ஜப்பானில் “ஓசாமா”?

Posted on ஓகஸ்ட் 31, 2009

3


இந்த பதிவுத்தலைப்பை படித்தவுடன், ஆஹா…..உலகமே தேடிகொண்டிருக்கின்ற “ஓசாமா பின் லேடன்” ஜப்பானில்தான் ஒளிந்து கொண்டிருக்கின்றானா? அப்படின்னு நினைப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியும் காத்துக்கொண்டிருக்கிறது.மேலெ படியுங்கள் உங்களுக்கே புரியும்!

ஜப்பானில் ஓசாமா?
ஜப்பானில் ஓசாமா?

ஒரு உண்மையை சொல்லனும்னா இந்த பதிவுக்கும் ஓசாமா பின் லேடனுக்கும் இம்மி அளவு கூட சம்பந்தம் இல்லீங்கோ! என்னடா இவன் குழப்பறானேன்னு பார்க்கிறீர்களா? சொல்றேன் மேலெ படிங்க….

ஜப்பானிய மொழியில் “ஓசாமா” என்ற வார்த்தைக்கு “அரசன்/மகாராஜா” என்று பொருள்! ஆனால் ஜப்பானிய வரலாற்றில் இதுவரை அரசர்களே இல்லை! மாறாக அவர்களுக்கு, “சாமுராய்களும்”, எம்பரர் எனச் சொல்லக்கூடிய “பேரரசர்கள்” மட்டுமே இருந்திருக்கிறார்கள்.ஜப்பானிய சாமுராய்களின் வரலாறு மிக மிக சுவாரசியமானது! அதைப்பற்றிய ஒரு சிறு குறிப்பே இந்த வலைப்பதிவு.

சாமுராய்

சாமுராய் என்றால் “படைத்தளபதி” என்று பொருள்.ஜப்பானிய வரலாற்றைப் பார்த்தோமேயானால் அது கி.மு 4500 ஆண்டில் தொடங்குகிறது என சொல்லப்படிகிறது.அந்த சமயத்தில் ஜப்பானிய தீவுகளை மீனவர்கள்,வேடர்கள் மற்றும் விவசாயிகளும் ஆக்கிரமித்திருந்ததாகச் சொல்லப்படிகிறது.இவர்கள் பெரும்பாலும் சீனா,கொரியா மற்றும் ஆசிய இதர பகுதிகளிலிருந்தும் வந்தவர்கள் என சொல்லப்படிகிறது.ஜப்பானிய வரலாறு பெரும்பாலும் போரப்பற்றியதே! பல்வேறு சிறு சிறு போர்க்குழுக்களே ஜப்பானிய தீவுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. இந்த போர்க்குழுக்கள் அனைத்தும் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தது.அந்த ஓவ்வொறு போர்க்குழுவுக்கும் ஒரு தலைவன் இருந்தான்.அந்த தலைவர்களே ஜப்பானியரின் மூதாதையர்கள் எனச் சொல்கிறார்கள்! ஜப்பானியர்களின் போர்கள் அனைத்தும் விளைநிலங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே தொடுக்கப்பட்டன என்கிறது வரலாறு.ஏனென்றால் 20 விழுக்காடு நிலப்பகுதி மட்டுமே விவசாயத்துக்கு உகந்ததாக இருந்தது.அத்தகைய நிலங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வெற்றியாளனையே “சாமுராய்” என அழைத்தார்கள் ஜப்பானியர்கள்.

சாமுராய்
சாமுராய்

ஒரு உதாரணத்துக்கு சொல்லனும்னா அடிப்படையில நம்ம அர்சுனன் போன்றவன்தான் ஜப்பானிய சாமுராய்!

சாமுராய்-ஜப்பானிய அர்சுனன்?
சாமுராய்-ஜப்பானிய அர்சுனன்?

ஒரு சாமுராய் போர்
ஒரு சாமுராய் போர்

ஜப்பானிய சாமுராய் வரலாற்றில் ஒரு முக்கியமான காலம் கி.மு.600.இந்த சமயத்தில்தான் “ஜிம்மு தென்னோ” எனும் சாமுராய் ஜப்பானிய சாமுராய் குழுக்களையெல்லாம் வென்று சாமுராய் பெருந்தலைவனானான் என்கிறது வரலாறு. தென்னோவை “புனித போர்வீரன்” (The divine warrior) என்று அழைத்தனர். இவன் ஜப்பானின் க்யூஷு தீவிலிருந்து கின்கி பகுதி வரை படை நடத்திச் சென்று “யமாடோ” எனும் பகுதியில் குடியேறி பின் அந்த பகுதி “யமாடோ டைனாஸ்டி/நாடு” என்று அழைக்கப்பட்டது.இன்றுவரை யமாடோ இனமே ஒரு புனித இனமாக கருதப்படிகிறது என்கிறது வரலாறு!

