: ஓ…..நல்லாத் தெரியுமே!  நாங்க ரெண்டு பேரும் ரொம்ப வருடமா நெருங்கிய நண்பர்கள். வேணும்னா நான் நிரூபித்துக் காட்டட்டுமா?

சரியென்று இருவரும் ஹாலிவுட்டிற்க்கு பறந்து, பின் டாம் க்ரூஸின் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள்.கதவைத் திறந்த டாம் க்ரூஸ் ஆச்சரியத்தில்….

டாம் க்ரூஸ்: தலைவா…..சான்ஸே இல்ல! இது உண்மையா இல்ல பொய்யா? என்னையே என்னால நம்ப முடியல! எப்படி இருக்கீங்க தலைவா?  உங்க நண்பரா இவரு? சரி தலைவா, வாங்க மத்திய உணவு எல்லோரும் சேர்ந்தே சாப்பிடலாம்.

இதை எல்லாம் பார்த்த அமிதாப், என்னதான் உள்ளுக்குள் ஆச்சரியப்பட்டாலும் இன்னும் அவருக்கு நம்பிக்கை வரவில்லை என்பதால்…..

அமிதாப்பச்சன்: ஏதோ அதிர்ஷ்ட வசமா டாம் க்ரூஸுக்கு உன்னைத் தெரிஞ்சிருக்குனு நெனக்கிறேன்! இது நம்பர மாதிரி இல்லை.

இதைக்கேட்ட ரஜினி….

ரஜினிகாந்த்: அப்படியா, சரி வேறு யார் பெயரையாவது சொல்லு, மீண்டும் நிரூபிக்கிறேன்.

அமிதாப்பச்சன்: அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?

ரஜினிகாந்த்: நம்ம பராக் ஒபாமா தானே…..எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்!

பின்னர் இருவரும் அமெரிக்கா செல்கிறார்கள்.வெள்ளை மாளிகையை நோக்கி செல்லும் வழியில் எதேச்சையாக வழியில் வந்த ஜனாதிபதி ஒபாமா, ரஜினியைப் பார்த்துவிடுகிறார்.உடனெ ரஜினியை நோக்கி கையசைத்து அவர்…..

ஒபாமா: என்ன ரஜினி, இப்படி இன்ப அதிர்ச்சி எல்லாம் கொடுக்கறீங்க! நான் இப்போதான் ஒரு மீட்டிங் போலாம்னு கெளம்பினேன்.சரி பரவாயில்லை, வாங்க ரெண்டு பேரும் முதல்ல ஒரு காஃபி சாப்பிடலாம், அப்புறமா நான் மீட்டிங் போறேன்.

இதைக் கண்ட அமிதாப் ஆடிப்போனார்! இருந்தாலும் அவருக்கு இன்னும் திருப்தியில்லை என்பது ரஜினிக்கு புரிந்தது.அதனால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது அமிதாப்பிடம் ரஜினி…..

ரஜினிகாந்த்: என்ன இன்னும் நம்பிக்கை வரலையா?  சரி வேறு யார் பெயரையாவது சொல்லு!

அமிதாப்பச்சன்:போப் ஆண்டவர்”

ரஜினிகாந்த்: போப் ஆண்டவர்தானே….அவரை எனக்கு ரொம்ப நாளா தெரியும். சரி வா வாடிகன் போகலாம்!

இருவரும் வாடிகனில் போப் ஆண்டவருக்காக கூட்டத்தோடு கூட்டமாய் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.சிறிது நேரம் கழித்து ரஜினி,

ரஜினிகாந்த்: நண்பா அமிதாப், இது வேலைக்காகாது.இப்படி கும்பலோடு கும்பலாக நின்று கொண்டிருந்தால் போப் ஆண்டவர் என்னை எப்படி கண்டுபிடிப்பார்.எனக்கு போப் ஆண்டவரோட மெய்க்காவலர்கள எல்லாம் நல்லாத் தெரியும். அதனால, நீ இங்கேயே இரு. நான் போப் ஆண்டவரோடு பால்கனியில வந்து நிற்கிறேன்!

இப்படி சொல்லிவிட்டு ரஜினி கூட்டத்தில் சென்று மறைந்து விடுகிறார்.பின்னர் அரை மணி  நேரத்தில் தான் சொன்னபடியே போப் ஆண்டவருடன் நின்று கொண்டிருக்கிறார்.

ஆனால் ரஜினி திரும்பி வரும்பொழுது, அமிதாப் ஹார்ட் அட்டாக் வந்து மருத்டுவர்கள் சூழ ஸ்ட்ரெச்சரில் படுத்துக் கொண்டிருக்கிறார்.இதைப் பார்த்த ரஜினி, கூட்டத்தை விலக்கி கொண்டு அமிதாப் பக்கத்தில் சென்று,

ரஜினிகாந்த்: என்ன அமிதாப், என்ன ஆச்சு?!

அமிதாப்பச்சன்: அட நீ வேறப்பா….நீயும் போப் ஆண்டவரும் பால்கனியில வந்து நிக்கற வரைக்கும் நல்லாத் தாம்ப்பா இருந்தேன்.

ரஜினிகாந்த்: அப்புறம் என்னப்பா ஆச்சு?

அமிதாப்பச்சன்: நீயும், போப் ஆண்டவரும் வந்து நின்னப்போ, பக்கத்துல இருந்த ஒரு இத்தாலி நாட்டுகாரன் என்ன ஒரு கேள்வி கேட்டான் பாரு…… ஹார்ட் அட்டாக்கெ வந்துடுச்சுப்பா!!

ரஜினிகாந்த்: அப்படி என்னதாம்பா கேட்டான் அவன் ?

*

*

*

*

*

*

*

*

*

அமிதாப்பச்சன்:ஆமாம், ரஜினி கூட பால்கனியில நிக்கறாரே,  அவர் யாருன்னு கேட்டாம்பா!!

இப்படி கேட்டா பாவம், அமிதாப் பச்சனுக்கு ஹார்ட் அட்டாக் வராம என்னங்க செய்யும்?!!

என்ன நல்லா சிரிச்சீங்களா…… சரி அடுத்த மொக்கையில பார்ப்போம். வரட்டுமா?

Advertisements