காதல் கதையா? காமசூத்திராவா?

Posted on ஓகஸ்ட் 29, 2009

13


என் உள்ளக்கிடக்கைகளுக்கும், அதை தாங்கி வரும் என் வலைப்பக்கத்திற்கும் உயிர் கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கும் இணையச்சொந்தங்களே முதற்கண் உங்களுக்கு என் வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி(சரியாகச் சொன்னால் நான் இந்த வலைப்பக்கத்தை தொடங்கியதே ஒரு திரைவிமர்சனத்தில்தான்!).

நீங்கள் இந்த வலைப்பக்கத்தின் தலைப்பைக் கண்டு நான் ஏதோ எங்கேயோ சாகக் கிடந்த பட்டிமன்றக் கலையை இன்று பட்டி தொட்டிகளிலெல்லாம் காண/கேட்கக்கிடைக்க வைத்த திரு.திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் சமீபத்திய ஒரு பட்டிமன்றத்தைப் பற்றிதான் பேசப்போகிறேன் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம்! இது சமீபத்தில் வெளிவந்த,(நீண்ட போராட்டத்திற்குப் பின்தான்!) நமக்கு “கடவுள்” தந்த இயக்குனர் திரு.வேலுபிரபாகரனின் திரைவிருந்து?! “காதல் கதை” என்னும் திரைப்படத்தைப் பற்றிய ஒரு சிறிய அலசல்தான் இந்த வலைப்பதிவு.

18+ (வயது வந்தவர்களுக்கு மட்டும்…….!)

என்னடா இழுவ…..மேட்டருக்கு வாடா…..அப்படின்னு நீங்க சொல்லறதுக்கு முன்னாடி இதோ…..

காதலா….காமமா?

kadhal-kadhai-21மேலே நீங்கள் பார்க்கும் பெண்ணை சுற்றித்தான் கதையே (திரைப்படமே) என்றாலும் இந்த திரைப்படம் என்னவோ சமதாயத்தில் பாதிக்கப்பட்ட மூன்று வெவ்வேறு பெண்களின் போராட்டங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது என்கிறார் இயக்குனர்.இத்திரைப்படத்தின் மையக்கரு(அப்படின்னு இயக்குனர் சொல்றதுங்கோ!) காதல் என இளசுகள்(பெருசுகளும் சேர்த்து என்கிறார் இயக்குனர்!) நினைத்துக்கொண்டு செய்வதனைத்தும் காமத்தின் ஆரம்பமே என்கிறார் இயக்குனர்.(பார்க்க படம் கீழெ)தங்கள் காம இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் ஆயுதமே காதல் என்றும் அப்படி ஒரு உணர்வே இல்லை என்றும் வாதிடுகிறார்.

இது ஒரு பக்கமிருக்க, எல்லாவற்றையும் மூடி வைப்பதால்தான் நாட்டில் கற்பழிப்புகளும், கள்ளக்காதல்களும் அதிகரித்து இருக்கின்றன என்றும், இதை சரி செய்ய மேலை நாடுகளில் இருப்பது போன்று  பெண்கள் ஆடைகளை களைந்து பொது இடங்களில்(கடற்கறை போன்ற…)??!! குளித்தால் ஆண்களுக்கு பெண்களைப் பற்றிய எந்த தவறான எண்ணங்களும் ஏற்படாது என்கிறார் இயக்குனர்! மேலும் ஊடகங்கள் அனைத்தும் பெண்களின் உடல் உருப்புகளை (மார்பகம்,தொப்புள் இன்னும் எல்லாம்….!) பிரதானமாக்கி வியாபாரம்/பணம் பண்ணுவதால் பாமரனின் பெண்கள் பற்றிய ஈர்ப்பு அதிகமாகி அவன் பெண்களை முழுமையாக அறிய வேண்டி தவறான செயல்களில் ஈடுபடுகிறான் என்றும், இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கவே தான் எல்லாவற்றையும்?!!உரித்து காட்டியிருப்பதாகவும் வாதிடுகிறார்/நியாயப்படுத்திக்கொள்கிறார்!

காட்சியமைப்பு

கெட்டுப்பொயிருக்கும்?!! தமிழ்சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டி எடுக்கப்பட்டு திரையிடபட்டுக்கொண்டிருக்கும் காதல் கதையின் ஒரு சில உதாரணக் காட்சிகள் கீழே…….இதுக்கு பேரு காதலாமாம்??!!

