என்னது விஜய்க்கும் தனுஷுக்கும் சண்டையா?

Posted on செப்ரெம்பர் 6, 2009

0


நம்ம எல்லாருக்கும் தெரியும் இளைய தளபதி விஜய்யின் அடுத்த படம் வேட்டைக்காரன், அந்த படத்தோட படப்பிடிப்பு  பன்ஞ் டயலாக்கும், குத்துப் பாடலுமாக பரபரவென வளர்ந்து வருகிறது. சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் செட் போட்டு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள்.இந்த வேட்டைக்காரன் விஜய்யின் 49 வது படம். அதுமட்டுமில்லாமல் வில்லு, குருவி என இரு சுமார் படங்களுக்குப் பிறகு வெளியாகும் படம். நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலைமை.இல்லையென்றால் தமிழ் சினிமாவில், இளைய தளபதியா? அது யாரு என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

வேட்டைக்காரனாக விஜய்

வேட்டைக்காரனாக விஜய்

விஜய்-தனுஷ் மோதல்:

வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட ஏவிஎம் திட்டமிட்டுள்ளது. ர‌ஜினி, கமல், அ‌ஜித், விக்ரம், சூர்யா என யாருடைய படமும் வரும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. வேட்டைக்காரன் மட்டும்தான் ஒரே மாஸ் ஹீரோவின் படம்.அதெல்லாம் சரி, இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது.அது என்ன தெரியுமா உங்களுக்கு? அது வேற ஒன்னும் இல்லீங்க, மாஸ் ஹீரோ படம் வரலன்னா என்ன பொல்லாதவன் நான் இருக்கேன்ல போட்டி போட வந்துட்டாரு ஒரு நம்ம பக்கத்துவீட்டுப் பையன், இல்லை இல்லை ஹீரோ! அதாங்க தனுஷ், அவரோட அடுத்த படமான குட்டி.

"குட்டி" தனுஷ்

வேட்டைக்காரன் & குட்டி படங்கள்:


இது எல்லாம் விஜய்க்கு ஜூஜூபி என நினைப்பவர்களுக்கு ஒரு சின்ன ப்ளாஷ்பேக்……

விஜய்யின் அழகிய தமிழ் மகன் வெளியான போது தனுஷின் பொல்லாதவன் ‌ரிலீஸானது. அழகிய தமிழ் மகன் ஊத்தல், ஆனால் பொல்லாதவன் அசத்தல்!.அது மட்டுமில்ல,பிறகு வில்லு வெளியான போது படிக்காதவன் வெளியானது. வில்லு சுமார், படிக்காதவன் ஹிட்.அதனால இது கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்த சஸ்பென்ஸ் தான்!

வருகிற தீபாவளிக்கு இளைய தளபதி விஜய்யும், பொல்லாதவன் தனுஷும் மோதுகிறார்கள்.மன்னிக்கனும் ஒரு சின்ன திருத்தம், வேட்டைக்காரனும், குட்டியும் மோதுகின்றன. ஜெயிக்கப் போவது யார்? காத்திருக்கிறார்கள் இருவ‌ரின் ரசிகர்களும்.அட நாம கூடத்தாங்க!


Advertisements