ஐயோ பாவம் இளையதளபதி விஜய்

Posted on செப்ரெம்பர் 3, 2009

0


தமிழ் சினிமாவில் இன்றுவரை இளையதளபதியாக வலம்வரும் நடிகர் விஜய், சமீபத்தில் காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்காந்தியுடன் நடத்திய  பேச்சுவார்த்தை மூலம் அரசியலிலும் ஒரு இளையதளபதியாக வலம்வரலாம் என எண்ணிக்கொண்டிருந்தார்.ஆனால் அவர் ஒன்றை நினைக்க தெய்வம் வேறொன்றை நினைக்கிறது போலிருக்கிறது! ஆம், விஜயின் இந்த சந்திப்பு காரணமாக விஜய் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் விஜய்க்கு புதுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

vijay-06

தமிழ் சினிமா வர்த்தகத்தில் வெளிநாட்டுவாழ் ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை நம்பிதான் படங்களின் வெளிநாட்டு உ‌ரிமை பெரும் தொகைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், விஜய் நடிக்கும் படங்களை புறக்கணிப்பது என கனடா தமிழ் சங்கம் அறிவித்துள்ளது, விஜய் படங்களின் வர்த்தகத்தை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆமாம்……விஜயின் இந்த சந்திப்புக்கும் கனடா தமிழ் சங்கத்திற்க்கும் என்ன சம்பந்தம்?

இருக்கிறது நண்பர்களே! அதாவது, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போ‌ரில் அப்பாவி ஈழத் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்கு இலங்கை அரசுக்கு போர் பலமும், ஆன்ம பலமும் கொடுத்துதவியது இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு. இலங்கையின் போர் குற்றங்கள் சர்வதேச அரங்கில் விவாதிக்கப்படாமல் மூடி மறைக்கவும் உதவிபு‌ரிந்தது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான். சோனியாகாந்திக்கு புலிகள் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பே இந்த படுகொலைகளுக்கு மூலகாரணம் என்று ஈழத் தமிழர்கள் பலரும் கருதுகின்றனர்.

இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் காங்கிரஸ் கட்சின் மீது அளவுகடந்த வெறுப்புடன் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் காங்கிரஸ் ராகுல்காந்தியை சந்தித்து அரசியல் பற்றி விவாதித்தது ஈழத் தமிழர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கனடா தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் அரசியலில் ஈடுபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருடைய படங்களை புறக்கணிப்போம் என்று திட்டவட்டமாக தெ‌ரிவித்துள்ளனர்.

உண்மையிலே விஜய்க்கு தமிழர்கள் மீதும், தமிழ் நாட்டின் மீதும் அக்கரையிருக்குமாயின், அவர் எப்போதும்…..ங்ணா ங்ணா……சொல்லுங்ணா என்று அழைக்கும் தமிழர்களை மதிப்பவரானால், குறைந்தபட்சம் இந்த அறிக்கைக்கு அவர் ஒரு நல்ல பதிலை தெரிவித்தே ஆக வேண்டும்.இல்லையென்றால்……இல்லன்னா என்ன இங்க நம்மூர்லேயே சொதப்புகிற அவர் படங்கள் இதுவரை கனடா போன்ற வெளி நாடுகளில் குறைந்தபட்சம் திரையிடப்படவாவது செய்தனர் புலம்பெயர்ந்த தமிழர்கள். இனி அதுவும் கூட செய்யமாட்டார்கள் அவர் பதிலளிக்கவில்லையென்றால்!

பொறுத்திருந்து பார்ப்போம், விஜய் தமிழ் சினிமாவில் மட்டும்தான் இளைய தளபதியா? இல்லை தமிழக அரசியலிலும் இளைய தளபதியா என்று? ஆமாம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வருகைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள்!Advertisements