இதுக்கு பேரு காதலாமாம்??!!

kadhal-kathai-stills-015

கலாச்சாரச்சீரழிவு

தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை ஒரு காமப்பொருளாகவே/போகப்பொருளாகவே இது நாள்வரை நாம் வைத்திருப்பதாக பக்கம் பக்கமாக வசனம் பேசும் இயக்குனர் தன் பங்குக்கு செய்த சேவையை நீங்கள் கீழே காணலாம்……

kadhal-kathai-stills-021kadhal-kathai-stills-023மேலெ உள்ள படங்கள் எதைக் காட்டுகிறது என்றால்?!! இதுவரை செய்தவர்கள் சரியாகச் செய்யவில்லையே (எதை? நீங்களே புரிந்து கொள்ளுங்கள்! ) என்ற ஒரு ஆதங்கத்தில் திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இந்த நடிகையை படாதபாடு படுத்தி இருப்பதைத் தான் காட்டுகிறது! பாவம் ஷெர்லி தாஸ்!

பெண்விடுதலை?!

பெண் விடுதலை என்று சொல்லிக்கொண்டு இயக்குனர் (எடுத்திருக்கும் பல காட்சிகள் அனேகமாக) தமிழ் நாட்டு பெண்களை இந்த கோலத்தில்(பார்க்க படம் கீழே)  தான் பார்கப்போகிறார் எனத் தோன்றுகிறது!

kathalk3

இனிமே இந்த மாதிரி படம் எடுப்பியாடா......என்பது போல்?!!
இனிமே இந்த மாதிரி படம் எடுப்பியாடா……என்பது போல்?!!

இயக்குனரின் வாதங்கள்:

வேலுபிரபாகரனின் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதற்கான காரணமாக அவர் கூறுவது:

“மனித இனத்துக்கு அடிப்படையான பெண்ணினத்துக்கு இந்த திரைப்படம் காணிக்கை”

என ஆரம்பிக்கும் காட்சி மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி,ஆதிமனிதன் எனத் தொடர்ந்து பின் 100 கோடி மக்கள் இருந்தும் இந்தியாவில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ வளர்ச்சியோ இல்லை எனக் குற்றஞ்சாட்டி எல்லாம் மேலைநாட்டவரே  கண்டுபிடித்தது என நகர்கிறது.மேலும் பண்பாட்டுக்கு பெயர்போன நம் நாட்டில் அன்றாடம் நாம் படிக்கும்  செய்தி கற்பழிப்பு,கொலை….காரணம் நம் பெண்ணடிமை மனப்பான்மை எனும் அவர் மேலும், நம் நாட்டில் கிட்டத்தட்ட எல்லோருமே ஒரு வித காம நோயோடுதான் வாழ்கிறோம் என்கிறார்! என்ன கொடுமை சரவணன் இது!!

காமக்கொடூறர்கள்

விளைவு…..பார்வையாளேயே காமுறுகிறார்கள், பேருந்தில்(அந்நியன் படத்தில் வறுமே ஒரு காட்சி அதுபோல!), பெண்கள் கூட்டமாக உள்ள எல்லா இடன்களிலும் உராய்ந்து காமுறுதல், உச்சகட்டமாக பலாத்காரத்தில் ஈடுபடுதல் என நீள்கிறது பட்டியல்!(இதில் அனைத்தும் உண்மையே என்பது என் கருத்தும் கூட!) நாட்டின் 80% குற்றங்களுக்கு காரணமாக இருப்பது இந்த “காம நோய்” தான் என காவல்துறை பதிவேடுகள் சொல்கிறது என்றும், நாட்டின் வளர்ச்சிக்கும் இதுவே ஒரு பெரும் தடையாக இருக்கிறது என்றும் வாதிடுகிறார் இயக்குனர்!இந்த நோயிலிருந்து மீள நாம் வெளிப்படையாக பேச,சிந்திக்க வேண்டுமென்கிறார்!

