ஆப்பிளும் பனிச்சிறுத்தையும்

Posted on செப்ரெம்பர் 8, 2009

2


எனது வலைத்தளத்தில் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் விண்டோஸின் அடுத்த வரவான விண்டோஸ் 7 பற்றி.ஆனால் அது வெளியாகும் தேதி தற்பொழுதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது.வருகிற அக்டோபர் 22- ஆம் தேதி விண்டோஸ் ஓ.எஸ் கடைகளில் கிடைக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.என்னதான் விண்டோஸ் கணினி உலகின் கதாநாயகனாக இருந்தாலும், எல்லோராலும் விரும்பப்பட்டாலும் வல்லவனுக்கு வல்லவன் இவ்வையத்தில் உண்டு என்பதற்கு உதாரணமாக மேக்கிந்தோஷ் எனும் நிறுவனத்தின் வாரிசான ஆப்பிள் எனும் ஓ.எஸ்ஸும் கணினிப்பிரியர்களின் கனவுக்கன்னியாக இணைய உலகத்தில் வலம் வந்து கொண்டிருப்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும்.அந்த ஆப்பிளின் புதிய ஓ.எஸ்ஸைப்பற்றியதுதான் இந்த வலைப்பதிவு.

என்னதான் விண்டோஸ் தனது புதிய ஓ.எஸ்ஸான விண்டோஸ் 7-க்கு அதிக எதிர்ப்பார்ப்பினை ஏற்ப்படுத்தி அதன் வரவுக்காக கணினிப்பிரியர்களை காக்க வைத்தாலும்,சத்தமே இல்லாமல் யுத்தம் ஒன்று செய்த்தது போல் கடந்த வெள்ளியன்று, ஏ….சிங்கம் போல! அப்படின்னு தனது புதிய ஓ.எஸ்ஸான பனிச்சிறுத்தையை(Snow Leopard)  வெளியிட்டு விண்டோசுக்கு கொஞ்சம் உதறலைக்கொடுத்துவிட்டிருக்கிறது.இதுக்கு பேசாம ஏ…..சிறுத்த போல! அப்படின்னே சொல்லிருக்கலாம்! சரி அத விடுங்க விஷயத்துக்கு வருவோம்.ஏன் ஆப்பிளோட இந்த புது வாரிசு பனிச்சிறுத்தை விண்டோஸுக்கு கொஞ்சம் உதறலக்கொடுத்திருக்கிறது அப்படின்னு பார்த்தோமுன்னா……

snow-leopard-1

ஆப்பிளின் பனிச்சிறுத்தையுடன் ஸ்டீவ் ஜாப்ஸ்


ஆப்பிளின் பனிச்சிறுத்தை

ஆப்பிளின் பனிச்சிறுத்தை

முதலில் இந்த பனிச்சிறுத்தையானது ஆப்பிளின் பழைய ப்ராஸசரான “பவர் பிசி” யில் வேளை செய்யாது.எனவே ஆப்பிளின் வாடிக்கையாளர்கள் புதிய கணினி வாங்கியே ஆக வேண்டும்.ஆனால் விஷயம் அதுவல்ல.இந்த பனிச்சிறுத்தை “இன்டெல்” எனும் ப்ராஸசருடன்தான் வேலை செய்யும்.அதனால்…….

snow-leopard-screenshot_apple

2009-08-26sl-4

  1. மின்னஞ்சல், நாள்காட்டி மற்றும் விலாசப்புத்தகம் போன்றன மைக்ரோசாப்ட் நிறுவனம் பயன்படுத்துவது போல “அவுட்லுக்” போன்ற பிரத்தியேக மென்பொருள்கள் பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தலாம்.இதனால் நிறுவன மின்னஞ்சல்கள் மிக சுலபமான முறையில் பெறலாம்.இந்த வசதியினை அடுத்த வருடம்தான் மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  2. விண்டோஸ் போல எந்த ஒரு கோப்பில் ரைட் க்ளிக் செய்தாலும் பல வினைகளுக்கான வாய்ப்புகள் தெரியும் வசதியை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது!

  3. மேலும் “க்விக்டைம்” எனும் ஆப்பிளின் காணொளி எந்திரம் மேலும் மெருகேற்றப்பட்டு எல்லா காணொளிகளும் ஐபாட்,ஐஃபோன் மற்றும் யூட்யூப் போன்ற எல்லாவற்றிலும் பயன்படுத்த ஏதுவாக மாற்றும் வசதியுடன் உருவாக்கியுள்ளது ஆப்பிள்.
  4. மிக முக்கியமாக ஓ.எஸ்ஸின் அளவு 7 கிகா பைட் வரை குறைத்து கணினி பிரியர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது ஆப்பிள்.
  5. இவையெல்லாவற்றையும் விட கணினியின் செயல்வேகத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது ஆப்பிள்.இதனால் வலையோடியின்(browser) செயல்வேகத்திறன் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம்.

இந்த எல்லா காரணங்களினாலும் ஆப்பிள் மைக்ரோசாப்டை பல வகையில் மிஞ்ச அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவசரப்படாமல் பொறுத்திருந்து பார்ப்போம் வெல்ல போவது விண்டோஸ் 7-ஆ…அல்லது ஆப்பிளின் பனிச்சிறுத்தையா என்று!

Advertisements