உலக நாயகனும் வருங்கால உலக நாயகியும்!!

Posted on செப்ரெம்பர் 12, 2009

0


நமது  உலக நாயகன் திரு.கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. டைரக்டர் பாலசந்தர், ஏவிஎம் சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ருதிஹாசனை வாழ்த்தினர்.(ஆமா நீங்க ஒரே நேரத்துல எத்தன குதிரையிலதான் சவாரி செய்வீங்க ஸ்ருதி? இல்ல அனுபவம் போதுமான்னு….!?)

விழாவில் பேசிய இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் பேசும்போது,இது இரண்டு யுகங்களின் சந்திப்பு என்றார். ஸ்ருதிஹாசன் இசையமைத்த பாடல்களை கமல் எனக்கு திரையிட்டு காண்பித்தார். அதை பார்த்துவிட்டு இந்த பெண் இந்திய அளவில் புகழ் பெறுவார் என்று சொன்னேன் என்றவர் மேலும், வருகிற நூற்றாண்டில் ஸ்ருதி மிகப்பெரிய இசையமைப்பாளராக இருப்பார் என ஆசிர்வாதமும், வாழ்த்துமாக சேர்த்து கூறினார்.

பிறகுதான் வந்தது ஒரு ஒரு பெரிய பொருப்பு?! சம்பந்தப்பட்ட வாழ்த்து ஸ்ருதிஹாசனுக்கு பாலச்சந்தரிடமிருந்து! அதாங்க, தலைப்பை படிச்சிருப்பீங்க இல்ல? “அவர் உலகநாயகியாக வருவார்” என்பதுதான் அது! கமல்ஹாசன் குறித்து பேசியபோது, ஒரு விழாவில் நான் பேசும்போது கமல்ஹாசனுக்கு வேகத்தடை வேண்டும் என்றேன். அவர் பேசும்போது வேகத்தடையை நான் தாண்டி போய்விடுவேன் என்றார். வேகத்தடை தாண்டுவதற்காக போடப்படுவது அல்ல. மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக போடப்படுவது என்றார்.ஸ்ருதிஹாசன் பவுண்டரியை தாண்ட வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் பவுண்டரியை தாண்டி ஆஸ்கார் விருது பெற்றதை போல ஸ்ருதியும் பவுண்டரியை தாண்டி புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

மேலும் பலரது பாராட்டுகளை ஏற்றுக் கொண்ட ஸ்ருதி, விழும்போது விழக்கூடாது என்று எங்க அப்பா சொல்ல மாட்டார். எழுந்திரு என்று சொல்லுவார். எனக்கு, டாக்டர் கமல்ஹாசன் அவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் கிடைத்ததில் மிகவும் சந்தோஷமாகவும், இதில் வெற்றியடைய வேண்டும்  என்ற எண்ணமும் இருக்கிறது.என் இசைக்கு வெற்றி கிடைத்தால் அது தனி மனித வெற்றி அல்ல. என் இசைக்குழுவினர் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக கருதுவேன் என்றார் மிகவும் தன்னடக்கத்துடன்! பின்ன புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? அது எல்லாம் சரி…..இந்த உலக நாயகி அப்படின்னா அதுக்கு அர்த்தம் என்னங்க?

உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க!

இந்த விழாவின் காணொளியைக் காண  இங்கு செல்லுங்கள்

Advertisements