பாவம் இந்த பசங்க…..

Posted on செப்ரெம்பர் 11, 2009

4


நம் சமுதாயத்தின் பார்வையில்……

ஒரு அழகான பெண் அழுதால்

இந்த உலகம் ஆறுதல் சொல்லும்

ஆனால் ஒரு ஆண் அழுதால்

அவனை “பெண்கள் போல அழுகிறாயே”

என்று கேலி செய்யும்!

ஒரு பெண் ஒரு ஆணை கன்னத்தில் அறைந்தால்

கண்டிப்பாக அந்த பையன் எதாவது வம்பு செய்திருப்பான்

எனும் இந்த உலகம்….

ஒரு ஆண் ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்துவிட்டால்

உடனே அவனை “பெண்களை மதிக்கத் தெரியாத காட்டுமிறாண்டி”

எனத் தூற்றிப் பேசும்!

ஒரு பெண் ஒரு ஆணுடன் உரையாடிகொண்டிருந்தால்

“அவள் நல்ல நட்புடன் பழகும் பெண்”

எனும் இந்த உலகம்

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உரையாடிகொண்டிருந்தால்

“கடலையப் போட்டுகிட்டு இருக்கான்” பாரு

எனக் கேலி செய்யும்!

ஒரு பெண் சாலை விபத்துக்கு காரணமானால்

“அந்த பெண் பாவம்ங்க எதிர்த்தாற்போல்

வந்தவர்தான் தவறு செய்திருப்பார்”

எனும் இந்த உலகம்

அதையே ஒரு ஆண் செய்துவிட்டால்

“வண்டி கூட ஓட்டத் தெரியல வந்துட்டானுங்க

கார் எடுத்துக்கிட்டு” என பழித்துப் பேசும்!

பாவம்தான் இந்த பசங்க……

என்ன உலகமடா இது......கடவுளே என்னக் காப்பாத்து!

என்ன உலகமடா இது......கடவுளே என்னக் காப்பாத்து!

நண்பனிடமிருந்து பெற்ற ஒரு மின்னஞ்சலிலிருந்து ஒரு மொக்கை!!

நான் ரசித்தேன்…..நீங்கள் எப்படி??

மீண்டும் இன்னொரு மொக்கையில் சந்திக்கும்வரை……

Advertisements