விண்வெளி வாசமும் குழந்தை பிறப்பும்

Posted on ஓகஸ்ட் 26, 2009

0


எல்லோருக்கும் மனதின் ஏதோ ஒரு மூலையில் “நானும் கூட விண்வெளி சென்று வசித்தால் எப்படி இருக்கும்” எனும் ஆசை ஒளிந்து கொண்டிருப்பது நிச்சயம் என்றாலும் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதற்கு சாதகமான செய்தியை வெளியிடவில்லை என்பதே நிதர்சனமான உண்மை!

சாத்தியமா மனித வாழ்வு இதுபோன்ற விண்வெளியில்??

சாத்தியமா மனித வாழ்வு இதுபோன்ற விண்வெளியில்??

விஷயம் என்னவென்றால் சமீபத்தில் அமெரிக்க மருத்துவ இதழான “ப்ளாஸ் ஒன்”-ல் வெளியான ஆராய்ச்சி செய்தியின்படி நாம் நினைப்பது போல விண்வெளி/நிலா/மார்ஸ் போன்ற இடங்களில் வாழ்வது சாத்தியமென்றபோதும் அங்கு இனவிருத்தி அதாவது குழந்தைப் பேறு என்பது அவ்வளவு எளிதானதல்ல என்கின்றனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்!

ஆராய்ச்சியின் விளக்கப்படம் மற்றும் சோதனை எந்திரம்

ஆராய்ச்சியின் விளக்கப்படம் மற்றும் சோதனை எந்திரம்

அதாவது இந்த ஆராய்ச்சியின்படி புவி ஈர்ப்பு விசை முற்றிலும் அற்ற/மிக மிக குறைவான சூழ்நிலையில் பாலூட்டிகளின்(எலி/மேமல்ஸ்) முட்டை குழந்தைப்பேறுக்கு சாதகமாக இல்லை(50% குறைவு) என்று கண்டறிந்தனர்.மனிதனும் (எலி/மேமல்ஸ்) எனும் குடும்பத்தைச் சேர்ந்த உயிரினம் என்பதால் மனித முட்டைக்கும் இதே கதிதான் என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

மெற்கூறிய இந்த ஆராய்ச்சியின் ஆசிரியர்கள் கூறுகையில் ஆரோக்கியமான மனித முட்டை நன்கு வளர(குழந்தைப் பருவம் எட்ட) எவ்வளவு புவி ஈர்ப்பு விசை தேவைப்படும் என்பதை கணித்தோமானால் விண்வெளியில் குழந்தை பிறப்பு எந்த அளவு சாத்தியம் என்பதை கணிக்க முடியும் என்கின்றனர்!

இதைப் படித்துவிட்டு…..”ஐய்யைய்யோ…..போச்சு! என் ஆசை மொத்தமும் அவ்வளவுதானா? ம்ம்ம்….கஷ்டகாலம், இங்கதான்(பூமி) இம்சை தாங்கலன்னு பார்த்தா அங்கயுமா??” என புலம்ப ஆரம்பித்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

இந்த செய்தியை பற்றி மேலும் விரிவாக படிக்க இங்கு அழுத்துங்கள்.

கவலைப்படாதீர்கள்…..விரைவில் இதைப்பற்றிய இன்னொரு நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்!

நன்றி.மீண்டும் வாருங்கள்!

Advertisements