அட நம்ம நமிதா-நிலா! சபாஷ் சரியான போட்டி!

Posted on செப்ரெம்பர் 5, 2009

2


பதிவுத்தலைப்பைப் படித்துவிட்டு, ஆமாம்….நம்ம நாட்டுக்கட்டை நமிதா தெரியும், அது யாரு அந்த நிலா? அப்படின்னு கேட்கிறவர்களுக்கு ஒரு சின்ன நிலா-அறிமுகம்(சமுதாயத் தொண்டுங்க?!).உங்க எல்லோருக்கும் அ..ஆ…தெரியும்தானே? ஆமாம் தமிழ்ல முதல் இரண்டு எழுத்துக்கள் அப்படின்னு பதில் சொல்றவங்க எல்லாரும் கொஞ்சம் திரு.எஸ்.ஜே.சூர்யாவை போய் பார்த்துட்டு வந்து அப்புறம் படிச்சீங்கன்னா நல்லா புரியும், ஹி ஹி! சரி ரொம்ப கடிச்சிட்டேன், மேட்டருக்கு வருவோம்.

அ...ஆ....நிலா!

அ...ஆ....நிலா!

சமீபத்தில் ஜகன்மோகினி ஆடியோ விழாவில் கலந்து கொண்ட நமிதா, நிலா அருகருகே அமர்ந்திருந்ததால், அவர்களைப் பார்த்தால் பரஸ்பரம் பகை கொண்டவர்கள் போலவே தெ‌ரியவில்லை.ஆனால் உண்மை அதுவல்ல என்பதுதான் சுவாரஸ்யம்(ம்ம்ம்….நாட்டுக்கு இது இப்போ ரொம்ப அவசியம்?!). அதாவது ஜகன்மோகினி படப்பிடிப்பு தொடங்கியது முதலே இருவருக்குமிடையில் பனிப் போர். படத்தில் நீ நாயகியா இல்லை நான் நாயகியா என்பதே முக்கியமான பிரச்சனை.

நிலா இளவரசியாக ஜகன்மோகினியில் நடித்துள்ளார். படத்தில் மோகினியாக நமிதா வில்லி வேடத்தில் வருகிறார். நான்தான் இளவரசி, ஆகவே நான்தான் ஹீரோயின் என்கிறார் நிலா.ஆனால், படத்தின் டைட்டில் ரோலில் நடிப்பது நான். படத்தின் கதையே என்னைச் சுற்றிதான் நடக்கிறது. ஆகவே நான்தான் நாயகி என்கிறார் நமிதா. சரி அப்படியென்றால், யார் சொல்வது ச‌ரி? உங்களுக்கும் சந்தேகமிருந்தா இந்த படங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! நமக்கேன் வம்பு?

Jaganmohini240809_35

Jaganmohini240809_38

jaganmohini251008_5

ஜகன்மோஹினி நமிதா

ஜகன்மோஹினி நமிதா

Jaganmohini240809_15

Jaganmohini240809_13

இரண்டு பேருக்குமே சமமான கதாபாத்திரம் என்று இதுவரை டபாய்த்து வந்த படத்தின் இயக்குனர் முதல்முறையாக ஹீரோயின் யார் என்பதை கோடிட்டு காட்டியிருக்கிறார். “இருவருக்கும் சமமான கதாபாத்திரம் என்றாலும், ஹீரோயின் நமிதா என்பதால் அவருக்கு கூடுதலாக காட்சிகள் வைத்திருக்கிறோம்.”

இதற்கு மேலும் நீயா நானா போட்டி தொடர்ந்தால், பேசாமல் தீபாவளிக்கு திரு. சாலமன் பாப்பையா அவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்தி இந்த அதி முக்கியமான?! பிரச்சனைய தீர்த்துவிட வேண்டியதுதான்.என்னங்க சொல்றது சரிதானெ?

நன்றி: indiaglitz.com

Advertisements