ஹாலிவுட்டின் அதிரடி மும்மூர்த்திகளின் ஆக்ஷன்படம்

Posted on செப்ரெம்பர் 3, 2009

0


நமக்கு எல்லாம் தெரியும் “ராம்போ” என்றால் ஒரு குத்துச்சண்டை வீரர் என்று.ஆனால் அவர் குத்துச் சண்டை வீரர் மட்டுமல்ல! ஏனென்றால் அவர் ஒரு இயக்குனரும் கூட.ஆமாம் நான் யாரைப் பற்றி சொல்கிறேன் என்று இப்பொழுது உங்களுக்கு புரிகிறது தானெ? சரி விஷயத்துக்கு வருவோம்.
pacquiao_stallone_movie
சில்வஸ்டர் ஸ்டாலோன் அடுத்து இயக்கி நடிக்கும் படம் தி எக்ஸ்பெ‌‌ன்டபிள். இந்தப் படத்தில் ஸ்டாலோனுடன் முக்கிய வேடத்தில் அர்னால்டும் நடிக்கிறார். புரூஸ் வில்லிசையும் நடிக்க கேட்டிருக்கிறார் ஸ்டாலோன்.
அர்னால்டு

அர்னால்டு

bruce-willis-cesarepaciotti-flair
ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் மூவரும் தனித்தனியாக நடித்தாலே ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய திரைவிருந்து.மூவரும் ஒன்றாக நடிக்கிறார்கள் என்றால் கொண்டாட்டத்துக்கு என்ன குறையா வைக்கப்போகிறார்கள்.அது கண்டிப்பாக ஒரு அதிரடி தீபாவளிதான்!

இது பற்றி கூறிய நமது “டை ஹார்டு” திருமகன் வில்லிஸ், படத்தின் கதை என்ன, என்னுடைய கேரக்டர் எந்த மாதி‌ி என்பதை பற்றியெல்லாம் எனக்கு தெ‌ரியாது. அவர் கேட்டார், நான் நடிக்க தயார் என்றேன். படப்பிடிப்புக்கு எப்போது கிளம்புவோம் என காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அடக்கமாக.விரைவில் படத்தின் கதை குறித்து வில்லிசுடன் விவாதிக்க இருக்கிறாராம் ஸ்டாலோன். அதன் பிறகே படப்பிடிப்பக்கு கிளம்புகிறார்கள்.

arnold-schwarzenegger-sous-la-houlette-de-sylvester-stallone

sylvester_stallone

ஹாலிவுட்டின் டாப் த்‌ி ஆ‌க்சன் ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படம் என்பதால் தி எக்ஸ்பென்டபிளுக்கு இப்போதே கடும் எதிர்பார்ப்பு. இயக்குனர் ஸ்டாலோன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என நம்புவோம்.

Advertisements