ஒரே கல்லுல மூனு மாங்காய்

Posted on செப்ரெம்பர் 9, 2009

0


பதிவுத்தலைப்பைப் படித்துவிட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என யூகித்தால், என்னடா இவன் இதுவரைக்கும் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களிடம் திடீரென்று மூனு மாங்காய் என்று சொல்கிறானே என்றுதானெ? இதை நான் சொல்லவில்லை நண்பர்களே! சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.இன்னும் புரியவில்லையா? சரி வாருங்கள் என்னவென்று பார்ப்போம்.

சமீபத்தில் இங்கிலாந்து இருதய அற நிறுவன நிதியுதவியடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று “ஃபாசெப்” என்னும் மருத்துவ மாத இதழில் வெளியானது.அந்த ஆராய்ச்சியின் நோக்கமென்னவென்றால் அதிக கொழுப்புச்சத்து உள்ள உணவை உண்பதால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் என்னென்ன என்பதுதான்.அந்த ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பார்த்ததென்னவோ ஒரு கல்லில் ஒரு மாங்காய் தான்.ஆனால் ஆராய்ச்சி முடிவு சொல்வதுதான் ஒரே கல்லில் மூனு மாங்காய் என்று.அந்த மூன்று மாங்காய்கள் என்னென்னவென்று சற்று விரிவாக பார்ப்போமா? வாருங்கள்.

அதாவது சாதரணமாக கொழுப்புசத்து அதிகம் உள்ள உணவினை அதிகமாக உட்கொள்ளுவதால் என்னென்ன உடல் உபாதைகள் மனிதனுக்கு ஏற்படுகிறது என சோதித்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான ஆனால் நம்பத்தகுந்த பல உண்மைகள் தெரியவந்திருக்கின்றன.அவை,  (கொழுப்புசத்து உள்ள உணவினை அதிகமாக உட்கொள்ளுவதால்) உடலுழைக்கும் திறனில் 50% குறைவும், அறிவுத்திறனில் குறைவும் மற்றும் “மெட்டபாலிசம்” என்று சொல்லக்கூடிய செரித்த உணவின் பயன்பாடு போன்றவை பாதிக்கப்படிகின்றன என்பனவே ஆகும்! இதை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் கூறுவதாவது, பொதுவாக கொழுப்புசத்து அதிகம் உள்ள உணவின் பலன/தீங்கு உடலுக்கு என்ன என்று சோதிக்கச் சென்ற எங்களுக்கு, பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.இந்த முடிவுகளினால் பயனடையப் போகிறவர்கள் பொதுமக்கள் மட்டுமல்லாது சிறப்பு தகுதி வாய்ந்த சிலரும், சில குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் தான் என்கிறார்.

ரொம்ப கொழுப்புங்க.....சாப்பாட்டுலதாங்க!

ரொம்ப கொழுப்புங்க.....சாப்பாட்டுலதாங்க!

கொழுப்புசத்து அதிகமுள்ள உணவினால் யார் யாருக்கு என்ன பாதிப்பு ?

விளையாட்டு வீரர்கள்:

50% சதவிகிதம் உடல் உழைக்கும் திறன்/செயல்வேகத்திறன் குறைவதனால் இது விளையாட்டு வீரர்களான ஓட்டப்பந்தய வீரர்கள் போன்றோருக்கு இது மிக முக்கியமான செய்தி.இந்த ஆராய்ச்சியின் முடிவின் பார்வையில் இவர்களுக்கு தகுந்த சரிவிகித உணவினை பரிந்துரைக்க முடியுமென்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.

டயாபிடீஸ்( நீரிழிவு நோய்), உடல் பருமன் நோயாளிகள்:

நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற உபாதை உள்ளவர்களுக்கு பொதுவாக ரத்தத்தில் அதிக கொழுப்புச்சத்து கலந்திருக்கும் என்பதனால் இவர்களுக்கும் இந்த ஆராய்ச்சி முடிவானது சரியன சரிவிகித உணவு வகைகளை பரிந்துரைக்க உதவும் என கூறப்படுகிறது!

பொதுமக்கள்:

சரி, அது எல்லாம் இருக்கட்டும், நமக்கு(சாதாரண மக்கள்) என்ன பலன/தீங்கு என நீங்கள் கேட்பீர்களேயானால், சிலவற்றை கூறுக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.அவை, பிறருக்கு சொன்னது போல

  1. செயல்வேகத்திறன்/உடலுழைக்கும் திறன் குறைவது
  2. அறிவுத்திறன் குறைவது
  3. டெமன்ஷியா போன்ற நியாபகச் சக்தி குறையும் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்
  4. இருதய நோய் வரும் வாய்ப்புகள் அதிகமாவது என பட்டியல் நீள்கிறது!

இந்த ஆராய்ச்சியானது, தற்போதைய சூழ்நிலையில் எலிகளில் மேற்கொள்ளப்பட்டாலும், அடுத்து மனிதர்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பது நல்ல செய்தி.

சரி  நண்பர்களே, நான் சொன்னது சரிதானே…..அதாங்க ஒரே கல்லுல மூனு மாங்காய்!!

சரி நாமெல்லோரும் இயன்றவரை கொழுப்புச்சத்து குறைவாக உள்ள உணவினையே உட்கொள்ள முயல்வோம்.ஒரு ஆரோக்கியமான மனித சமுதாயத்தை உருவாக்குவோம்.

மீண்டுமொறு மருத்துவப் பதிவில் ஒரு புதிய செய்தியுடன் சந்திப்போம்.

வருகைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்! உங்கள் கருத்துகளை கூறுங்கள்!!

Advertisements