காமத்தின் வாயிலாகத்தான் நாம் அனைவரும் பிறந்ததாகவும்??!! அப்படி இருக்க அதை எப்படி கீழ்தரமானதாகவும், வெளியில் பேசக்கூடாததாகவும் இருக்க முடியும் என்றும், எனவே நம் பிள்ளைகளாவது இந்த நோயிலிருந்து மீள நாம் காமத்தை வெளிப்படையாக்க வேண்டுமென்றும் சொல்கிறார்.காமத்தைப்பற்றி நாம் சரியாகப் புரிந்து கொள்ளாததனால்தான் இந்த நாட்டை 100 கோடி மக்களால் நிரப்பி வைத்திருக்கிறோம் என்கிறார்! மேலும் பருவம் வந்த எல்லா உயிரினங்களும் தன் இணை/துணை தேட காமுற சுதந்திரம் இருக்கிறது ஆனால் மனிதன் இவ்விஷயத்தில் மூட சட்டங்களால் அடக்கப்பட்டும்.ஒடுக்கப்பட்டும் இருப்பதால் காமநோய் வளர்ந்திருக்கிறது.இந்நோய் தீர்க்கப்பட வேண்டுமென்றால் பருவம் வரும் எல்லோருக்கும் காமத்தை/பாலியலை தெளிவுபடுத்த/புரியவைக்க வேண்டுமென்கிறார்.

இயக்குனரின் கேள்விகள்:

இந்த கோளாறுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் காமப் பொருளாக உருவாக்கப் பட்டு மறக்கவும்/மறுக்கவும் பட்டு ஒழிக்கப்படுகிறாள்,பலமாக காவல் காக்கப்படுகிறாள்.

1.பெண்கள் எங்காவது ஆண்களின் ஆடை விலகி இருந்தால் அதைக் கண்டு காமுறலாமென நினைக்கிறார்களா?

2.ஆண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் உராய்ந்து காமுறுகிறார்களா?

பதில்: இல்லை. காரணம், சிறு வயது முதல் ஆண்களின் உடல் அமைப்பும்,பகுதிகளும் பெண்களுக்கு பழக்கப்பட்டு விட்டது.

இயக்குனரின் தீர்வு???

(பெண்களைப்போலவே) ஆண்களுக்கும் பெண்களின் உடல் அமைப்பை,நிர்வாணத்தை அறிமுகப்படுத்த/தெளிவுபடுத்த/சாதாரணமாக்க வேண்டும்.அப்படி தெளிவுபடுத்தினால், பெண்கள் ஆண்களுக்கு சாதாரணமாக்கப் பட்டால்தான் ஆண், பெண்களுக்கும் தன்னைப்போலவே உடலும்,உருப்புகளும் உள்ளது என்று பெண்ணுக்கு சம உரிமை கொடுப்பான் என்றும் கூறுகிறார்(முற்றிலும் உண்மை!!).இறுதியாக ஆண்களின் காமப்பார்வையிலிருந்து நாம் கொடுக்கும் விடுதலைதான் பெண்களுக்கு நாம் கொடுக்கும் முதல் விடுதலையாக இருக்க முடியுமென்கிறார் திரு.வேலுபிரபாகரன்!

தொட்டால்தான் காதலா?

இந்த படம் பார்த்த பின் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது மனதில்…..ஆமாம் தொட்டால்தான் காதலா? அப்படி தொடாம காதலிச்சா அத ஒத்துக்க மாட்டாங்களா? இல்ல அதுக்கு பேரு காதலே இல்லையா? காதல் என்ற பெயரில் நம்மவர்கள் செய்யும் காம லீலைகளைத்தான் இந்த படத்தின் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குனர்.அதற்காக அவர் காதல் என்று எதுவுமே இல்லை என்று சொல்வதை எல்லாம் ஒப்புக்கொள்ள முடியாது! காதல் என்பது ஒரு மென்மை/மெல்லிய உணர்வு! அது புரியாதவன் அல்லது தெரிந்தே காமம் கொள்ள காதலை ஆயுதமாகக் கொள்பவன் குற்றவாளி/பைத்தியக்காரன்/காமக்கொடூரன்!

எங்கே செல்லும் இந்த பாதை?!

இந்த படத்தில் இயக்குனர் வாதிடுகிற விதமும் அதற்கான அவரின்  சாட்சியான காட்சிகளும் பெரும்பாலும் முறன்பட்டே இருக்கின்றன.இயக்குனரின் வாதங்கள் பல சரியாக இருப்பினும் அவர் குறிப்பிடும் அந்த மாற்றம் ஒரு நாளிலோ/வருடத்திலோ வராது என்பது உண்மை! எல்லாம் பேசும் அவரே பெண்விடுதலையைப் பறித்துத்தான் இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார் என்பதற்கு சான்று மேலே உள்ள படக்காட்சிகளும், இந்த படம் வெளிவர ஏற்ப்பட்ட தாமதமுமே!

எங்கே செல்லும் இந்த பாதை……..??? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

( நன்றி:சுலேகா.காம் மற்றும் சினி ஸ்னாக்ஸ்.காம்)

Advertisements