யமாடோ இனமே பின்னாளில் சீனா,கொரியா மற்றும் ஆசியா மீது படையெடுப்பு பல நடத்தியது.இதன் காரணமாகவே சீன,கொரியா பண்பாடு,கலாச்சாரம், மற்றும் சண்டைப் பயிற்சிகள் (மார்ஷியல் ஆர்ட்ஸ்) போன்றவை ஜப்பானில் தோன்றியது என்கின்றன வரலாற்று ஏடுகள்! வரலாற்றுக் கூற்றுப்படி எம்பரர் “கெய்க்கோ” என்பவருக்குத்தான் முதன் முதலில் “ஷோகுன்” எனும் பட்டம் அளிக்கப்பட்டது.ஷோகுன் என்றால் “கோடுங்கோளன்” என்று பொருள்.இந்த கேய்க்கொவிற்கு இளவரசன் “யமாடோ” என்று ஒரு மகன் இருந்ததாகவும், அவன் தந்திரமிக்க,பலம்வாய்ந்த,பயமறியாத ஒரு போர்வீரனாக திகழ்ந்தததாக வரலாறு கூறுகிறது.வருங்கால சாமுராய்க்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தவன் யமாடோ என்பது குறிப்பிடத்தக்கது!

சாமுராயும் போர்கருவிகளும்

சாமுராய்கள் பல்வேறு போர்கலன்களைப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.அவை பெரும்பாலும் வாள்களும்,வில்லுமே ஆகும்.மேலும் போரில் தங்களை பாதுகாத்துக்கொள்ள அணியும் உடைகள் பல வகையில் அமைந்திருந்தன.(பார்க்க படம் கீழே)

சாமுராயின் வாள்

samurai-6samurai-7

samurai-8சாமுராயின் அணிகலன்

samurai-3samurai-4samurai-5samurai-1samurai-2

புஷிடோவும் சாமுராயும்

“புஷிடோ” என்றால் ஜப்பானிய மொழியில் “போர்வீரனின் பாதை” என்று பொருள்.இது சாமுராய்களின் வாழ்க்கை முறையாகவும், கொள்கையாகவும் இருந்தது.புஷிடோ என்பது “அச்சத்திலிருந்து விடுதலை” எனும் தத்துவமாகும்.அதாவது சாமுராய் என்பவன் அச்சத்தை வென்றவன் எனும் பொருள்பட வாழ்பவன் என்று பொருள். தொண்டு என்பதும் சாமுராயின் தத்துவம்/கொள்கையாகும்!

ஜப்பானில் சாமுராய் காலம்

ஜப்பானில் சாமிராய் காலம் என்பது சுமார் 1000 ஆண்டுகள் என்கிறது வரலாறு.அதாவது கி.மு.600 தொடங்கி கி.பி.1876 வரை.இந்த காலகட்டத்தில் ஜப்பானில் சாமுராய்களின் வீரம்,போர்முறை,கொள்கைகள் மற்றும் இன்று அறியப்படும் சாமுராய் பற்றிய செய்திகள் அனைத்தும் நடந்தேறின என்கிறது ஜப்பானிய சாமுராய் வரலாறு.இறுதியில் “எம்பரர் மெய்ஜி” எனும் பேரரசரின் ஆட்சியில் சாமுராய்களின் ஆதிக்கம் முழுவதும் அழிக்கப்பட்டு அவர்களுக்கு போர் வாள் பயன்படுத்தும் தகுதி மறுக்கப்பட்டது என்கிறது வரலாறு!

சாமுராய் திரைப்படங்கள்

சாமுராய் பற்றிய ஜப்பானிய திரைப்படங்கள் பல இருப்பினும் நம் போன்ற வெளி நாட்டவர்க்கும் சாமுராய் பற்றிய வெளிச்சம் மேற்கத்திய படமான “தி லாஸ்டு சாமுராய்” மற்றும் ஜப்பானிய இயக்குனர் அகிரா குரொசாவாவின்  “செவன் சாமுராய்” போன்ற படங்களின் மூலமே கிடைத்தது எனலாம்.

2003_the_last_samurai_005

2003_the_last_samurai_003

செவென் சாமுராய்
செவென் சாமுராய்

seven-samurai

சாமுராய் பற்றி மேலும் படிக்க இங்கு செல்லுங்கள்

சரி இணையச்சொந்தங்களே, மீண்டும் ஒரு சுவாரசியமான வலைப்பதிவில் சந்திப்போம்.உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்! நன்றி.

நன்றி: japanarmour.com,google.com

Advertisements