புற்றுநோயும் தேனீயும்

Posted on செப்ரெம்பர் 1, 2009

0


மனிதனை பாடாய்ப் படுத்தும் பல உயிர்க்கொல்லி நோய்களில் புற்றுநோய் மிக மிக கொடுமையானது! அது மட்டுமல்லாமல் புற்றுநோயின் மிக முக்கியமான பிரச்சனையே அது முற்றிலும் அழிக்க முடியாத ஒரு நோய் என்பதுதான்.மேலும் புற்றுநோயானது குறிப்பிட்ட ஒரு உடல் பாகத்தினை பாதிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் நாளடைவில் உடலின் பல்வேறு பாகங்களையும் பாதிக்கும் மிக கொடிய தன்மையுடையது. இத்தகைய புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த எத்தனையோ முயற்ச்சிகளை ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் எடுத்த வண்ணம் இருந்தாலும் அது “புலி வால்” பிடித்த கதையாகவே போய்க்கொண்டிருக்கிறது!

இது ஒரு புறமிருக்க, புற்றுநோயைக் குணப்படுத்த எடுக்கப்படும் ஒவ்வொறு முயற்ச்சிக்கும் ஒரு பெரிய முட்டுக்கட்டையாக குறுக்கே வருவது புற்றுநோயால் பாதிக்கப் படாத சாதாரண செல்கள் தான்! எப்படி என்றால் புற்றுநோயை நோக்கி ஏவப்படும் ஒவ்வொறு மருந்துமே புற்று நோயை மட்டுமே தாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.ஆனால் இயற்கையில் புற்று நோயைச் சுற்றி கண்டிப்பாக கோடிக்கணக்கான சாதாரண செல்களும் உள்ளன. அப்படி இருக்கையில் புற்று நோய் மருந்துகள் எவ்வளவு திறனுள்ளவையாக இருப்பினும் அவற்றுக்கு புற்று நோயை மட்டுமே தாக்கும் குணம் இல்லையெனில் அவை சிகிச்சைக்கு உகந்தவையாக கருதப்பட மாட்டா! இதே நிலை புற்று நோயை தகர்க்கும் வலிமையுள்ள “ரேடியோ மற்றும் கீமோதெரப்பிக்கும்”.எனவே புற்று நோய் ஆராய்ச்சியின்(மருத்துவ பிரிவு/க்ளினிக்கல்) ஒரு பெரும் சவால் என கருதப்படுவது புற்று நோயை மட்டுமே குறிவைத்து தாக்கும் ஏவுகனையையொத்த பண்புடைய மருந்துகள்தாம்.இந்த வரிசையில் இதுவரை பல மருந்துகள் இருப்பினும் பெரிய  அளவில் எதுவும் பயனளிக்கவில்லை என்பதே நிதர்சன உண்மை!

மேற்கூறிய அதே குணமுள்ள மருந்து/சிகிச்சை முறை சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டது.அதைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு உங்களுக்காக கீழே…….

தேனீக்களுக்கும் புற்று நோய்க்கும் என்ன சம்பந்தம்?

நேனோபீஸ்

நேனோபீஸ்

தேனீக்கள் பொதுவாக தன் எதிரியைத் தாக்கும் பொழுது ஒரு வித விஷத்தை எதிரி உயிரினத்தின் செல்களுக்குள் செலுத்துகின்றன.இந்த விஷத்தை, புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்! அதாவது தேனீயின் விஷத்தை ஒரு நுண்ணிய புள்ளி போன்ற ஒரு கருவியுடன் (நேனோபீஸ்)இணைத்து,   அதைப்பின் புற்று நோய் செல்களை மட்டும் சென்று தாக்குமாறு வடிவமைத்து புற்று நோய் செல்களை அழித்துள்ளனர்!

நோனோபீஸும்(Nanobees) புற்றுநோய் சிகிச்சையும்

நேனோபீஸ் என அழைக்கப்படும் அந்த நுண்ணிய கருவின் மூலம் புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்க மேலும் இதர ரசாயன பொருள்களையும்  நேனோபீஸுடன் இணைத்து பின் அதை ரத்த நாளங்களின் வழியாக உள்செலுத்துவதால் அது புற்றுநோய் செல்களை மட்டும் அடைந்து அந்த செல்களை அழித்துவிடுகிறது என்பதை நீரூபித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது தேனீக்களின் விஷத்தில் உள்ள “மெலிட்டின்” என்னும் புறதம் தான் அதன் விஷத்தன்மையின் ஆதாரம்.அந்த மெலிட்டின் இதர ரசாயனப் பொருள்களுடன் சேர்த்து ரத்தத்துடன் செலுத்தப்படுகையில் அது புற்றுநோய் செல்களை மட்டும் சென்றடைந்து, செல்களின் மேற்புறத்தில் பல ஓட்டைகளை ஏற்படுத்தி பின் அந்த செல்களை செயலிழக்கச் செய்துவிடுகிறது!

ஆனால் பொதுவாக விஷத்தன்மையுள்ள எந்த ஒரு பொருளையும் ரத்ததில் செலுத்தினால் அது ரத்தத்தின் சிவப்பு அனுக்களை உடனே அழித்து விடும்.ஆனால் அவ்வாறு ஏற்ப்படாமல் இருக்க பல ஆராய்ச்சி உத்திகளை கையாண்டு இந்த சாதனையை புரிந்திருக்கிறார்கள் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்!

தேனீக்கள்

தேனீக்கள்

சிகிச்சை முறை விளக்கப்படம் 1

சிகிச்சை முறை விளக்கப்படம் 1

சிகிச்சை முறை விளக்கப்படம் 2

சிகிச்சை முறை விளக்கப்படம் 2

சபாஷ் ஆராய்ச்சியாளர்களே…..சரியான முயற்ச்சி!

இச்செய்தியைப் பற்றி விரிவாக படிக்க இங்கு செல்லுங்கள்

வருகைக்கு நன்றி! உங்கள் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்ல்லுங்கள்!

Advertisements